ஞாயிறு, அக்டோபர் 27, 2013

தெரிந்துகொள்வோம் !

முஸ்லிம் அல்லாதவர்களின் அன்பளிப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா ?
பள்ளிவாசல் மற்றும் இதர நம்முடைய பொதுக் காரியங்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் உதவி செய்தால் அவை ஹராமான பொருளாக இல்லாமலிருந்தால் ஏற்றுக் கொள்ளாம் .
முஸ்லிம்களுடைய பொருள்களும் ஹராமானவையாக இருந்தால் ஏற்றுக் கொள்ள கூடாது .
முஸ்லிம் அல்லாதவர்கள் அன்பளிப்புகள் தந்தால் அதை ஏற்றுக் கொள்ளாம் . ஆனால் பூஜை செய்யப்பட்ட பொருட்களாக இருந்தால் அவற்றை சாப்பிடகூடாது . கொஞ்சம் கவனம் தேவை ! தீபாவளி அல்லது பொங்கல் நிகழ்சிகளில் போது , பூஜையில் வைக்கபட்டதா ? என்பதை நன்றாக அறிந்து கொண்டு சாப்பிடவும்!

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பொருளுதவி செய்யலாமா ?
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உணவு ,இருப்பிடம் ,உடை திருமணம் போன்ற ஆகுமான காரியங்களுக்கு பொருளுதவி செய்யலாம் . ஆனால் சிலை வணக்கதிருக்கு உதவி செய்வது கூடாது . சிலர் முஸ்லிம் வீடுகளை தேடி கோயில்களுக்கு கஞ்சி கூல் ) காய்ச்ச போகிறோம் என்று வசூல் செய்வார்கள் ,அதற்க்கு  கண்டிப்பாக கொடுக்க கூடாது .சிலர் அறியாமல் கொடுகிறார்கள் , நன்றாக அறிந்து கொள்ளவும் ! கூடாது.

மற்றவர்களின் பொருளை அனுமதி இல்லாமல் எடுக்கலாமா ?

யாருடைய பொருளையும் அனுமதி இல்லாமல் எடுக்ககூடாது . எந்தத் தேவைக்கு அனுமதி பெற்று வாங்கினமோ அந்த தேவையை மட்டும் பூர்த்தி செய்து விட்டு உடனே கொடுத்து விடவும் . நாம் அனுமதி பெற்று ஒரு பொருளை வாங்கி உபயோகம் செய்து பிறகு வேறு யாரேனும் அப்பொருளைக் கேட்டால் அப்பொருளின் உரிமையாளரிடம் அனுமதி பெற்றாதான் கொடுக்க வேண்டும் .

ஒற்றுக் கேட்பது என்றால் என்ன ?
இருவரோ அல்லது அதற்க்கு அதிகமானவர்களோ இரகசியம் பேசும்பொழுது மறைந்திருந்து பேசக்கூடியவ்ற்றை செவிமடுத்து கேட்பதற்கு "ஒற்றுக் கேட்பது " என்று கூறப்படும் . இவ்வாறு ஒற்றுக் கேட்பதும் , ஒற்றுக் கேட்கப்பட்ட இரகசியங்களை வெளியிடுவதும் பெரும் பாவமாகும். " யார் ஒற்றுக் கேட்ப்பார்களோ நாளை மறுமை நாளில் காதில் ஈயத்தை உருக்கி ஊற்றப்படும் " என ஹதீஸில் வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!