அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

திங்கள், ஜூலை 01, 2013

ஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் !!!!

நபியவர்கள் நவின்றதாக அபூ ஸயீது (ரலி) ,அபூ ஹுர்ரைரா (ரலி) ஆகிய இரு நபித் தோழர்களும் அறிவிக்கிறார்கள் : ஒரு முஸ்லிமை வந்தடையும் கஷ்ட்டம் , நோய் ,கவலை ,நோவினை ,துக்கம்-அவரது காலில் குத்திவிடும் முள்ளின் வேதனை வரை -அவை அனைத்துக் கொண்டும் அவர் பிழைகளை அல்லாஹ் அழித்தே தவிர வேறில்லை  .ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் :அல்லாஹ் எவருக்கு நலவை நாடுகிறானோ அவரை அவன் சோதிக்கிறான்.
 ஆதாரம்: புகாரி)


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் : ,, உங்களில் ஒருவர் தமக்கு ஏற்பட்டுவிட்ட கஷ்ட்டதிர்க்காக மரணத்தை ஆசைப்பட வேண்டாம்!  (ஒரு வேலை)அவர் அதனை ஆசைப்பாடுபவராகவே இருந்தால் இவ்வாறு கூறட்டும்: இறைவா! எனது வாழ்வு எனக்கு நன்மையானதாக இருந்தால் என்னை நீ வாழச் செய்வாயாக! (அல்லது) எனது மரணம் எனக்கு நன்மையானதாக இருந்தால் என்னை நீ மரணிக்கச் செய்வாயாக! ,,(ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

அண்ணல் நபி (ஸல்) நவின்றதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் தன் அடியானுக்கு நன்மையை நாடுவாநேயானால் (அவன் செய்த பாவத்துக்குரிய )தண்டனையை உலகிலே விரைவு படுத்திவிடுவான் .அல்லாஹ் தன் அடியானைக் கொண்டு தீமையை நாடுவாநேயானால் அவனது  பாவத்தைக் கொண்டு அவனுக்கு (உலகில் வேதனை தராமல்) தடுத்து கொள்வான் . கியாமத் நாளில் அவனது பாவத்துக்குரிய தண்டனையைத் தருவான்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மாபெரும் நற்கூலி, மாபெரும் கஷ்ட்டத்துடன் உள்ளது . நிச்சயமாக அல்லாஹ் ஒரு கூட்டத்தாரை நேசித்தால் அவர்களை சோதிப்பான் .(அந்நிலையிலும்) யார் (அல்லாஹ்வை) பொருந்திக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் பொருத்தம் உள்ளது . யார் (அல்லாஹ்வை பொருந்திக் கொள்ளாத ) கோபிக்கிராரோ அவருக்கு அல்லாஹ்வின் கோபம் உள்ளது.  ஆதாரம் : திர்மிதி)

அண்ணல் நபி (ஸல்) நவின்றதாக ஹஜ்ரத் அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: மல்யுத்தம் புரிபவர் (மா)வீரரல்ல ; (மாறாக ) கோபத்தின் பொழுது தம்மை அடக்கிக் கொள்கிரவரே (மா) வீரர் ஆவார் . ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

அண்ணல் நபி (ஸல்) நவின்றதாக ஹஜ்ரத் முஆது பின் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: யார் கோபத்தைப் பிரயோகிக்க சக்தி பெற்றிருந்தும்; கோபத்தை அடக்கியாள்கிராரோ  அவரை அல்லாஹ்  கியாமத் நாளில் மக்களின் முன்னிலையில் அழைத்து கண்ணியப்படுத்துவான் (எந்த அளவிற்கென்றால்) ,,ஹுருள்ஈன் ,, எனும் சுவர்க்கக் கன்னிப் பெண்களில் அவர் விரும்புவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு அவருக்கு அல்லாஹ் கூறுவான்.
ஆதாரம்: அபூதாவூது ,திர்மிதி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: முஃமினான ஆண் , பெண்களுக்கு சோதனை இருந்து கொண்டுதானிருக்கும். அவரது  விஷயத்திலும் , அவரது பிள்ளைகள் , பொருள்கள் விஷயத்திலும்  (சோதனை தொடரும்) எது வரையெனில் அவர் தம் இரட்சகனை எந்தத் தவறும் இலாத நிலையில் (பரிசுத்தமாக ) சந்திக்கும் வரை. (சோதனை கஷ்ட்டங்களில் பொறுமை செய்ததின் காரணமாக அல்லாஹ் அவர் பிழைகள் அனைத்தையும் முன்னதாகவே மன்னித்து விடுவான்  .ஆகவே கியாமத் நாளில் பாவமற்ற பரிசுத்த நிலையில் அவர் தம் ரப்பைச்  சந்திப்பார்.)
 ஆதாரம்: திர்மிதி)

ஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் !!!!    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!