அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, நவம்பர் 30, 2013

ஒரு ஜனாஸா தன் நிலையைப் பற்றி கூறும் உருக்கமான ...


ஒரு ஜனாஸா தன் நிலையைப் பற்றி கூறும் உருக்கமான ...
மறுமை சிந்தனை!
எனது பெயர்  ஜனாஸா ! நான் படுக்கையில் கிடக்கிறேன்  . என்னுடைய பிள்ளைகள் , சகோதரர்கள் ,சகோதரிகள் அனைவரும் என்னருகில்  கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர் .


என்னுடைய நெருங்கிய நண்பர்களும் என்னைச் சூழ்ந்து நின்றுகொண்டு  என் முகத்தையே பார்த்துகொண்டிருக்கிறார்கள்.

திடிரென்று எனது மூச்சு பெரிதாக இழுத்தது .பெரும் மூச்சாக இழுத்து இழுத்து விட்டேன் . எனது நிலைமை மோசமாவதைக் கண்ட சிலர் யாசீன்  சூராவை ஓத ஆரம்பித்தனர் .

மூச்சு இப்பொழுது கொஞ்சம் இலேசானது . எனது கண்களைத் திறக்கிறேன் . ஏதோ ஒன்றை எனது கண்கள் காண்கின்றன . ஆம் ! வந்துவிட்டார் மரணத்தின் வானவரான மலக்குல் மவ்த் வந்துவிட்டார் .

நிரந்த்தரப்பயனத்தை நான் ஆரம்பிக்கப் போகிறேன் . எனது வாய் திறந்தது . என் சகோதரன் சில துளிகள் தண்ணீரை எனது வாயில் ஊற்றுகிறான் . அது அநேகமாக " ஜம் ஜம் " தண்ணீராக இருக்கும் .மரணத் தருவாயில் எனது வாயில் ஊற்ற வேண்டும் என்பதற்காக நான் அதனைப் பாதுகாத்து வைத்துருந்தேன் .

அனைவரும் " லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்  ரசூலுல்லாஹ் " என்று மொழிய ஆரம்பித்தனர் . எனது பார்வை பறி போய் விட்டது. எனது நாடி நரம்புகளெல்லாம் அடங்கிப் போய்  விட்டன . எனது உணர்வுகளும் மங்கி மரத்துப் போய் விட்டன.

ஆனால் என்னால் இப்பொழுது கேட்க மட்டும் முடிகிறது . என் அன்புக்குரியவர்கள் அழும் சப்தம்  கேட்கிறது. நான் இன்னும் இறக்கவில்லை . ஆனால் உயிரற்று ஜடமாக  ஆகி விட்டேன்.

எனக்குள்ள நேரம் வந்தது . ஒரு நிமிடம் முந்தவும் இல்லை , பிந்தவும் இல்லை. காத்திருந்த மலக்குல் மவ்த் அவரது கடமையைச் செய்ய ஆரம்பித்தார் . விசுக் என்று என் உயிரைப் பிடுங்கினார் . என் உடல் சட்டேன்று குலுங்கி  அடங்கியது .

அவ்வளவுதான் . எல்லாம் முடிந்து விட்டது . நான் இவ்வுலகை விட்டுப் பிரிந்து  விட்டேன்  . என்னை வழியனுப்பி  வைப்பதற்குள்ள ஏற்பாடுகள்  ஆரம்பம்பாயின .

நான் மாடாய் உழைத்து சேர்த்த  சொத்துகள் , வங்கித் தொகைகள்  , அனுபவித்த  விலை உயர்ந்த கார்கள் , வாழ்நாள் முழுதும்  சேகரித்த  எனது தொடர்ப்புகள்  அனைத்தும்  இனி எனக்கு எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை .

இனி எனது அடையாளம் என் கப்ரு  மட்டும்தான் . ஒ ... எனது பெயரும் மாற்றப்பட்டுவிட்டது  . என் பெற்றோர் பல  நாட்கள் ஆலோசனை செய்து தேர்ந்தெடுத்த  எனது பெயர் , அவர்கள் வாயால் கூவித் கூவி அழைத்து மகிழ்ந்து  அந்தப் பெயர் மாற்றப்பட்டு விட்டது இப்பொழுது எனது பெயர் ஜனாஸா !

அதாவது, இறந்த உடல் !
எனக்கு நெருங்கியவர்கள் எனது கப்ரை வெட்டுவதற்கான ஏற்பாடுகளில்  இறங்கியுள்ளார்கள் . ஜனாஸாவை நீண்ட நேரம் வீட்டுக்குள்  வைக்ககூடாதாம் . அவர்களுக்குள்  பேசிக் கொள்கின்றனர் .

