வியாழன், நவம்பர் 28, 2013

கனவின் பலன்


 கனவின் பலன்
"மறுமைக்காலம் நெருங்கிவிடின்  இறை நம்பிக்கையாளரின் கனவு பொய்யாக மாட்டாது .இறை நம்பிக்கையாளரின் கனவு நபித்துவத்தில் 46 பாகங்களில் ஒரு பாகமாகும் " என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றனர் .
ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்,அபூதாவூத் ,திர்மிதி.


"நல்ல கனவுகள் இறைவன் பாலிருந்து ஏற்படுகின்றன . தீய கனவுகள் ஷைத்தானைக் கொண்டு ஏற்படுகின்றன . எனவே உங்கல் எவரும் தீக்கனவு  கண்டு அதன் காரணமாகத் திடுக்கிட்டு எழுந்திருப்பின் அவர் தம் இடப்பக்கம் (எச்சில்) துப்பிவிட்டு இறைவனிடம் அதன் தீங்கைவிட்டும் பாதுகாவல் தேடினால் , அது அவருக்கு யாதொரு தீங்கும் நல்காது என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன் .
ஆதாரம்: புகாரீ,முஸ்லிம்

என்னை எவரேனும் கனவில் காணின் அவர் உண்மையாக என்னையே கண்டு கொண்டார் .ஏனெனில்  நிச்சயமாக ஷைத்தான் என் உருவைக் கொள்ள முடியாது ' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளிச் செய்தனர் என புகாரீயிலுள்ள மற்றொரு அறிவிப்பில் குறிப்பிடபடிகிறது.

"இறை நம்பிக்கையாளரின் கனவு , நபித்துவத்தில் நாற்பது பாகங்களில் ஒரு பாகமாகும் . அதனை அவர் பிறரிடம் கூறாத வரை பறவையின் காலில் கட்டப்பட்டவரை போன்று (நிம்மதியற்று ) இருப்பார் .அதனை அவர் பிறரிடம் கூறி விளக்கம் (பெற்று) விடின் அவருடைய பாரம் நீங்கி விடும் (என்று) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினர்.
ஆதாரம் : அபூதாவூத் ,திர்மிதி.

" உண்மையான கனவு சஹர் (வைகறைக்குச் சற்று முன்னுள்ள ) நேரத்தில் காண்பதாகும் ' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
ஆதாரம்: திர்மிதி.

கனவின் பலன்:
அக்கினி (நெருப்பு )       செல்வமுள்ள மனைவி வாய்ப்பாள் ,சமூகத்தில் நல்ல மென்மையான கவ்ரவம்  உண்டாகும்.

அக்கினியைக் கையால்எடுத்தால் :      நாளுக்கு நாள் செல்வம் பெருகி அளவிலாச் செல்வந்தனாவாய் . வீண் செலவுகள் ஏதும் ஏற்படமாட்டா .

அக்கினி மூட்டிச் சமைத்தால் : எதிர்பாராத விதத்தில் அதிக நன்மைகள் உண்டாகும். வீண் விரம்யம் ஏற்படமாட்டா .

அக்கினியால் தனது உடை எரித்தால் : கண்பார்வை நாளுக்கு நாள் மங்கி வரும் ; கவலைகள் அதிகரித்து மன அமைதி குலையும் .

அல்லாஹ்வின் பக்தர்களைக் காணுதல் :        இது தலைமைத் தன்மையின் அடையாளமாம் ஏதேனுமொரு சமூகத்தில் ,சங்கத்திற்கோ , மன்றதிற்கோ, கூட்டதிர்க்கோ தலைவராவீர் .

அத்திப் பழம் சாப்பிட்டால் : எதிர்பாரா வகையில் நல்ல பொருள்கள் கிடைக்கும், பிரயோசனம் அதிகம் உண்டாகும்.

அத்தி இலை:  அச்சம் வியாதி முதலியவை ஏற்படுவதற்கான அடையாளம் இது .

அதிக விரல்களைக் காணுதல் : உங்கள் நோக்கம் பயன்படாமல் விளகிபோகும் எனினும் உங்களைப்  பிடித்துள்ள கவலையும் குழப்பமும் நீங்கும்.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!