திங்கள், அக்டோபர் 21, 2013

முத்தான முத்துக்கள்

 


முஃமின் என்பவன் நேசத்தின் சிகரமாவான் . மக்களை நேசிக்காதவநிடமும் , மக்களால் நேசிக்கபடாத வநிடமும் எந்த நன்மையும் இல்லை என ரசூல் (ஸல்) கூறினார்கள்
ஆதாரம்: அஹ்மது

தண்ணீர் (பசுமையான ) விளைச்சலை உண்டாகுவது போல் இசை உள்ளத்திலே நயவஞ்சகத்தை உண்டாக்கும் என ரசூல் (ஸல்) கூறினார்கள் . ஆதாரம்: பைஹகீ

உண்மை பேசி நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர் , மறுமை நாளில் , நபிமார்கள் , உண்மையாளர்கள் ஷஹீத்கள் (இறைவழியில் உயிர் தியாகம் செய்தோர்) ஆகியோருடன் இருப்பார்.         ஆதாரம் : திர்மிதி

நயவஞ்சகனின் அடையாளமாகிறது :
1. அவன் பேசினால் பொய் பேசுவான்
2. அவன் வாக்குறுதி செய்தால் அதற்க்கு மாறு செய்வான்
3. அமானிதம் ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான் என ரசூல் (ஸல்) கூறினார்கள்
ஆதாரம்: முஸ்லிம்

இணை வைப்பதும் , தாய்தந்தையர்களுக்கு நோவினை செய்வதும் (நியாயமன்றி ) ஒரு உயிரை கொலை செய்வதும் பொய்ச் சத்தியம் செய்வதும் பெரும் பாவங்கள் என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
ஆதாரம் : புகாரி

நலவு என்பது அழகிய குணமாகும் . பாவம்மென்பது உன் உள்ளத்திள்ளே ஏற்படுகின்ற ஊசலட்டமாகும் .அதை மக்கள் அறிந்துகொள்வதை நீ விரும்பமாட்டாய் என ரசல் (ஸல்) கூறினார்கள் . ஆதாரம் : முஸ்லிம்

இன்ஷாஅல்லாஹ் தொடரும்.....  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!