அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, ஆகஸ்ட் 10, 2013

நபிமொழிகள் !

நபிமொழிகள் !


ஹதீஸ் எண் : 54
“யார் மனதில் அணுவளவு பெருமை இருந்ததோ அவர் சுவனம் புகமாட்டார்” என நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
“நிச்சயமாக ஒரு மனிதன் தனது உடை அழகாக இருக்க வேண்டும் எனவும் தனது காலணி அழகாக இருக்க வேண்டுமெனவும் விரும்புகிறார்” (அது பற்றி என்ன?) என ஒரு மனிதர் கேட்டார்.
(அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். (அவன்) அழகானதையே விரும்புகிறான். பெருமை என்பது அகம்பாவம் கொண்டவன் உண்மையை மறுப்பதும், மனிதர்களைக் கேவலமாக (இழிவாக)க் கருதுவதுமாகும் என்றனர்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹ் அன்ஹு

ஹதீஸ் எண் : 26
“நான்கு விஷயங்கள் யாரிடம் இருந்ததோ அவர் கலப்படமற்ற நயவஞ்சகராகிவிட்டார். அவற்றில் ஏதாவது ஒன்று யாரிடம் இருக்கிறதோ, அவர் அதை விட்டு விடும்வரையிலும் நயவஞ்சகத்தில் ஒரு பகுதி அவரிடம் இருக்கும்.
“அவர் பேசினால் பொய்யுரைப்பார். ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வார். வாக்கு கொடுத்தால் மாறி விடுவார். தர்க்கம் செய்தால் உண்மையை மறைக்க முற்பட்டுவிடுவார்.” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆயினும் நிச்சயமாக ஸுப்யானுடைய ஹதீஸில் அவைகளில் ஒரு குணம் அவரி(டத்தி)ல் இருப்பின் நயவஞ்சகத்தின் ஒரு குணமும் அவரிடத்தல் இருக்கும் என வந்துள்ளது.

ஹதீஸ் எண் : 30
“ஈமான் எழுபதுக்கும் மேற்பட்ட அல்லது அறுபதுக்கும் மேற்பட்ட கிளை(களை) உடையதாகும். அவற்றில் மிகச்சிறந்தது ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கூற்றாகும்) அதில் மிகக்குறைந்தது, பாதையை விட்டும் இன்னல் தருவதை அகற்றுவதாகும். வெட்கமும் ஈமானின் ஒரு கிளையாகும் ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹ ு

ஹதீஸ் எண் : 495
நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களின் அன்னையாரின் கப்ரை ஜியாரத்துச் செய்தார்கள். (அப்போது) அவர்கள் அழுதார்கள், அவர்களைச் சுற்றி இருந்தவர்களையும் அழச்செய்தார்கள்! (அதன்பின்)
“எனது இரட்சகனடம் (என் அன்னை) அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்க நான் அனுமதி கோறினேன். எனக்கு அவன் அனுமதி வழங்கவில்லை. அவர்களது கப்ரை காண (சந்திக்க) அனுமதி கேட்டேன், எனக்கு அனுமதியளித்தான். ஆகவே கப்ருகளை ஜியாரத்துச் செய்யுங்கள். நிச்சயமாக அது மரணத்தை நினைவுபடுத்துகிறது” எனக்கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

நன்றி islamsahana .blogspot .com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!