அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

புதன், நவம்பர் 06, 2013

கல்வியைக் கற்பது

 கல்வியைக் கற்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் !


உங்களில் மேலானவர் குர் ஆன் கற்றவரும் , அதைக் கற்றுக் கொடுப்பவரும் ஆவார் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி)
ஆதாரம்: புகாரீ .

குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்யக்கூடிய நற்செயல்களே அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி)
ஆதாரம்:புகாரீ, முஸ்லிம்.

அல்லாஹ்வின் திக்ரை விட்டும் தூரமாக்ககூடிய அதிகமான பொருட்களைவிட போதுமான அளவுக்கு குறைவான பொருள் சிறந்ததாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பாளர் : அபூதர்தா (ரலி)
ஆதாரம் : மிஷ்காத் .

மனிதர்கள் அனைவரும் தவறிழைப்பவர்களே எனினும் தவறு செய்ய கூடியவர்களில் சிறந்தவர்கள் (பாவத்திலிருந்து ) தவ்பா செய்து மீளூபவர்கலாவர் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் :அனஸ் (ரலி)
ஆதாரம் :திர்மிதி, இப்னு மாஜா .

மனிதனின் பேச்சுக்கள் அனைத்தும் அவனுக்கு பாதகமானவை . நல்லதை ஏவுதல் ,தீயதை தடுத்தல் அல்லாஹ்வை திக்ரு செய்தல் இவைகள் தான் அவனுக்கு பலன் தருபவை .இவ்வையல்லாத மற்றவைகள் நஷ்ட்டத்தை உண்டாக்குபவையாகும் என ரசூல்(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: உம்மு ஹபீபா (ரலி)
ஆதாரம்: திர்மிதி.

ஒரு மனிதன் செய்த பாவத்தின் காரணமாக அவனுக்கு இரணம் தடைசெய்யப்படுகின்றது என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பாளர்:சவ்பான் (ரலி)
ஆதாரம்: இப்னு மாஜா. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!