அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, அக்டோபர் 19, 2013

முத்தான முத்துக்கள் !தூய்மை ஈமானின் ஒரு பகுதி என ரசூல் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
உண்ட பின் நன்றி செலுத்தக் கூடியவன் பொறுமையுள்ள நோன்பாளியைப் போலாவான்  . ஆதாரம்: திர்மிதி
ஸலாம் கூறுவதில் முந்துபவன் பெருமையை விட்டும் நீங்கியவனாவான் என ரசூல் (ஸல்) கூறினார்கள்    .ஆதாரம் பைஹகி
மிஸ்வாக்கு செய்வது வாயை சுத்தமாகுவதாகும் அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்றுத் தருவதாகவும் உள்ளது என ரசூல் (ஸல்) கூறினார்கள் . ஆதாரம்:அஹ்மத் ,புகாரி
புறம் பேசுவது விபச்சாரத்தை விடக் கடுமையான பாவமாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள் . ஆதாரம்: பைஹகீ
குர் ஆன் (அதன்படி நீ நடந்தால் அது ) உனக்கு சாதகமாகும் அல்லது (அதன்படி நடக்காவிட்டால் அது உனக்கு ) பாதகமாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.
பாவத்திலிருந்து தவ்பா செய்யக்கூடியவன் . பாவமே இல்லாதவனைப் போன்று ஆகிவிடுகிறான் என ரசூல் (ஸல்) கூறினார்கள் . ஆதாரம் : இப்னு மாஜா .
எவன் தன் மனத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு மரணத்திருக்கு பின் வரவிருக்கும் வாழ்க்கைக்காக அமல் செய்கிறானோ அவனே புத்திசாலி ஆவான் . தன்னைத் தன் மனத்தின் தகாத இச்சைகளின் பின்னே அலைய விட்டுவிட்டு அல்லாஹ்விடம் தவறான நம்பிக்கை வைத்துக் கொண்டிருப்பவன் முட்டாள் ஆவான் என ரசூல் (ஸல்) கூறினார்கள் . ஆதாரம் : திர்மிதி.
இன்ஷாஅல்லாஹ் தொடரும் .... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!