அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

திங்கள், நவம்பர் 25, 2013

கசப்பானச் சர்க்கரை


கசப்பானச் சர்க்கரை
ஒரு சிறிய பார்வை!!!

சர்க்கரையின் தன்மை இனிப்பு ,ஆனால் இப்போ அது கசப்பானது. மனித உடம்பில் சர்க்கரை என்னும் நோய் இரத்தத்துடன் கலந்து விட்டால் அது கசப்பாக மாறிவிடுகிறது .கசப்பு மனிதனுக்கு நலவு தான் ஆனால் கசப்பான சர்க்கரை நோய் கெடுதல் தானே ! இனிப்பு வகைகள் அதிகமாக சாபிடுவதினால் சர்க்கரை நோய் வராது( வேண்டுமானால் மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள் ) பெரும்பாலும் மருத்துவர்கள் கூறுவார்கள் இந்த நோய் வருவதற்கு காரணம் குடும்பத்தில் யாரவது ஒருவருக்கு இருந்தால் இந்த சர்க்கரை நோய் வரும் என்று " எந்தளவுக்கு உண்மை என்று சொல்லமுடியாது .

இந்த சர்க்கரை நோய் வந்தால் உடம்பு பெருக்கும் அல்லது உருக்கும் இரண்டில் ஒன்று உறுதி ! இந்த சர்க்கரை நோய் வந்தால் என்ன செய்வது ? வராமல் இருக்க என்ன செய்வது ?

30 வருடங்கள் அல்லது 40 வருடங்கள் முன்னடி செல்வோம் :
அந்த நாள் ஞாபகம் வந்ததே , அன்றே வாழ்ந்ததே சிறந்ததே ! ஆசையும் இருந்ததே ! நல்ல உணவு வகைகள் விளைந்ததே ! நல்லமனமும் இருந்ததே ! கலப்படம் இல்லாத உணவு வகைகள் கிடைத்தன ! கள்ளம்கபடம் இல்லாத வியாபாரிகள் வாழ்ந்து வந்தன ! நேர்மையும் , நாணயமும் மலிந்தன ! மக்கள்கள் நன்மைகள் மட்டும் அடைந்தன ! ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்தார்கள் ! பலன்கள் பெற்றனர் ! குறைவாக சம்பாதித்தாலும் நிறைவாக வாழ்ந்தார்கள்! நோய் நொடி இல்லாமல் இருந்தார்கள்!

மாவு அரைக்க கொடகள் இருந்தது அதிலே மாவு அரைப்பார்கள் (கைகளுக்கு பயிற்சியாக இருந்தது ) அம்மிக்கல் இருந்தது அதிலே அனைத்து மசாலா பொருட்களை அரைப்பார்கள் , வீட்டு வேலைகளை அதிகமாக செய்வார்கள் . வேலைகாரி இல்லை வீட்டுக்காரி தான் அனைத்து வேலைகளையும் செய்வாள் , குனிந்து வீட்டை பெருக்குவது , துணி துவைப்பது , வாரத்துக்கு ஒரு முறை வீட்டை கழுவது , வாரத்துக்கு ஒரு முறை தலைக்கு எண்ணை தேய்த்து குளிப்பது ,பிள்ளைகளுக்கும் அதுபோல செய்வது . காய்கறிகள் அதிகமாக சாப்பிடுவார்கள் , அன்று உணவு பண்டங்களில் எந்த கலப்படமும் இல்லை ,காய்கறிகளில் ,பழ வகையில் மருந்து போட்டு அல்லது தவறான முறையில் செய்ய மாட்டார்கள் . அப்பொழுது இந்த சர்க்கரை நோய் , உப்பு நீர்  இதுபோன்ற நோயிகள் உண்டா ? இருந்தது ரொம்ப ரொம்ப குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்று உணவுகளில் கலப்படம் , தரமான உணவுகள் இல்லை காய்கறிகள் அதிகமாக சாபிடுவதில்லை  மாமிசம்மும் ,கோழிகளும் எண்ணையில் வித விதமாக பொறித்து சாபிடுகிறார்கள். கடுமையான உழைப்பு இல்லை அதிகமாக உண்ணுகிறார்கள் ஆனால் குறைவாக வேலை செய்கிறார்கள் . அதிக நேரம் டிவியில் கழிக்கிராகள் டிவி பார்த்துகொண்டு நொறுக்கு தீனி சாபிடுகிறார்கள் , மாவு அரைக்க இருக்கிறது கிரைண்டர் , மிக்ஸ்சி இருக்கு , வீட்டை சுத்தம் செய்ய வேலைகாரி இருக்கிறாள் , வீட்டுக்காரிக்கு எந்த வேலையும் இல்லை . அதிகம் நேரம் உறக்கம்  உடம்பு தொப்பை போடுகிறது உடல் கணத்தாக காணப்படுகிறது. வீட்டை சுத்தமாக வைத்து கொள்கிறார்கள் ,இடத்தை சுகாதாரமாக அமைத்து கொள்கிறார்கள் , ஆனால் அவர்களின் ஆரோக்கியம் ? கேள்விகுறி ???  சர்க்கரை நோய் மட்டும் அல்ல எல்லா நோய்களும் வருவதற்கு நாம் தான் காரணம்! ஒரு தெருவிலிருந்து மற்றொரு தெருவுக்கு  போக வேண்டுமானால் அதற்கும் வாகனம். "  நடக்கும் ஆசை எப்பொழுது வரும் என்றால் இந்த சர்க்கரை நோய் வந்தால் மருத்துவர் கூறும் " யோசனை: அதிகமாக நடக்க வேண்டும் .அதிகமாக நடந்தால்தான் இந்த சர்க்கரை நோய் குறையும் என்று கூறும்பொழுது , அன்றுதான் நமக்கு யோசனை பிறக்கும்! இட் is  டூ late ............

வரும் முன் தடுப்போம் ,யோசிப்போம் ! ஓல்ட் is கோல்ட் ! பழமை என்றும் புதுமைதான் !
If there is any mistake found in this article please forgive me !allah forgive you !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!