அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

புதன், அக்டோபர் 23, 2013

ஜோசியம் ,குறி கூடுமா , ?


அல்லாஹ்வின் திரு பெயரால் ஆரம்பம் செய்கிறேன் ..
நம்மில் அநேகர் ஜோசியம் பார்ப்பது குறி கேட்பது இவற்றை அடிக்கடி கடைப்பிடித்து வருகின்றார்கள் . மார்க்கத்தில் முற்றிலும் தடுக்கப்பட்ட இவ்விஷயங்களை அறவே செய்ய கூடாது . இவை இரண்டும் ஹராமான செயலாகும்
. பின்னால் நடக்கவிர்க்கும் விஷயங்கள் அல்லாஹு தஆலா ஒருவனே அறிந்தவன் . ஜோசியம் , குறி பார்பத்தின் காரணமாக அநேக குடும்பங்களில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன . ஜோசியம் ,குறி இவற்றை நம்புவது மாபெரும் குற்றமாகும் . எந்த வகையிலும் பின் சம்பவிக்கும் விஷயம் குறித்து எந்த ரூபத்திலும் அறிய முயற்சி செய்வது கூடாது.
நல்ல நேரம் , கேட்ட நேரம் பார்ப்பது , சிலர் இந்த செயலையும் செய்து வருகிறார்கள் . இதுவும் கூடாதா செயல் ஆகும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்! நல்ல நேரம் கெட நேரம் என்று முடிவு செய்வது நீங்கள் யார் ?

ஒடுக்கத்து புதன் என்றால் என்ன ?

சபர் மாதத்தின் கடைசி புதன் கிழமை " ஓடுகத்து புதன் " என்று கூறி தேவை இல்லாத பல சடங்குகள் செய்கின்றார்கள் .இந்நாளில் முசீபத்துகள் இறங்குவதாகவும் கூறுகின்றார்கள் . கடலுக்கு சென்று குளிகின்றார்கள் . இவ்வ்ற்றகேல்லாம் ஆதாரமும் இல்லை . மற்ற நாள்களைப் போன்று இதுவும் ஒரு நாள் தான் . இந்த நாளில்தான் ஆத் கூட்டத்தினர் அழிக்கப்பட்டார்கள் .இந்த தினத்தில் தான் இலைகளிலோ  , ஓலைகளிலோ எழுத்துகளை எழுதிக் குடிப்பதில் தவறில்லை இவ்வாறு செய்வதென்பது கடமை இல்லை .இந்த சபர் மாதமும் மற்ற மாதங்களைப் போன்றுதான் .எனவே இம்மாதத்திலும் எல்லா நல்ல காரியங்களும் செய்யலாம் ..

டெலிவிஷன் பார்க்கலாமா ?

அநேக வீடுகளில் டெலிவிஷன் வாங்கி தினசரி பொழுது போக்கிற்காக உபயோகம் செய்கின்றார்கள் . வீடில்லுள்ள சிறு குழந்தைகள் ,ஆண்கள் ,பெண்கள் ,வயோதிர்கள் யாவரும் ஒன்றாக  கூடி டெலிவிஷன் காட்சிகளை பார்கின்றார்கள் .நாளாக நாளாக இது மாபெரும் தீங்கை விளைவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . தற்போது ஈமானை கெடுப்பதில் முதல்  ஸ்தானம் வகிப்பவ்ற்றில் டெலிவிஷனும் ஒன்று . டெலிவிஷன் பார்ப்பதினால் ஏற்படும் தீங்குகள் பற்றி விளக்கி பல நூற்களையே மேலை நாடுகளில் வெளியுட்டுள்ளார்கள் .
கத்தி இருக்கு அது ஒருவரை கொள்ளவும் செய்யும் , அந்த கத்தி ஒரு பழத்தையும் அரிய உதவும் . அதுபோலதான் இந்த டெலிவிஷனும் . நல்ல விஷயங்களும் இருக்க தான் செய்கிறது , நல்ல விடயத்துக்கு மட்டும் உபயபடுத்தி கொள்ள வேண்டும்! என்பது என் தாழ்வான கருத்து .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!