அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, மே 25, 2013

இறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு

இறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு!


இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் மனமும் சுவையும் உண்டு. அதற்குரிய சுவை மாறி, வேறொரு சுவை வந்துவிட்டால் அப்பொருளின் தன்மை மாறிவிட்டது, அது கெட்டுப் போய்விட்டது என்று அர்த்தமாகிவிடும். அவ்வாறே இறை நம்பிக்கைக்கும் (ஈமானுக்கும்) ஒரு சுவையுண்டு. ஒரு மனமுண்டு. அவை கெட்டுப் போய்விட்டால் அது கெட்டுப் போய்விடும்.
சுவை, ருசி மாறுபடுவதை வைத்து பொருள் கெட்டுப் போய்விட்டதை உணர்கிறோம். கெட்டுப் போன, புளித்துப்போன பொருளை நாக்கில் வைத்தவுடன், முகம் சுளித்து, உடலில் நடுக்கம் உண்டாகிறது. அவ்வாறே ஒருவரது இறை நம்பிக்கை (ஈமான்) கெட்டுப் போய்விட்டால் அவரது சொல், செயல்களில் மாற்றம் உண்டாகிவிடும். முதலில் அவரது உள்ளத்தில்,  மாற்றம் ஏற்பட்டுவிடும். அவரது நோக்கமும் மாறிவிடும்.
எவர் எல்லா அம்சங்களிலும், இறைபொருத்தத்தை நோக்கமாக கொண்டாரோ அவரது இறைநம்பிக்கை கெட்டுப் போகவில்லை. அவர் அதன் சுவையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகிவிடும். இதைத்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வை இரட்சகனாகவும் இஸ்லாமை மார்க்கமாகவும் முஹம்மதை தூதராகவும் ஏற்றுக் கொண்டவர் இறைநம்பிக்கையின் சுவையை ருசித்தவராவார். (முஸ்லிம்)
ஒருவர் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது. மாறாக அவனை இரட்சகனாகவும் (ரப்பாகவும்) ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
ரப்பு என்றால் ஒரு பொருளை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து, பராமரிப்பதற்குச் சொல் லப்படும். பெற்றோர்கள் பிள்ளைகளை பராமரித்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ப்பதால் அவர்களுக்கும் ரப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
“”என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்புடன்) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் (பெற்றோர்) மீதும் அன்பும் அருளும் புரிவாயாக என்று கூறுவீராக!” (அல்குர்ஆன் 17:24)
பெற்றோர் பிள்ளைகளை வளர்ப்பதும் எஜமான் அடிமைகளை வளர்ப்பதும் தர்பிய்யத் (வளர்த்து பராமரித்தல்) எனப்படும். ஆனால் அவை அனைத் தும் அல்லாஹ்வின் உதவி, உபகாரம் இல்லாமல் முடியாது. அல்லாஹ் ஒன்றைப் பராமரிப்பதற்கு எப்பொருளின் பக்கமும் எவ்வித தேவையுமிருக்காது. மேலும் அவன் ஒரு பொருளை இல்லாமையிலிருந்து உருவாக்குபவன். குறிப்பிட்டவைகளை மட்டும் அவன் பராமரிக்க வில்லை. மாறாக உலகம், உலகிலுள்ள அனைத்தையும் பராமரிக்கிறான்.
மூஸா (அலை) அவர்கள், ஹாரூண் (அலை) அவர்களுடன் ஃபிர்அவ்னிடம் சென்று நாங்களிருவரும் அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனின் தூதர்களாவோம் என்று கூறியபோது, அகிலத்தாரின் இரட்சகன் யார்? என்று ஃபிர்அவ்ன் கேட்டான். அதற்கு மூஸா (அலை) அவர்கள், அகிலத்தாரின் இரட்சகன் (ரப்புல் ஆலமீன்) என்பதற்கு இவ்வாறு விளக்கமளித்தார்கள்.
வானங்களையும் பூமியையும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் படைத்து வளர்ப்பவன் தான் ….
அவன் உங்களின் இரட்சகன், முன் சென்ற உங்கள் மூதாதையரின் இரட்சகன் …
அவனே கிழக்கு, மேற்கிற்கும் அவ்விரண்டிற்கு மிடையே இருப்பவற்றிற்கும் இரட்சகனாவான்… (அல்குர்ஆன் 26:23-28)
எனவே அல்லாஹ்வை ரப்பாக ஏற்றுக் கொள்வதென்பது, அவனே படைத்து, பராமரித்து, நிர்வகித்துக் கொண்டிருக்கிறான். அதில் அவன் தனித் தவன். எனவே அவன் மீது மட்டுமே நம்பிக்கை வைக்கவேண்டும். அவனிடமே உதவிதேட வேண்டும். அவனது கட்டளைகளையும் அவனது முடிவையும் அவனது தீர்ப்பையும் மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதேயாகும்.
