அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, அக்டோபர் 26, 2013

வாழ்க்கையைப் பாழாக்கும் சினிமா

வாழ்க்கையைப் பாழாக்கும்  சினிமா பார்ப்பதினால் ஏற்படும் கெடுதிகள் என்னென்னா ?
சினிமா பார்ப்பதினால் சீரழிந்த குடும்பங்கள் ஏராளம் .ஒரு மனிதன் சினிமாவுக்கு போய் திரும்பும் வரை பாவத்திலே முழ்கி இருக்கிறான்
.அவன் சினிமாவுக்கு நடந்து செல்வது அங்கு போய் டிக்கெட் வாங்குவதற்காக காத்திருப்பது ,தன்னுடைய பாக்கெட்டிலிருந்து   டிக்கெட் வாங்குவதற்கு பணமெடுத்து டிக்கெட் வாங்குவது , பின்னர் உள்ளே சென்று அமர்வது , தன்னுடைய கண்களினால் சினிமாவின் காட்சியைப் பார்ப்பது இவை யாவும் மாபெரும் பாவமாகும் .சினிமா பார்ப்பதை மார்க்கம் அனுமதிக்கவில்லை .அநேக ஊர்களில் ஆண்களும், பெண்களும் கூட்டம் கூடமாக சினிமாவுக்கு செல்கின்றனர் . கணவன்மார்கள் தங்களுடைய மனைவிமார்களை தங்களுடன் சினிமாவுக்கு அழைத்து செல்கின்றனர் .(அன்று அதிகமாக சினிமாவுக்கு போவது இருந்து வந்தது , இப்பொழுது குறைவான பேர்கள்தான்   சினிமாவுக்கு அழைத்து செல்கிறார்கள் , பெண்கள் அதிகமாக டிவி யில் சீரியல் பார்ப்பதினால் , சில கண்ட கண்ட நிகழ்சிகள் பார்ப்பதினால் , பெரும்பாலும் பெண்களுக்கு ஆர்வம் இல்லை சினிமா போய் பார்ப்பதில் )இதன் காரணமாக பல முஸ்லிம் பெண்கள் தங்களின் சொந்த கணவனை விட்டு விட்டு முஸ்லிம் அல்லாதவர்களுடன் தொடர்ப்பு கொண்டு அவர்களுடன் சென்று விடுகின்றனர் .இக்காலத்தில் இவை போன்ற சம்பவங்கள் தினசரி நடைபெறுகின்றன .ஓர் ஊரில் ஒரு கணவன் தம்முடைய மனைவியை சினிமாவுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார் . இவர் அலுவலகத்திருக்கு போகும்போது தம்முடைய மனைவியை வீட்டில் தனிமையில் விட்டுச் செல்வது வழக்கம் .கணவன் இல்லாத நேரங்களில் பக்கத்து வீட்டிலுள்ள முஸ்லிம் அல்லாத வாலிபன் ஒருவனுடன் தொடர்ப்பு ஏற்பட்டு கடைசியாக தன் சொந்த கணவனை விட்டு விட்டு அந்த வாலிபனோடு ஓடி விட்டாள் அப்பெண் . மற்றொரு பெண் சினிமா பார்ப்பதற்கு தன்னுடைய குழந்தையை அழைத்துச் சென்று சினிமா பார்த்து கொண்டிருக்கும் போது அக்குழந்தை பசியின் காரணமாக துடிதுடித்து அழுதது .ஆனால் இவள் சினிமாக் காட்சியை பார்க்கும் ஆசையில் குழந்தையின் அழுகையைப் பொருட்படுத்தவில்லை .சினிமாக் காட்சி முடிந்து பார்க்கையில் குழந்தை மரணமாகியிருன்தது .இச்செய்தியை கணவன் கேள்விப்பாட்டால் பெரும் தண்டனைக் கொடுப்பார் என்று எண்ணி , அவள் விஷத்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாள் .இவை போன்று ஆயிரகணக்கான சம்பவங்கள் கூற முடியும்! இந்த மானக்கேடான தரம்கெட்ட மிகவும் கேவலமான சினிமாவை பார்க்கும் கூட்டத்தார்களே !சிந்தியுங்கள் , நரகத்தின் படுகுழியில் சேர்த்து வைக்கும் ஆபாசம் நிறைந்த சினிமா பார்ப்பதை நிறுத்துங்கள்! மார்க்கத்திற்கு புறம்பான காரியங்கள் நடைபெறும் பகுதியின் பக்கம் செல்ல கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் அந்த இடத்தை விட்டும் மிக விரைவாக கடந்து விட வேண்டும்மென்பது தான் பெரியோர்களின் தீர்ப்பு .சீரியலும் அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறது என்பதையும் நாம் உணர வேண்டும்! அல்லாஹ் நம் அனைவரையும் பாதுக்காபானாக !!!ஆமீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!