சனி, அக்டோபர் 13, 2012

அண்ணலார் நபி (ஸல்) அவர்களின் அற்புதமான பொன்மொழிகள் !

அண்ணலார் நபி (ஸல்) அவர்களின் அற்புதமான பொன்மொழிகள் !
அனாதைகளை ஆதரிபோரின் சிறப்பு :
சஹ்ல் பின் சஃது (ரலி) அறிவிகிறார்கள் :நானும் ,அனாதையை ஆதரித்து பொறுப்பேற்று வர்லர்த்து வரும் சுவர்கத்தில் இவ்வாறு இருப்போம் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு தங்களது ஆட்காட்டி (கலிமா) விரலையும்,நாடு விரலையும் சற்று விரித்தவர்களாக சுட்டிக் காட்டினார்கள் .
ஆதாரம்: நூல் புகாரி )
பெண்பிள்ளைகளைப் பேணி வளர்பவரின் மாண்பு :
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிகிறார்கள் :யார் தம் பெண் பிள்ளைகளை அவர்கள் பருவமெய்தும் வரை நன்கு பரிபாலித்து நல்லொழுக்க படுத்துகிறாரோ ,அவர் கியாமத் நாளில் வருவார் ,அவரும் நானும் இவ்வாறு இருப்போம் எனக்கூறி அண்ணல் நபி(ஸல்) தங்கள் விரல்களை இணைத்து காண்பித்தார்கள் .ஆதாரம் முஸ்லிம்)
அன்னை ஆய்ஷா(ரலி) கூறுகிறார்கள் :என்னிடம் தன் இருபெண் பிள்ளைகளைச் சுமந்தவளாக ஒரு ஏழைப் பெண்மணி வந்தாள் .அவளுக்கு நான் மூன்று பேரீத்தம் பழங்களைக் கொடுத்தேன் .அதனை அப்பெண்மணி தன் இரு பெண்பிள்ளைகளுக்கும் ஒவ்வொன்றாக கொடுத்துவிட்டு ,தான் உண்பதற்காக ஒரு பழத்தை தன் வாயின் பக்கம் உயர்த்தினாள் .அதற்குள்ளாக அவ்விரு பெண்பிள்ளைகளும் அப்பழத்தை உண்ணக் கேட்டனர் .உடனே அப்பெண்மணி ,தான் உண்ண விரும்பிய அப்பழத்தை இரண்டாக பிளந்து அவ்விரு பெண்பிள்ளைகளுக்கும் கொடுத்தாள் .அப்பெண்மணியின் செயல் என்னை வியப்பில் ஆழ்த்தியது .நான் இதனை அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன் .அதற்கவர்கள் ,அப்பெண்ணுக்கு இதற்காக சுவனத்தை அல்லாஹ் அவசியமாகிவிட்டான் ;நரகை விட்டும் அப்பெண்மணியை விடுவித்துவிட்டான் எனப் பகர்ந்தார்கள் .ஆதாரம் :முஸ்லிம்)
அல்லாஹ் தஆலா கூறுகிறான் : ..இன்னும் நீங்கள் வெற்றி பெறுவதற்காக நன்மையைச் செய்யுங்கள் ! அல்குரான் 22 :77 )
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிகிறார்கள் :ஒரு முஸ்லிம் ,மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார் .அவர் அவருக்கு அநீதி இழைக்கமாட்டார் .யார் தம் சகோதரின் தேவையில் (தேவையை நிறைவேற்றுவதில்) ஆகிவிடுகிரானோ .அல்லாஹ் அவரின் தேவையில் ஆகிவிடுகிறான்  யார் ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை போக்கி அவரை மகிழ்விப்பான் .அவருக்கு கியாமத் நாளில் கஷ்டங்களில் ஒன்றைப் போக்கி அல்லாஹ் அவரை மகிழ்விப்பான்  யார் முஸ்லிமின் குறைகளை மறைத்தாரோ அவரின் குறைகளை கியாமத் நாளில் அல்லாஹ் மறைப்பான் .ஆதாரம் :புகாரி ,முஸ்லிம்)

ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) அறிவிகிறார்கள் :அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவில நான் செவிமடுத்தேன் .என் உம்மத்தினர்கள் அனைவரும் ஈடேற்றம் பெறுவார் ;(தங்கள் பாவங்களை)பகிரங்கப்படுத்துபவர்களைத் தவிர .ஒரு மனிதர் இரவில் ஒரு (பாவமானா )செயலைச் செய்து விட்டு காலையில் எழுகிறார் .அல்லாஹ் அவரது பாவத்தை மறைத்திருந்தான் .ஆனால் அவர் (மற்றொரு மனிதனிடம்)இன்னாரே !நேற்று இரவு நான் இன்ன இன்ன (பாவங்களை)செய்தேன் என்று கூறுகிறார் .இது பாவங்களை பகிரங்கப்படுத்துவதில் நின்றுமுள்ளதாகும் .அவரது பாவத்தை அவரது இரட்சகன் மறைத்தவராக இரவைக் கழித்தார் .(பின்னர்)பகலில் அவரே அல்லாஹ்வின் திரையை நீக்குபவராக ஆகிவிட்டார் . ஆதாரம்:புகாரி,முஸ்லிம்)www.islam bdmhaja.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!