அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

செவ்வாய், ஜூன் 11, 2013

திக்ருகலிலெல்லாம் மேலான திக்ரு !

திக்ருகலிலெல்லாம் மேலான திக்ரு !


அல்லாஹு தஆலா கூறுகிறான்:

நபியே) உம் மனத்திற்குள் பணிவோடும் அச்சத்தோடும், சொல்லில் சப்தமின்றி ,காலையிலும்  ,மாலையிலும் உம்முடைய இரட்சகனை நீர் திக்ரு செய்வீராக! மறதியாளர்களில்  உள்ளவராக நீர் ஆக வேண்டாம் .அல்குர் ஆன் 7:205)

ஜாபிர் (ரலி) கூறுகிறார்கள் :நான் நபி (ஸல்) அவர்கள் கூறச் செவிமடுத்துள்ளேன்: திக்ருகளில் மிக மேலானது  ,, லா இலாஹ இல்லல்லாஹு ,, என்ற திக்ராகும்.

                               (திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அறிவிக்கிறார்கள்: தம் ரப்பை திக்ரு செய்பவருக்கும், திக்ரு செய்யாதாவருக்கும் உதாரணமாகிறது ,உயிருள்ளவர் ,மரணித்தவர்  போன்றாகும் .(திக்ரு செய்பவர் உயிருள்ளவர் போன்றாவார் ,திக்ரு செய்யாதவர் மரணித்தவர் போன்றாவார் )

                             புகாரி)
முஸ்லிமின் அறிவிப்பில் ,அல்லாஹ்வை திக்ரு செய்யப்படும் வீட்டுக்கும் திக்ரு செய்யபடாத வீட்டுக்கும் உதாரணமாகிறது  ,உயிருள்ளது ,மரணித்தது  போன்றாகும்  என அறிவிக்கப்படுள்ளது .

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஜாபிர்  (ரலி) அறிவிக்கிறார்கள் : யார் ஸுப்ஹானல்லாஹி  வபிஹம்திஹி--அல்லாஹ்வை  புகழ்வதுடன் அவனைத் தூய்மையானவன் -எனப் போற்றுகிறேன் என்று கூறுவாரேயானால் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு பேரீத்தம் பழ  மரம் நடப்படும்.           (திர்மிதி)அல்லாஹ்வை எந்த நேரமும் ,நின்றும் ,அமர்ந்தும் ,படுத்திருக்கும் பொழுதும் ,ஒலுவில்லாமல்  இருக்கும் பொழுதும் ,குளிப்பு கடமையானவரும் மாதவிடாய் உள்ள பெண்ணும் (அனைத்து நிலைகளிலும் )அல்லாஹ்வை திக்ரு செய்தல் ; குளிப்பு கடமையானவர் ,மாதவிடாய் உள்ள பெண்மணி ஆகியோர் குர்ஆன் ஓதுதல் கூடாது.திக்ரு செய்வதின் சிறப்பைப் பற்றி இன்னும் நிறைய ஹதீஸ்கள் உள்ளன ..

இவைகள் சுர்க்கமான முறையில் தரப்பட்டுள்ளது.

அல்லாஹ் நம் அனைவருக்கும் திக்ரு செய்யும் கூட்டத்தில் ஆக்குவானாக !ஆமீன்.........  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!