அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, அக்டோபர் 26, 2013

உமர் (ரலி) அவர்களின் சிறப்புகள்


 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப் பட்டிருந்தார்கள். அப்போது மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு பிரார்த்திக்கவும் பாராட்டவும் செய்தனர். பிரேதம் எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா தொழுகை) தொழுதனர். அவர்களி டையே நானும் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் எனக்குப் பின் னாலிருந்து என் தோளைப் பிடித்து என்னைத் திடுக்கிடச் செய்தார். (யாரென்று) நான் திரும்பிப் பார்த்தபோது, அவர் அலீ (ரலி) அவர்கள்தான். அவர்கள் "உமர் அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!''
என்று பிரார்த்தித்து விட்டு, "(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத் தக்கவர் யாரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள்தான் அதற்குத் தகுதியான மனிதர்.) அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை உங்களுடைய இரு தோழர்களுடன்தான் அல்லாஹ் இருக்கச் செய்வான் (அதாவது நபி (ஸல்), அபூபக்ர் (ரலி) ஆகியோருடன் நீங்கள் அடக்கம் செய் யப்படுவீர்கள்) என்றே நான் எண்ணியிருந் தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் அபூபக்ரும் உமரும் வந்தோம்'. என்றும், "நானும் அபூபக்ரும் உமரும் உள்ளே சென்றோம்' என்றும், "நானும் அபூபக்ரும் உமரும் வெளியில் புறப்பட்டோம்' என்றும் சொல்வதை நான் அதிகமாகச் செவியுற்றிருக்கிறேன். அதனால்தான் உங்களை உங்கள் இரு தோழர்களுடன்தான் (அல்லாஹ்) அடங்கச் செய்வான் என்று நான் எதிர்பார்க்கிறேன் அல்லது எண்ணுகிறேன்'' என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, (கனவில்) மக்கள் (பல விதமான) சட்டைகளை அணிந்தவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள். அவற்றில் மார்பை எட்டக்கூடிய அளவு (சட்டைகளு)ம் இருந்தன; மார்பை எட்டாத வையும் இருந்தன. உமர் பின் அல்கத்தாப் (தரையில்) இழுத்துக் கொண்டே செல்லும் அளவுக்குகு முழுநீளச் சட்டையொன்றை அணிந்தவராக என்னைக் கடந்து சென்றார்'' என்று கூறினார்கள். மக்கள், "இதற்குத் தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்தச் சட்டைகள்) அவர்களது மார்க்கத்தை (மார்க்க உணர்வையும் செயல் பாடுகளையும்) குறிக்கும்'' (என விளக்கம் கண்டேன்) என்று பதிலளித்தார்கள்.12 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் உறங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) கோப்பை ஒன்று என்னிடம் கொண்டுவரப்படுவதைப் போன்று கண்டேன். அதில் பால் இருந்தது. நான் அதிலிருந்த பாலை (தாகம் தணியும் அளவுக்கு) அருந்தினேன். எந்த அளவுக்கென்றால், (வயிறு நிறைந்து) அது என் நகக் கண்கள் வழியே வெளியேறி வருவதைக் கண்டேன். பின்னர் மீதியை உமர் பின் அல்கத்தாபுக்குக் கொடுத்தேன்'' என்று கூறினார்கள். மக்கள், "இதற்குத் தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்க, அதற்கு அவர்கள், "அறிவு' என்று பதிலளித்தார்கள்.13 - மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உறங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக்கொண்டி ருந்த ஒரு கிணற்றின் அருகில் கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவுக்கு(த் தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூ பக்ர்) அவர்கள் அதை வாங்கி அதன் மூலம் "ஒரு வாளி நீரை' அல்லது "இரண்டு வாளிகள் நீரை' இறைத்தார். அவர் இறைத்தபோது சோர்வு தெரிந்தது.14 -அல்லாஹ் அவருக்கு மன்னிப்பருள் வானாக.- பிறகு அது மிகப் பெரிய வாளியாக மாறியது. அப்போது அதை கத்தாபின் புதல்வர் (உமர்) அவர்கள் வாங்கினார். உமர் பின் அல்கத்தாப் இறைத்ததைப் போன்று இறைக்கின்ற (வலிமை மிக்க) அபூர்வத் தலைவர் ஒருவரை நான் மக்களில் பார்க்கவில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர்நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவுக்கு (அவர் நீர் இறைத்தார்).15 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16 - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூபக்ர்) நீர் இறைப்பதைக் கண்டேன்'' என்று இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உறங்கிக்கொண்டிருக்கையில் (கனவில்) ஒரு நீர்த் தடாகத்தின் அருகில் நான் இருந்துகொண்டு, நீர் இறைத்து மக்களுக்குப் புகட்டிக்கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அபூபக்ர் என்னிடம் வந்து எனக்கு ஓய்வளிப் பதற்காக என் கரத்திலிருந்த அந்த வாளியை வாங்கி, இரண்டு வாளிகள் தண்ணீர் இறைத் தார். அவர் இறைத்தபோது (சற்று) சோர்வு தென்பட்டது. -அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு அருள்வானாக- பிறகு கத்தாபின் புதல்வர் (உமர்) வந்தார். அவர் அபூபக்ர் அவர்களிடமிருந்து (அந்த வாளியை) வாங்கி, மக்கள் (தாகம் தீரத் தாங்களும் அருந்தி, தம் ஒட்டகங்களுக்கும் புகட்டிவிட்டுத்) திரும்பிச் செல்லும்வரை இறைத்துக்கொண்டேயிருந்தார். அவரைப் போன்று இறைக்கின்ற பலசாலியான ஒரு மனிதரை நான் ஒருபோதும் பார்க்கவில்லை. அப்போதும் தடாகம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கனவில்) நான் சுற்றுச் சுவர் இல்லாத ஒரு கிணற்றுக்கு அருகிலிருந்த வாளியால் தண்ணீர் இறைப்பதைப் போன்று எனக்குக் காட்டப்பட்டது. அப்போது அபூபக்ர் அவர்கள் வந்து ஒரு வாளி நீரை அல்லது இரண்டு வாளிகள் நீரை (சற்று) சோர்வான நிலையில் இறைத்தார். அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு அருள்வானாக. பிறகு உமர் பின் அல்கத்தாப் வந்து இறைத்தார். உடனே அந்த வாளி மிகப் பெரிய வாளி யாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப் போன்று செம்மையாகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான ஒரு (அபூர்வத்) தலைவரை நான் கண்டதில்லை. மக்கள் தாகம் தீர்ந்து, (தம் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டி வைக்கும் அளவுக்கு (அவர் நீர் இறைத்தார்). இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.17 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது. - அபூபக்ர் (ரலி), உமர் பின் அல்கத்தாப் (ரலி) ஆகியோரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கனவில் கண்டதாகக் கூறிய மேற்கண்ட ஹதீஸ், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.18
 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், "(கனவில்) நான் சொர்க்கத்தினுள் நுழைந்தேன். அங்கு ஒரு "வீட்டை' அல்லது "மாளிகையைக்' கண்டேன். "இது யாருக்குரியது?'' என்று கேட்டேன். அவர்கள் (வானவர்கள்), "(இது) உமர் பின் அல்கத்தாப் அவர்களுக்குரியது'' என்று பதிலளித்தார்கள். அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன். ஆனால், (உமரே!) உமது தன்மான உணர்வு என் நினைவுக்கு வந்தது. (ஆகவே, உள்ளே செல்லாமல் திரும்பி வந்துவிட்டேன்)'' என்று கூறினார்கள்.
Thanks Salahudeen meeraangani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!