முஹம்மது (ஸல்) அவர்களை நபியாக, இறைத்தூதராக ஏற்றுக் கொண்டதின் அர்த்தம், அவர்களின் சொல்லுக்கு முற்றிலும் கட்டுப்பட வேண் டும். வழிபடவேண்டும். அதற்கு எவ்விதத்திலும் மாற்றம் செய்துவிடக் கூடாது. அவர்களின் கட்டளைகள், முடிவுகளை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதேயாகும்.
“”உங்கள் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உங்களை நீதிபதியாக நியமித்து, நீங்கள் செய்யும் தீர்ப்பை தங் கள் மனதில் எத்தகைய அதிருப் தியுமின்றி முற்றிலும் ஏற்காத வரையில் அவர்கள் (உண்மை) நம்பிக்கை யாளர்களாக மாட்டார்கள்”. (அல்குர்ஆன் 4:65)
இஸ்லாமை மார்க்கமாக ஏற்றுக் கொள்வதென்பது, இஸ்லாமிய சட்டத்தில் ஒரு வி­யம் கூடும் என்றோ, அல்லது கூடாது என்றோ வந்துவிட்டால் அதை மறுபரிசீலனை செய்யக்கூடாது. மனமுவந்து ஏற்றுக் கொண்டாகவேண்டும். அது நம் மனதிற்கு பிடித்தமானதாக இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரியே!
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் அவனது மார்க்கத்தையும் ஏற்றுக் கொண்டேன் என்ற வாதத்திற்கு ஆதாரமே செயல்வடிவில் அதன்படி வாழ்ந்து காட்டுவதுதான். எனவே தான் எல்லா நபிமார்களும் வாழ்ந்து காட்டி மக்களுக்கு அழகிய முன்னுதாரணமாகத் திகழ்ந்தனர். அவ்வாறே முஹம் மது நபி (ஸல்) அவர்களும் அண்ணலாரின் தோழர்களும் அல்லாஹ்வின் ரிழாவை (திருப்தியைப்) பெறுவதற்காக வாழ்ந்து காட்டினர்.
“”முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய திருத்தூதராவார்கள். (அவரும்) அவருடன் இருப்பவர்களும் நிராகரிப்பவர்கள் வி­யத்தில் கண்டிப்பானவர்களாகவும் தங்களுக்குள் மிக்க அன்புடையவர்களாகவும் இருப்பார்கள். அதிகம் குனிந்து சிரம் பணிந்து வணங்குபவர்களாக அவர்களை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ்வின் அருளையும் அவனுடைய திருப்பொருத்தத்தையும் (எந்த நேரமும்) விரும்பியவர்களாக இருப்பார்கள் அவர்களுடைய அடையாளமாவது, அவர்களின் முகங் களில் சிரம்பணிந்ததின் அடையாளமிருக்கும். இதுவே தவ்றாத் வேதத்திலுள்ள அவர்களின் வர்ணிப்பாகும்”. (அல்குர்ஆன் 48:29)
இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இவ்வசனத்தில் அல்லாஹ்வின் பொருத்தத்தை பெறுவதற்காக அதிகம் தொழுவார்கள் என்று நபித்தோழர்கள் பற்றி வர்ணிக்கப்பட்டுள்ளது. நற்செயல்களில் மிகச் சிறந்த ஒன்றை வாழ்வில் அதிகம் கடைப்பிடிப்பவரிடம் மற்ற அம்சங்கள் இல்லாமலிருக்காது.
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மார்க்கத் தையும் பொருந்திக் கொண்டேன் என மனதிலோ,  நாவிலோ இருந்தால் மட்டும் போதாது. மாறாக வாழ்வின் எல்லா அம்சங்களிலும் அந்த தன்மை, அந்த நோக்கம் இருக்கவேண்டும் என்பதற் காகவே நபி (ஸல்) அவர்கள் பல வி­யங்களில் அதைக் குறிப் பிட்டுச் சொல்லியுள்ளார்கள்.
