அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

புதன், அக்டோபர் 23, 2013

தர்கா வழிபாடு

 தர்கா வழிபாடு
இஸ்லாத்தின் அடிப்படை

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர யாரும்மில்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும் .இஸ்லாத்தின் கொள்கை இது தான் என்பதை முஸ்லிம் அல்லாதவர்களும் கூட அறிந்து வைத்துள்ளனர் .

ஆனாலும் தமிழகத்தில் வாழும் கனிசமான முஸ்லிம்கள் இக்கொள்கையைச் சரியாக புரிந்து கொள்ளாதவர்களாக உள்ளனர் .
"வணக்கத்திற்குரியவன்  அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை " என்பதில் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன .
1. அல்லாஹ்வை வணங்க வேண்டும்.
2. அல்லாஹ்வை தவிர எவரையும் வணங்க கூடாது.
இதில் முதலாவது செய்தியை ஓரளவு ஏற்று நடக்கும் முஸ்லிம்கள் இரண்டாவது செய்தியை அறியாதவர்களாக உள்ளனர் .இதன் காரணமாகத் தான் ஒரு பக்கம் அல்லாஹ்வை வணங்கி கொண்டு  இன்னொரு பக்கம் இறந்தவர்களையும் , அவர்களை அடக்கம் செய்துள்ள சமாதிகளையும் மகான்கள் என்று உலா வரும் போலிகளையும் வணங்கி வருகின்றனர் .

இவ்விரண்டு செய்திகளில் இரண்டாவது தான் முக்கியமானதாகும் .இதைச் சொல்வதற்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள் .

அல்லாஹ்வை வணங்குகள் என்று சொல்லித் தருவர்தர்க்காகவோ அல்லாஹ்வின் பண்புகளைச் சொல்லிக் கொடுப்பதர்க்காகவோ மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பபடவில்லை ஏனெனில் அம்மக்கள் அல்லாஹ்வை நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள் . அல்லாஹ்வை வணங்குவதிலும் அவர்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருந்ததில்லை .

அல்லாஹ்வை தவிர எவரையும் எதனையும் வணங்க கூடாது என்பது தான் அவர்களால் எதிர்க்கப்பட்டது .

இது கற்பனை அல்ல , தக்க சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!