வீடு என்னை இப்பொழுது நீண்ட நேரம் வைத்துகொள்ள அனுமதி இல்லாத இந்த வீட்டை நான்தான் கட்டினேன் . பல கனவுகளுடன் பார்த்துப் பார்த்து இலட்ச்ச கணக்கில் செலவு செய்து கட்டினேன் .

என்னைக் குளிப்பாட்ட ஏற்பாடு நடக்கிறது . நான் வீட்டுக்கு வெளியே குளிப்பாடுவதர்க்காக எடுத்துச்  செல்லபடுகிறேன் . நான் பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில் , நான் அழகுற கட்டிய குளியறையில் எனக்கு குளிக்க அனுமதி இல்லை .

குளியரையை சொகுசாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி அங்கே பொருத்தினேன்  அவையெல்லாம் இனி எனக்கு சொந்தமில்லை . இந்த நிலையில் எனக்குப் பயன்பாடாத  பொருட்களை நான் ஏன் வாங்கினேன் ?

குளிப்பாட்டி முடிந்தது . என்னை வெள்ளைத் துணியில்  சுற்றினார்கள் . விலை உயர்ந்த என் ஆடைகள் எல்லாம் எங்கே ? போய் விட்டன ?
என்னை சந்தூக்கில் வைத்தார்கள் .எனது விலை உயர்ந்த ஏசி கார் ஒரு பக்கம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது . அது இப்பொழுது என்னக்கு இல்லை  எனக்குக்  கிடைத்திருப்பது எல்லாம் இந்த மரப் பெட்டிதான் !

இதற்க்காகத்தான நான் இவ்வளவு நாள் கஷ்ட்டப்பட்டு பணம் சம்பாதித்தேன் ? இப்பொழுது எந்தப் பயனும் தராத இந்தப் பணத்தை சம்பாதிப்பதர்க்குதான் நான்  எத்தனை பொய்கள் சொன்னேன் ! எல்லாம் வீணாகப் போய் விட்டது. நான் என் வாழ்க்கையைத் தொலைத்து விட்டேன் . எனது இறுதிப்  பயணத்தை சுத்தமாக மறந்து வாழ்ந்தேன் .

ஆனால் அது உறுதியானது , மிக நெருங்கியது என்று எனக்குத் தெரியும் . இருந்தாலும் அதனை மறந்து உலக மாயையில்  முழ்கிப் போனேன் .
ஆனால்  இன்றோ ... எனது  விளையாட்டு முடிந்து விட்டது.
இது எனக்கு மட்டும் அல்ல , உங்கள் எல்லோருக்கும்தான் . நீங்கள் எல்லோரும் இதே நிலையை ஒரு நாள் அடையத்தான் போகிறீர்கள் . ஒரு நாள் உங்களுக்கு இந்த உலகம் ஒரு சிறிய கனவு போல் களைந்து விடும் . எனக்கு நேர்ந்தது போல் உங்களுக்கும்  நடக்கும் . உங்கள் உயிர்களும் ஒரு நாள் பிடுங்கப்படும் .

ஆதலால் தயாராக இருந்துகொள்ளுங்கள் . நன்மைகளைக் கட்டி வைத்துகொள்ளுங்கள் . அது ஒன்றுதான் உங்களுக்கு உதவும் . உங்கள் இறுதிப் பயணத்தை இன்பமயமாக மாற்றும். மறுமை வாழ்வை மகிழ்ச்சிகரமாக மாற்றும்.
மரணத்தை மறவாதீர்கள் .அது நிச்சயமாக வந்தே தீரும் . அது உங்களை இதோ நெருங்கி விட்டது .

ஒவ்வொரு ஆத்மாவும்  மரணத்தைச் சுகித்தே ஆக வேண்டும் . அன்றியும் இறுதித் தீர்ப்புநாளில் தான் , உங்க (ள் செய்கைக் ) ளுக்குரிய பிரதிபலன்கள்  முழுமையாக கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுக்காக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர்  நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார் . இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை  அளிக்கவல்ல (அற்ப இன்பப் ) பொருளேயன்றி வேறில்லை.

நன்றி : நண்பர் ரஃபி அஹமது .
அல்லாஹ் அவருக்கு நற்கிருபைச் செய்வானாக ! அவரின் குடும்பத்துக்கும் !
ஆமீன் ....

2 கருத்துகள்:

  1. unmai sambavathai nandraaga vilakki ulleergal, aanaal kirutuvargal payan paduthum uruvathai ittuleergal athai paarthaal thaan manam nerudugirathu. antha padathai vilakki vidavum.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதக்குடி தௌஹீத் ஜமாத்க்கு என் மனமார்ந்த நன்றி ! அல்லாஹ் உங்களுக்கு நற்கிருபை செய்வானாக ! அதை நீக்கிவிட்டேன் .

      நீக்கு

Welcome to your comment!