அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

திங்கள், அக்டோபர் 28, 2013

நன்மையை ஏவி தீமையை தடுப்போம் !நீங்கள் மூவர் ஒரிடத்தில் இருந்தால் ஒருவரை விட்டு இருவர் மட்டும் ரகசியம் பேசாதீர்கள் .அது அவருக்கு வருத்தமளிக்கும் . மற்ற மக்களுடன் சேரும் வரை (அப்பொழுது அது குற்றமல்ல ) அறிவிப்பாளர் :இப்னு மஸ் ஊத் (ரலி)
ஆதாரம்: புகாரி, முஸ்லிம் .


நீர் ஒளு செய்யும்போது கை கால்களின் விரல்களை நன்கு கோதிவிட்டு சுத்தமாக ஒளு செய்வீராக என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் :இப்னு அப்பாஸ் (ரலி)
ஆதாரம்: திர்மிதி .

உனக்கு வெட்கம் இல்லையெனில் உன் விருப்பபடி எதை வேண்டுமானாலும் செய்து கொள் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி.

உங்களில் ஒருவர் சாப்பிட்டால் வலது கரத்தால் சாப்பிடவும் ; தண்ணீர் குடித்தால் வலது கரத்தால் குடிக்கட்டும் என ரசூல் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்:இப்னு உமர் (ரலி)
ஆதாரம்:முஸ்லிம்.

உங்களில் ஒருவர் காலனி அணிந்ததால் வலது பக்கத்தைக் கொண்டு ஆரம்பிக்கட்டும் ,கழற்றினால் இடது பக்கத்தைக் கொண்டு ஆரம்பிக்கட்டும் .ஏனெனில் வலது (கால்)பக்கம் அணிவதில் முதன்மையாகவும் கழற்றுவதில் கடைசியாகவும் இருப்பதற்காக என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பாளர்:அபூஹுர்ரைரா (ரலி)
ஆதாரம் ;புகாரி ,முஸ்லிம். 

உங்களில் ஒருவர் பள்ளியில் நுழைந்தால் உட்காருவதற்கு முன் இரண்டு ரக் அத்துகள் தொழுது கொள்ளட்டும் என ரசூல்(ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பாளர்:அபூ கதாதா (ரலி)
ஆதாரம்;புகாரீ ,முஸ்லிம்.

உங்களில் ஒருவர் பயணத்தை அதிகமாக்கினால் அவர் தனது வீட்டுக்கு இரவில் வரவேண்டாம் .
அறிவிப்பாளர்:ஜாபிர் (ரலி) ஆதாரம்; புகாரீ ,முஸ்லிம்.

நீங்கள் நோயாளியிடம் நோய் விசாரிக்க சென்றால் -அவருடைய தவணை (ஆயுள் )பற்றி ஆறுதல் கூறுங்கள் .நிச்சயமாக அது எதையும் தடுக்காது .எனினும் அவருக்கு சந்தோசம் அளிக்கும் .
அறிவிப்பாளர்: அபூசயீத் (ரலி)
ஆதாரம்;திர்மிதி

இன்ஷாஅல்லாஹ் தொடர்ச்சியை பார்ப்போம் ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!