அல்லாஹ் உங்களிடம் மூன்று வி­யங்களை திருப்திக் கொள்கிறான். மூன்று வி­யங்களை வெறுக்கிறான் 1. அவனை மட்டுமே நீங்கள் வணங்க வேண்டும். 2. அவனுக்கு எதையும் இணை வைக்கக் கூடாது, 3. நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றை (வேதத்தை) பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.  நீங்கள் பிரிந்து விடக்கூடாது இவற்றை உங்களிடமிருந்து திருப்திகொள்கிறான்.
1. (இவ்வாறுதான்) பேசப்பட்டது. (இவ்வாறு) அவர் சொன்னார் என்று வதந்திகளைப் பரப்புவது. 2. அதிகமாகக் கேள்வி கேட்பது, 3. செல்வத்தை வீணடிப்பது ஆகிய மூன்றை உங்களிடம் வெறுக்கி றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
இறைநம்பிக்கையிலும் தொழுகை, நோன்பு போன்ற எல்லா வணக்க வழிபாடுகளிலும் அல்லாஹ் பொருந்திக் கொள்ளும் விதத்திலேயே நிறைவேற்ற வேண்டும். அல்லாஹ்வுக்காக எனும் தூய எண்ணம் இருக்கவேண்டும்.
ஆரம்ப நேரத்தில் தொழுவது அல்லாஹ்வுக்கு விருப்பமானதாகும். கடைசி நேரம் அவனால் மன்னிக்கப்பட்டதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் தொழுகையைப் பற்றிக் கூறினார்கள். (பதிவு: திர்மிதீ)
நோன்பைப் பற்றி கூறும் போது, எனது திருப்திக் காகவே எனது அடியான் தனது ஆசை களையும் உணவு, குடிப்பையும் விட்டுவிட்டான். நோன்பு எனக்காகவே வைக்கப்பட்டுள்ளது. நானே அதற்கு நற்கூலி வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுவதாக மொழிந்தார்கள் நபிகளார். (பதிவு: முஸ்லிம்)
உணவு, குடிப்பிலும் அல்லாஹ்வின் பொருத்தத் தைத் தேடவேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:- உணவை உண்டு விட்டு, அதற்காக அல்லாஹ்வைப் புகழக்கூடிய, பானத்தைப் பருகிவிட்டு, அதற்காகவும் அல்லாஹ்வைப் புகழக்கூடிய அடியானைக் கண்டு, அல்லாஹ் திருப்தியடைகிறான். (பதிவு: முஸ்லிம்)
அல்லாஹ்வின் திருப்தியைக் குறிக்கோளாக கொண்டு வாழும் அடியானின் நாவில் எப்போதும் அழகிய வார்த்தைகளே வெளியாகும். அது நற் குணத்தின் அடையாளமாகும்.
ஒரு அடியான் தன்னையறியாமலேயே அல்லாஹ் வுக்கு விருப்பமான வார்த்தைகளைப் பேசிவிடுகிறான். அதன் காரணமாக அவனுக்கு அல்லாஹ் பல படித்தரங்களை மறுமையில் உயர்த்துகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பதிவு: புகாரி)
மனிதர்கள் அனைவரிடமும் அழகிய வார்த்தை களிலேயே பேசவேண்டும். இருப்பினும் பெற்றோர் களிடம் மிகுந்த மரியாதையுடனும் பேசவேண்டும். ஏனெனில் அவர்கள் நம்மீது திருப்தியடைந்தால்தான் அல்லாஹ்வின் திருப்தி கிடைக்கும்.
அல்லாஹ்வின் திருப்தி, தந்தையின் திருப்தியில் உள்ளது. அல்லாஹ்வின் அதிருப்தி, தந்தையின் அதிருப்தியில் உள்ளது என்று பெருமானர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பதிவு: திர்மிதீ)
பெற்றோர்களின் உரிமையை, தனது உரிமையோடு சேர்த்து  அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். அவனை யன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம் இறைவன் விதித்திருக்கிறான். (அல்குர்ஆன் 17:23)
எனவே அல்லாஹ்வை இரட்சகனாகவும் இஸ் லாமை மார்க்கமாகவும் முஹம்மது (ஸல்) அவர்களை இறைத்தூத ராகவும் ஏற்றுக் கொள்வ தென்பது மனதளவில், நாவளவில் மட்டும் இருக்கக்கூடாது. மாறாக, நம் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் அதைக் கடைப் பிடிக்கவேண்டும். அப்போது தான் அவன் நம்மை பொருந்திக் கொள்வான். நாமும் அவனைப் பொருந்திக் கொண்டதாக ஆகும்.
- ஹாபிழ் முஹ்யித்தீன் யூஸஃபி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!