அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

திங்கள், நவம்பர் 18, 2013

ஹதீஸ்கள் வாசிக்க :
பேரீத்தம் பழத்தின் ஒரு துண்டை (சதகாவாக ) கொடுத்தாவது நரகத்தை பயந்து கொள்ளுங்கள் .அதையும் கிடைக்கப் பெறாத சமயத்தில் அழகிய வார்த்தையைக் கூறுவது கொண்டாவது நரகத்தை பயந்து கொள்ளுங்கள் என ரசூல்(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்:அதீய் (ரலி)
ஆதாரம்:புகாரீ.

நீர் ஐந்து விஷயங்களுக்கு புண் ஐந்து விஷயங்களை முன் அறிய வாய்ப்புகளாய்க் கருதுவீராக!
நீர் முதுமையடையவதர்க்கு முன்னால் உம் இளமையும் . நீர் நோயுருவதற்கு முன் உம் ஆரோக்கியத்தையும் . நீர் ஏழ்மையடைவதற்கு முன் உம் செல்வ நிலையையும் . நீர் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னால் உமது ஓய்வு நேரத்தையும் .உனது மரணத்துக்கு முன் உன்  வாழ்வையும் நீர் அறிய வாய்ப்புகளாக கருதிப் பயன்படுத்திகொள் என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பாளர்:அம்ர் (ரலி)
ஆதாரம்: திர்மிதி.

சண்டையின் போது அடுத்தவனை வீழ்த்துபவன் வீரனல்லன் ; மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வீரனாவான் என ரசூல்(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்:அபூஹுர்ரைரா (ரலி)
ஆதாரம்:புகாரீ, முஸ்லிம்.

செல்வ வளம் என்பது அதிகமான செல்வத்தைப் பெறுவதல்ல .போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வமாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள்
அறிவிப்பாளர்: அபூஹுர்ரைரா (ரலி)
ஆதாரம்:புகாரீ, முஸ்லிம்.

மக்களுக்க மத்தியில் சீர்திருத்தம் செய்யும் எண்ணத்தில் நல்லதை கூறி நல்லதை பரப்புபவன் பொய்யன் அல்ல என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : உம்முகுல்சூம் (ரலி)
ஆதாரம்: புகாரீ ,முஸ்லிம் .

துஆவை விட அல்லாஹ்விடம் எதுவும் சங்கையான தாக இல்லை என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
ஆதாரம்: திர்மிதி

அல்லாஹ்விற்காக பணிந்து நடப்பவரை அல்லாஹ் உயர்த்துகிறான் . எவன் பெருமையடிக்கிரானோ அல்லாஹ் அவனை தாழ்த்திவிடுகிறான் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்:உமர் (ரலி)
ஆதாரம்: பைஹகி
மிஷ்காத் 434

நற்செயல் களை (பிறருக்கு ) அறிவித்து கொடுப்பவனுக்கு அதைச் செய்தது போன்ற கூலியுண்டு என ரசூல் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூமஸ் ஊத் (ரலி)
ஆதாரம்: முஸ்லிம் .

மென்மையை இழந்தவன் நன்மையை இழப்பான் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்:ஜரீர் (ரலி)
ஆதாரம்:முஸ்லிம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!