அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

திங்கள், ஜூலை 01, 2013

பெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்புபிஸ்மில்லாஹ் ..
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
நன்நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக நீங்கள் அனைவரும் தவ்பா செய்து அல்லாஹ்வின் பால் மீளுங்கள்!  (அல்குர்ஆன்  24:31)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: யார் தம் இரு பெண் பிள்ளைகளை அவர்கள் பருவமெய்தும் வரை நன்கு பரிபாலித்து நல்லொழுக்கப்படுத்துகிறாரோ , அவர் கியாமத் நாளில் வருவார் ; அவரும் நானும் இவ்வாறு இருப்போம் எனக் கூறி அண்ணல் நபி (ஸல்) தங்கள் விரல்களை இணைத்துக் காண்பித்தார்கள். (முஸ்லிம்)

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்: என்னிடம் ஒரு பெண்மணி யாசகம் கேட்டு வந்தாள்  ,அவளுடன் அவளது இரு பெண்பிள்ளைகளும் இருந்தார்கள் . அப்பொழுது  என்னிடம் ஒரு பேரீத்தம் பழம் மட்டுமே இருந்தது .அதனை நான் அப்பெண்மணிக்கு  கொடுத்தேன் . அதனைத் தன் இரு பெண்பிள்ளைகளுக் பங்கு வைத்துக் கொடுத்தாள்  . தான் எதுவும் உண்ணவில்லை ; பின்னர் எழுந்து சென்றுவிட்டாள்  . பிறகு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்த பொழுது இந்நிகழ்ச்சியை நான் அவர்களிடம் கூறினேன் . அப்பொழுது அவர்கள் கூறினார்கள்: யார் இப்பெண்பிள்ளைகளால் (கஷ்டங்களில் நின்றும்) ஏதாவதொரு விஷயத்தைக் கொண்டு சோதிக்கப்பட்டு, அவர் அப்பெண்பிள்ளைகளுக்கு உபகாரம் செய்கிறாரோ அவருக்கு அப்பெண்பிள்ளைகள் நரகை விட்டுத் தடுக்கும் திரையாக ஆகிவிடுவர் . (புகாரி, முஸ்லிம்)

அல்லாஹு தஆலா கூறுகிறான் :

நன்நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சவேண்டிய முறையில் அஞ்சுங்கள்  . அல்குர்ஆன்  4:102)

.....யார் அல்லாஹ்வை அஞ்சுகிறாரோ , அல்லாஹ் அவருக்கு (இம்மை மறுமையின் கஷ்ட்டங்களை விட்டு) வெளியாகுமிடத்தை ஆக்குவான் . அவர் எண்ணிப்பாராத இடத்திலிருந்து அவருக்கு ரிஜ்கு -உணவளிப்பான் .(அல்குர்ஆன்  65:2,3)

யாராகிலும் இருப்பினும் நிச்சயமாக இம்மை ,மறுமை கஷ்ட்டத்தை விட்டு வெளியாக வேண்டும் என்று நினைப்பார்கள்  . எந்த சிரமமும் இல்லாமல் உணவு எளிதாக  கிடைக்க வேண்டும் என்று ஆசை கொள்வார்கள்! அல்லாஹு தஆலா மேலே உள்ள வசனத்தில் ரொம்ப தெள்ள தெளிவாக கூறி இருக்கிறான் !  இந்த ஒரு வசனம் போதும்  நமக்கு ! அல்ஹம்துலில்லாஹ் !!!

இன்று நம் சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்பதை சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி பேணி வளர்த்து வருகிறார்கள்  (சிலரை தவிர )  ? , ? கேளிவி குறியாகத்தான் இருக்கிறது  ? நல்ல ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக வளர்த்து வருகிறார்களா ? இஸ்லாமிய கலாச்சாரத்துடன்  வளர்ந்து வருகிறார்களா பெண்பிள்ளைகளும் ,ஆண்பிள்ளைகளும்  ? மேலே உள்ள ஹதீஸ்க்கு மாற்றமாக தான் இருக்கிறது என்பது எதார்த்த உண்மை!

பெறோர்களை மதிக்காத பிள்ளைகள் , பிள்ளைகள் மீது அக்கறையும் , கவனமும் இஸ்லாத்தின் மீதும் ஆர்வம் இல்லாத  பெற்றோர்கள் . இன்று சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளையினால்  ரொம்ப தலைகுனிவுக்கு ஆளாகிவிட்டார்கள் ! இதற்க்கு காரணம்  ,இவர்களும் அல்லாஹ்வை அஞ்சவில்லை ,நல்ல முறையில் பிள்ளைகளை  (இஸ்லாமிய முறைப்படி) வளர்க்கவுமில்லை , பிள்ளைகளும் நல்ல சூழ்நிலையில் வளரவுமில்லை  , இஸ்லாமிய கல்வியை கற்க ஆர்வமுமில்லை  . அவர்களுக்கு ஒரே ஒரு குறிக்கோள் அதிகமாக படிக்க வேண்டும்  நிறைய degree  வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காலத்தை கடத்தி கொண்டு வருகிறார்கள் !

எதிர்காலம் எப்படி அமையும் ? எப்படி அமைய வேண்டும் என்று இன்றை பெற்றோர்கள் தீர்மானிகிறார்கள்  ! கனவும் காண்கிறார்கள் தங்கள் பிள்ளைகளை நினைத்து !

எதிர்காலம் பற்றி மிகவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே! அவன்தான் அமைகிறான்  , அவன்தான் அனைத்தையும் ஆளுகிறான் ! அவனே மிகவும் அறிந்தவனாக இருக்கிறான்.

பெற்றோர்களே ! பிள்ளைகளே! எது வேண்டும் ? இம்மையா ? அல்லது மறுமையா ? நல்ல பிள்ளைகள் வேண்டுமா ? அநாகரிகமான பிள்ளைகள் வேண்டுமா ? பெற்றோர்கள் அன்பு முக்கியமா , அல்லது காதலர்களின் பொய்யான அன்பு  வேண்டுமா ? நீங்கள் தான் தீர்மானிப்பது ! முடிவு அல்லாஹ்வின் கரத்தில் உள்ளது. வஸ்ஸலாம் ...             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!