அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, நவம்பர் 09, 2013

ஒரு முஃமின் ஏமாறமாட்டான், ஏமாற்றவுமாட்டான்!

 ஒரு முஃமின் ஏமாறமாட்டான், ஏமாற்றவுமாட்டான்!

ஒரு முஃமின் ஒரே பொந்தில் இரு தடவை கொட்டப்படமாட்டான் என ரசூல் (ஸல்) கூறினார்கள்
அறிவிப்பாளர் :அபூஹுர்ரைரா (ரலி)
ஆதாரம்:புகாரீ, முஸ்லிம்.

இன்று அதிகமாக மக்கள்கள் ஏமாந்துபோகிறார்கள் , அரசியல், பொது வாழ்க்கை , காதல் விடயத்தில் , பணம் விடயத்தில் . ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை அரசியல் வாதிகளிடம் நாம் ஏமாந்து போகிறோம் , பொதுவாழ்க்கை எடுத்துகொண்டால் : கொடுக்கல், வாங்கல் விடயத்தில் ,சீட்டு கம்பெனி இப்படி இன்னும் அதிகமாக ஏமாந்து போகிறோம் . அதெல்லாம் விட்டுவிடுவோம் , போனால் வரும் ,வந்தால் அது போகும் . ஆனால் , ஒரு மிக பெரிய விடயம் ஒன்று இருக்கிறது அதுதான் காதல் , இந்த காதலில் ஏமாந்து போகும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது . facebook வழியாக , chat வழியாக , மற்றும் நேர்முகமாக ஒருவர் ஒருவர் பார்த்து கொண்டு காதல் செய்வது . சில காம வெறிபிடித்த மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் , அவர்களின் நோக்கம் அப்பாவி பெண்களை அவர்களின் வலையில் சிக்கவைப்பது , அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பது , இது அவர்களுக்கு ஜாலியாக இருக்கிறது . ஆனால் ,இந்த பெண்களுக்கு புரியவில்லை ! மீண்டும் மீண்டும் இந்த காதல் (காமம்) வலையில் சில பெண்கள் சிக்கிகொண்டுதான் இருக்கிறார்கள் . இந்த அப்பாவி பெண்கள் நம்பி மோசம் போகிறார்கள் , இழப்பது கற்பு , காதலன் கிடைக்காவிட்டால்  உயிர் இழப்பு (தற்கொலை ) இதுதான் அன்றாடம் நடந்துகொண்டு இருக்கிறது . இஸ்லாமிய பெண்களே ! ரொம்ப கவனமாக இருக்கவும் ! மாற்று மத சகோதரிகளே நீங்களும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்! ஒநாயிகள் சுற்றி கொண்டுதான் இருக்கிறது அதன் காம பசிக்கு , பெண்களே ஏமாறவும் வேண்டாம் யாரையும் ஏமாற்றவும் வேண்டாம் ! ஒரு சிறிய சம்பவம் :

இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் ராணி(14). ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த செப்டம்பர் மாதம் பேஸ்புக் மூலம் மனோஜ் குமார் என்பவருடன் நட்பானார்.

மனோஜ் குமார் ஏலஹன்காவில் உள்ள சோஷாத்ரிபுரம் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பேஸ்புக் மூலம் குமாருடன் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு நாள் குமார் அழைத்ததால் நந்தினி லேஅவுட்டில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு ராணி சென்றுள்ளார். அங்கு குமார் ராணியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார். அதன் பிறகு ராணியிடம் அவரது தோழிகளின் விவரம், கைப்பேசி எண்கள், பேஸ்புக் கணக்கு பற்றி கேட்டு வந்துள்ளார்.

இதனால் ராணிக்கு சந்தேகம் வந்துள்ளது. இத்தனை விவகாரங்கள் நடந்ததும் ராணியின் பெற்றோருக்கு தெரியாது. இந்நிலையில் ராணி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு குமாரிடம் கேட்க, அவரோ நான் இது எல்லாம் ஒரு ஜாலிக்காக செய்தேன் என்று கூறி நழுவிவிட்டார்.

இதனால் மனமுடைந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய் பணி முடிந்து நேற்று இரவு வீடு திரும்பியபோது கதவு உட்புறமாக பூட்டியிருந்தது. இதனைத் தொடர்ந்து கதவை உடைத்து பார்த்தபோது ராணி தூக்கில் பிணமாகத் தொங்கினார்.

இதுகுறித்து ராணியின் பெற்றோர் பொலிசில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து குமார் மீது வழக்குப் பதிவு செய்த கைது செய்துள்ளனர்.

மேலும் அவர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில் சாகும் முன்பு ராணி எழுதிய கடிதத்தில், மனோஜ் என்னை கண்டுகொள்ளாமல் இருப்பதால் வேதனையாக உள்ளது. நான் சந்தித்து காதலில் விழுந்து 2 மாதங்கள் தான் ஆகின்றன. எல்லாம் நன்றாக சென்றது. நான் அவருக்காக அனைத்தையும் தியாகம் செய்தேன். அவர் என்னுடன் உறவு வைத்துக் கொண்டார்.

ஆனால் தற்போது அனைத்தும் ஒரு ஜாலிக்காக செய்தேன் என்கிறார். அவர் எப்படி இப்படி செய்யலாம்? ஏன் ?
நன்றி மனிதன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!