அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

திங்கள், ஏப்ரல் 01, 2013

பொறுமை ,அவசரபடாமல் இருத்தல் ,மென்மை

பொறுமை ,அவசரபடாமல் இருத்தல் ,மென்மை 

அல்லாஹு தஆலா கூறுகிறான் :
....கோபத்தை மென்று விழுங்குபவர்களும் மக்களை மன்னித்து விடுபவர்களும் -நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கிறான் . அல்குரான் 3:134)

மன்னிப்பை எடுத்துக் கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவிலிகளை புறக்கணிப்பீராக !                                          அல்குரான் 7:199)

நன்மையும் தீமையும் சமமாகாது .அழகானதைக் கொண்டு பதில் கொடுப்பீராக !அப்பொழுது உமக்கும் அவருக்கும் இடையில் விரோதமுள்ளவர் ,நெருங்கிய தோழர் போன்று ஆகிவிடுவார் ;பொறுமை செய்வோரே அதனை பெற்றுக் கொள்வார் ;மக்கத்தான நர்பாகியமுடைய்வரே அதனைப் பெற்று கொள்வார் .  (அல்குரான் 41:34,35

எவரொருவர் பொறுமையை கடைப்பிடித்து,மன்னித்து விட்டாரோ நிச்சயமாக அது காரியங்களில் உறுதியானதாகும் . அல்குரான் 42:43)


ஹதீஸ் :

அண்ணல் நபி (ஸல்) நவின்றதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அறிவிகிறார்கள் : நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன் .எல்லாக் காரியங்களிலும் மென்மையை நேசிக்கிறான் .(புகாரி,முஸ்லிம்)


அண்ணல் நபி(ஸல்) நவின்றதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் :(மக்களிடம்) மென்மையோடு நடந்து கொள்ளுங்கள் !கடினமாக நடந்து கொள்ளாதீர்கள் !நல்வாழ்த்துக் கூறுங்கள்!(அவர்களை)வெறுக்காதீர்கள்! (புகாரி :முஸ்லிம்)

ஹஜ்ரத் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்:நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்துளேன் .அவர்கள் கூறினார்கள் :மென்மையை யார் இழந்து விடுகிறாரோ அவர் அனைத்து நன்மைகளையும் இழந்து விடுவார் .(முஸ்லிம்)

மென்மையை பற்றியும் ,பொறுமையாக இருப்பதை பற்றியும் ;மக்களை மன்னிக்கவும் ,அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்வதை பற்றியும் ,நாம் அல்லாஹ் வின் வசனமூலமாக ,அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் மூலமாக அறியலாம் !ஒருவர் மென்மையை இழந்தார் என்றால் ,அவர் அனைத்து நன்மையையும் இழந்தவர் ஒன்ற ஆவார் .மக்களிடம் கடுமையாக நடக்க கூடாது என்பதை பற்றி இந்த ஹதீஸ் நமக்கு எச்சரிக்கை செய்கிறது ,ஒருவர்கொருவர் சலாம் சொல்ல வேண்டும் ! எல்லோரிடம் நாம் மென்மையாக நடக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கிருபை செய்வானாக ..ஆமீன் ...
வஸ்ஸலாம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!