அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

புதன், அக்டோபர் 30, 2013

திருடனோ திருடியோ

திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திருக்கு ,அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக -அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள் .அல்லாஹ் மிகைத்தவனும் ,ஞானம் மிக்கோனுமாக இருக்கிறான் .அல்குர் ஆன் :பகுதி 6:அத் 5 :வசனம்:38


எவரேனும் தம் தீயச் செயலுக்காக மனம் வருந்தி தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று ) மன்னிக்கிறான் ; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும் ,கருணையுடையோனுமாகவும் இருக்கிறான் .
அல்குர் ஆன் : வசனம்39)

மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சட்டம் இஸ்லாமிய சட்டம் மட்டும் தான் ,அது படைத்தவன் இயற்றிய சட்டம் . ஒருவன் திருடினால் அவனுக்கு தண்டனை எப்படி கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான் : அவன் கரத்தை தரித்து விட வேண்டும் ! அப்படி செய்வதினால் (அல்லாஹ்வின் சட்டத்தை நாம் நிறைவேற்றி வந்தோம் என்றால் ) குற்றம் குறையும் . மாறாக வெறும் சாதாரண தண்டனை அவனுக்கு கொடுத்து விட்டு ஒரு மாதம் அல்லது அதற்க்கு அதிகமாக சிறையில் பிடித்து அவனை அடைத்தால்  .பிறகு என்ன ஆகும் நிலைமை ? அவன் திரும்ப வந்து பழைய தொழிலைத்தான் செய்வான் என்பது உறுதி! இது அரசாங்கத்துக்கு தெரியாதா ? மக்களுக்கு புரியாதா ? இன்று என்ன நடக்கிறது , எங்கு பார்த்தாலும் திருட்டு ,கொலை கொள்ளை அதிகமாகத்தான் நடந்து கொண்டு வருகிறது .மனிதன் சட்டம் என்ன செய்ய முடிகிறது , எதுவும் சாதிக்க முடியாது ! யார் வீட்டிலுள்ள பணமோ அல்லது நகையோ திருட்டு போனால் , போலிஸ் வரும் கூடவே மோப்பம் பிடிக்கும் நாய் யும் வரும் ரொம்ப பரப்பரப்பாக இருக்கும் அன்றும் மட்டும் ,பிறகு என்ன நடக்கும் , ? வழக்கம் போல் போலிஸ் சொல்லும் ஒரே செய்தி , நாங்கள் தேடி வருகிறோம் சீக்கிரம் திருடன் பிடிப்பட்டு விடுவான் என்று சொல்லி விடுவார்கள் ! அன்று முதல் இன்று வரை இப்படிதான் நடக்கிறது , இன்னும் அப்படிதான் நடக்கும் புதிதாக ஆட்சி மாறினாலும் கூட . மக்கள் எதற்கெல்லாம் போராட்டம் ,ஆர்ப்பாட்டம் என்று கொடி பிடிகிறார்கள் , கோஷம் போடுகிறார்கள் , ஆனால் , இதுபோன்ற திருட்டு , கொள்ளை சம்பவத்துக்கு குரல் கொடுக்க யாரும் முன் வருவதில்லை , இஸ்லாமிய சட்டம் தான் சிறந்த சட்டம் என்று சொல்வதற்கு மனசு இடம் தரவில்லை .

ஒருவன் திருடினால் , அவனுக்கு இஸ்லாமிய சட்டம் முறைப்படி தண்டனை கொடுத்தால் ,பிறக எத்தனை பேர் திருட பயப்படுவார்கள் , திருடினால் நிச்சயமாக நம் கரம் துண்டிக்கப்படும் என்று அச்சம் , உணர்வு ஏற்படும் . மக்கள்கள் நிம்மதியாக , அச்சமின்றி வாழ வேன்டும்மென்றால் , நிச்சயமாக இஸ்லாமிய சட்டம் வர வேண்டும் , அதை அமல்படுத்த வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!