புதன், ஜூலை 31, 2013

இன்றைய பெற்றோர்களின் நிலை ?

இன்றைய பெற்றோர்களின் நிலை ?

இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன் முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ , அ (த்தகைய )வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக ) ஏற்றுக் கொள்ளப்படும். அல்குர்ஆன் : 15:17 வசனம் 19)

அவனையன்றி (வேறு எவரையும் ) நீர் வணங்கலாகாது என்றும் , பெற்றோர்ருக்கு  நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கிறான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால்  , அவர்களை உஃப்  (சீ ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் -அவ்விருவரையும் (உம்மிடமிருந்து) விரட்ட வேண்டாம் -இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! 
இன்னும் இறக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக ; மேலும்  ,, என் இறைவனே ! நான் சிறு பிள்ளையாக இருந்த போது  , என்னை (ப்பரிவோடு ) அவ்விருவரும் வளர்த்தது போல் ; நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக! என்றும் கூறிப் பிரார்த்திப்பீராக!
(பெற்றோர்ரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிளிருப்பதை உங்களுடைய இறைவன்  நன்கு அறிவான் : நீங்கள் ஸாலிஹானவர்கலாக (இறைவன் ஏவலுக்கு  இசைந்து நடப்பவர்களாக ) இருந்ததால் : (உள்ளந்திருந்த்தி உங்களில் எவர் மன்னிப்புக் கோருகிராரோ  அத்தகைய ) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ் ) மிக மன்னிப்பவனாக இருக்கிறான் .
அல்குர்ஆன் : 15:17 வசனம் 23, 24; 25)


அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஒரு அழகிய ஹதீஸின் கருத்து : தாயின் பாதத்தில்  சுவர்க்கம் இருக்கிறது என்று கூறி உள்ளார்கள் !
ஒரு தாயிக்கு பணிவிடை செய்வதின் மூலமாக  நாம் சுவர்க்கத்தை பெற்று கொள்ளாம்  !
எல்லோரும் அறிந்த விடயம்தான்  இது ! இருப்பினும் சிலர் அறிந்து அறியாததை போல   அவர்களின் பெற்றோர்களை நடத்தி வருகிறார்கள் என்பதை சுட்டி காட்டுகிறேன்!

பிள்ளைகளுக்கு தன் பெற்றோர்கள் மீது அக்கறை இல்லை , பிறகு வந்த மருமகள்கள் எங்கே புதிதாக அக்கறை வர போகிறது  ? அந்த மாமியார்களை ஒரு பெண் என்று கூட பார்க்காமல்  , அவர்களை ரொம்ப மோசமாக நடத்திகிறார்கள் .
வயதான பெற்றோர்கள்  அவர்கள் முடியாமல் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல்  இருக்கும் நிலையில் கூட சில மருமகள்கள் அவர்களை அளச்சியப்படுத்திகிரார்கள்  . பிள்ளைகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு  , மனைவி சொல்வதை மட்டும் காது தாழ்த்தி கேடகிறாகள் , ஆனால் தன்னுடை பெற்றோர்களை  பற்றி எந்த அக்கறையும் இல்லாதவன் போல , அவர்களை பற்றி கொஞ்சம் கூட  அன்பு இல்லாதவனை போல இந்த சில பிள்ளைகள் நடந்து வருகிறார்கள் ! இன்று சில குடும்பங்களில் அதிகமாக வயதான பெற்றோர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்  ! சிலர் தனியாக சமைத்து கொண்டு முடிந்ததும் முடியாததுமாய்  செய்து வருகிறார்கள் , நடந்து கொண்டுதான் இருக்கிறது .
பிள்ளைகள் தான்  கவனம் செலுத்த வேண்டும் , அக்கறை காட்ட வேண்டும் , பெற்றோர்களிடம்  அவர்களின் தேவைகள் என்ன என்று அறிந்து கொண்டு செய்ய வேண்டும்  , வந்த மருமகள் அவளுக்கு எந்த கடமையும் இல்லை , மாமியார்களை  கவனித்து கொள்ள வேண்டும் என்று  , கடமை எல்லாம் பிள்ளைகளுக்கும் தான்  இருபினும் மருமகள் நினைக்க வேண்டும் தன்னுடை கணவனின் தாய்  அவளுக்கும் நாம் பணிவிடை செய்தால் அல்லாஹ்வின் அருளும் ,கிருபையும் கிடைக்கும் , கணவனின் திருப்த்தி கிடைக்கும் என்று நினைத்து செய்தால்  , அவள் உண்மையான நல்ல ஸாலிகாண பெண் , மனைவி , மருமகள்.

மாறாக , யாரோ ஒருத்தி என்று நினைத்து எந்த பணிவிடையும் செய்யாமல் , மாமியாரின் மனம்  நொந்து போகும் அளவுக்கு , அந்த மருமகள் நடந்து வந்தால்  , நீர் ஒரு நாள் பிள்ளைகளுக்கு தாயாகவும் , மருமகளுக்கு மாமியாரவும்  ,வயதான  பாட்டியாகவும் வரும் நிலை வரும் ,அப்பொழுது  என்ன ஆகும் என்பதை  சிந்திக்க வேண்டும் ! நீர் நடந்தது போல , உன் மருமகள்கள் உன்னை நடத்துவார்கள் என்பதில் எந்த சந்தேகம் இல்லை .

பிள்ளைகளும் எப்படி தன் பெற்றோர்களை கவனித்து வருகிறார்களோ , அல்லாஹ்  தன் திருமறையில் கூறியது போல : ) அப்படிதான் நீங்களும் நடத்தப்படுவீர்கள் என்பதை உணர்ந்து , உங்கள் பெற்றோர்களை நல்ல விதமாக அன்புடன்  அக்கறையுடன் அவர்கள் உயிருடன் இறுக்கம் போது நல்ல முறையில்  நடந்து , பணிவிடை செய்து வந்தால் , அவர்களுக்கு பிறகு தூஆச் செய்து ஒரு நல்ல ஸாலிகாண பிள்ளைகளாக ஆக வேண்டும்!

பெற்றோர்களின் சிறப்பு பற்றி நிறைய ஹதீஸ்கள் உள்ளன , பெற்றோர்களின் தூஆ நமக்கு வேண்டும்  ! மாறாக , சாபம் வேண்டாம்!

அல்லாஹ் மிகவும் அறிந்தவனாக இருக்கிறான் .        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!