அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

செவ்வாய், ஜூலை 02, 2013

ஒரு அழகிய உபதேசம் !

ஒரு அழகிய உபதேசம் !

அண்டை வீட்டாரின் உரிமைகளும் நலம் நாடுதலும் :
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
அல்லாஹ்வை வணங்குங்கள் ! அவனுக்கு எப்பொருளையும் இணைவைக்காதீர்கள்!  தாய் தந்தையர்க்கும் ,உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் , உறவினரான அண்டை வீட்டார்களுக்கும் ,உறவினரல்லாத அண்டை வீட்டார்களுக்கும், (தொழில் ,பிரயாணத்தில்) கூட்டாளிகளாக இருப்பவருக்கும் , வழிப் போக்கருக்கும் , உங்கள் வலக்கரங்கள் சொந்த்தமாக்கிக் கொண்டவர்களுக்கும் உபகாரம் செய்யுங்கள்!... (அல்குர்ஆன் 4:36)

ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ,ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) பகர்ந்தார்கள்: அண்டை வீட்டுக்காரரை எங்கு வாரிசாக ஆக்கி விடுவாரோ என்று நான் பயப்படுமளவு அண்டை வீட்டாரின் நலன்களைப் பேணுவதைப் பற்றி ஹஜ்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் (தொடர்ந்து) எனக்கு உபதேசம் செய்து கொண்டேயிருந்தார்கள் .


(புகாரி, முஸ்லிம்)

ஹஜ்ரத் அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள் : அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (எனக்குக்) கூறினார்கள் : அபூதர்ரே ! நீர் குழம்பை (சால்னாவை) சமைத்தால் அதில் தண்ணீரை அதிகபடுத்துவீராக! அதனைக் கொண்டு உம் அண்டை வீட்டுக்காரர்களைக் கவனித்துக் கொள்வீராக! (முஸ்லிம்)

ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்)அவர்கள் பகர்ந்தார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக ! அவன் ஈமான் கொண்டவனல்ல :அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொண்டவனல்ல: அல்லாஹ் மீது ஆணையாக ! அவன் ஈமான் கொண்டவன் அல்ல ;
அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம்  ,, யார் ஈமான் கொண்டவனல்ல? என்று வினவப்பட்டது . அதற்க்கு அண்ணல் நபி (ஸல்)  ,, எவனின் தீங்குகளை விட்டும் அண்டை வீட்டார்கள் அச்சம் தீரவில்லையோ அவன்தான் ,, எனப் பகர்ந்தார்கள் . (புகாரி, முஸ்லிம்)

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது :
(அண்ணலார் கூறினார்கள் ) எவனின் தீங்குகளை விட்டும் அண்டை வீட்டுக்காரர்களுக்கு அச்சம் தீரவில்லையோ அவன் சுவர்க்கத்தில் நுழையமாட்டான்.

அல்லாஹ் நம் அனைவரையும் அதை விட்டு பாதுகாப்பானாக! ஆமீன்...

ஹஜ்ரத் அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) கூறினார்கள் : முஸ்லிம் பெண்களே! எந்தவொரு அண்டை வீட்டுக்காரப் பெண்ணும் மற்றொரு அண்டை வீட்டுக்காரப் பெண்ணை இழிவாகக் கருதவேண்டாம். ஓர் ஆட்டின் குளம்பை கொண்டாயினும் சரியே (ஆட்டுகாளின் குளம்பு வழங்குவது கொண்டாவது ஒரு பெண் தம் அண்டை வீட்டுக்காரப் பெண்ணைக் கண்ணியப்படுத்தட்டும் ) (புகாரி, முஸ்லிம்)

அண்ணல் நபி (ஸல்) நவின்றதாக ஹஜ்ரத் அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வையும் ,மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் ,தம் அண்டை வீட்டாருக்கு வதனை தரமாட்டார் . அல்லாஹ்வையும் ,மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியபடுத்துவார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும் அல்லது வாய்மூடி இருக்கட்டும். (புகாரி; முஸ்லிம்)

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்: நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம்  ,, யா ரசூலல்லாஹ் ! எனக்கு இரண்டு அண்டை வீட்டுக்காரர்கள் உள்ளனர் ; அவர்களில் யாருக்கு நான் என் அன்பளிப்பைக் கொடுப்பது என்று கேட்டேன் அதற்க்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் , ,, அவ்விருவரில் யாருடைய தலைவாயில் உனக்கு நெருக்கமாக உள்ளதோ அவருக்கு (அன்பளிப்பைச் செய்வாயாக!) ,, எனப்பகர்ந்தார்கள். புகாரி)

அண்ணல் நபி (ஸல்) நவின்றதாக அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அறிவிக்கிறார்கள்: தம் தோழர்களிடம் சிறந்தவரே அல்லாஹ்விடம் சிறந்தவர் ஆவார். தம் அண்டை வீட்டுக்கார்களுக்குச் சிறந்தவரே அல்லாஹ்விடம் சிறந்தவர் ஆவார் . (திர்மிதி)

அண்டை வீட்டாரின் நலன்கள் பற்றி இன்னும் நிறைய ஹதீஸ்கள் உள்ளன .
நம்மில் சிலர் அறிந்தோ அல்லது அறியாமலோ  அண்டை வீட்டார்களுக்கு சில தொல்லைகள்  தருவது , ஒரு சிறிய இடத்துக்காக் சண்டை பிடிப்பது இன்னும் நடந்தது கொண்டுதான் இருக்கிறது  என்பது எதார்த்த உண்மை என்று  கூற முடியும்! இந்த ஹதீஸை படித்து தெரிந்த பிறகும் நம்மில் சிலர் அப்படி செய்தால் என்ன விளைவு என்று  (தீமைகள் கிடைக்கும்) என்பதை உணர வேண்டும்!
அண்டை வீட்டுக்காரர்களிடம் நாம் நல்ல முறையில் நடந்தது கொண்டால் , என்ன நன்மைகள் (பிரதி பலன்கள் ) இம்மையிலும் ,மறுமையிலும் கிடைக்கும் என்பதில் துளிகூட சந்தேகம் இல்லை . அல்லாஹ் நம் அனைவரையும் அண்டை வீட்டார்களுக்கு நலவு மட்டும் நாடகூடிய கூட்டத்தில் சேர்ப்பானாக ! ஆமீன்..

அல்லாஹ் மிகவும் அறிந்தவனாக இருக்கிறான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!