வெள்ளி, நவம்பர் 29, 2013

ஈமான் முக்கியமா ? காதல் முக்கியமா ?





அல்லாஹ் தஆலா கூறுகிறான்:
நிச்சயமாக தன்னுடைய நல்வழியை விட்டுதவரியவன் யார் என்பதை உம் இறைவன் நன்கு அறிவான் -அவ்வாறே நல்வழியில் செல்பவர்கள் யார் என்பதையும் அவன் நன்கு அறிவான் .
அல்குர் ஆன் :6:117)


முஃமின்களே!)  "வெளிப்படையான பாவத்தையும் , அந்தரங்கமான பாவத்தையும் விட்டுவிடுங்கள் . நிச்சயமாக எவர்கள் பாவத்தைச் சம்பாதிக்கின்றனரோ , அவர்கள் சம்பாதிதவற்றுக்குக் கூலி கொடுக்கப்படுவார்கள் .
அல்குர் ஆன் :6:120

நிச்சயமாக எவர்கள் நம்மைச்  சந்திப்பதை (ச சிறிதும் ) நம்பாது , இவ்வுலக வாழ்க்கையை (மிகவும் ) விரும்பி , அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்து கொண்டும் இருக்கிறார்களோ -

அவர்கள் சம்பாதித்த (தீமைகளின் ) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம்தான் .

நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் ஈமான் கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான் ; இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.

அதில் அவர்கள் "( எங்கள்) அல்லாஹ்வே ! நீ மகா பரிசுத்தமானவன் " என்று கூறுவார்கள் ; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும் . "எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே " என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகவும் இருக்கும்.

(அல்குர் ஆன் ;10:7,8,9,10.

உலகம் விசுவாசிகளுக்கு  சிறைசாலை யாகவும் நிராகரிப்போருக்கு சுவர்க்க பூஞ் சோலையாகவும் இருக்கின்றதுஎன ரசூல் (ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பாளர் :அபூஹுர்ரைரா (ரலி)
ஆதாரம்: முஸ்லிம்.

எவன் தன் மனத்தைக் கட்டுப் படுத்தி கொண்டு மரணத்திற்குப்பின்  வரவிருக்கும் வாழ்க்கைக்காக அமல்  செய்கிறானோ அவனே புத்திசாலி ஆவான் . தன்னைத் தன் மனத்தின் தகாத  இச்சைகளின் பின்னே அலைய விட்டு விட்டு அல்லாஹ்விடம் தவறான நம்பிக்கை வைத்துக்  கொண்டிருப்பவன் முட்டாள் ஆவான் .என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
ஆதாரம்:திர்மிதி.

இந்த இளமை பருவம் எதுவும் அறியாத பருவம் அவர்களுக்கு எதுவும் சொன்னாலும் கேட்க்கும் நிலைகளில் இல்லாத பருவம். அவர்களின் ஆசைகளும், விருபங்களும் தான் அங்கே பிரதிபலிக்க வேண்டும் என்று அந்த இளமை பருவத்தில் நினைப்பார்கள்.பெரியோர்களின் பேச்சுகளை பெரிதாக எடுத்து கொள்ளமாட்டார்கள் ,மதிக்கவும் மாட்டார்கள். அந்த சூழ்நிலையில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு பொருள் அது கேட்டதோ அல்லது அது நல்லதோ என்று கூட எண்ணிப்பார்க்க மாட்டார்கள். எனக்கு இது பிடித்திருக்கு ஆகையால் நான் அதைதான் விருபுகிறேன் என்று பிடிவாதமாக சொல்லிவிடுவார்கள் . பிறகு என்ன ஆகும் என்று கூட சிந்திக்க மாட்டார்கள் இளமை பருவத்தில் எடுக்கும் முடிவு அந்த முடிவு அவர்களுக்கு இடியாக தான் வந்து விழும் என்பது கூட அவர்கள் அந்த வயதில் அறிய மாட்டார்கள். எனக்கு கிடைக்க வேண்டும் என்று அவர்களாகவேசாக்கடையில் போய் விழுகிறார்கள்.

ஒருவனையோ அல்லது ஒருத்தியோ காதலிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தெரியக்கூடிய ஒரே விடயம் அந்த காதல் ,அவனை (அவளை) நான் அடைய வேண்டும் என்ன ஆனாலும் எது நடந்தாலும் எதைப் பற்றியும் கவலை இல்லை. ஒரே நோக்கம் அந்த காதல் மயக்கம் , அந்த காதல் படுத்தும் பாடு படாத பாடுபடுத்தும் . பகைமையை உண்டாகும் , கவலையை தரும் பல இன்னல்கள் வரும் இந்த காதலினால் பெற்றோர்களுக்கு அவர்களைச் சார்ந்த உறவினர்களுக்கு.

மகனோ (மகளோ) ஆசைப்பட்டான் என்ன செய்வது என்று பெரும்பாலும் பெற்றோர்கள் சேர்த்து வைக்கும் முடிவில்தான் இருக்கிறார்கள் . அவர்களின் எதிர்காலம் சில காலத்துக்கு பிறகு கேள்விக்குறியாக தான் அமையும் .

ஈமானை இழக்கும் முடிவுக்கு வருகின்ற சில காதல்கள் உண்டு இதுதான் மிக பெரிய கொடுமையான காதல்! " எனக்கு உறவுகளும் வேண்டாம் இந்த மார்க்கமும் வேண்டாம் எனக்கு வேண்டியது இந்த காதல்மட்டும் போதும் என்ற நிலைமைக்கும் கொண்டு போய் விடுகின்ற அளவுக்கு இந்த காதல் மோகம் வந்துவிட்டது. நிறைய குடும்பங்களில் இதுபோன்ற சூல்நிலைகள வந்துகொண்டுதான் இருக்கிறது . ஈமானை இழப்பது பெரும்பாலும் பெண்கள்தான் என்பது அறிந்த கொடுமையான விஷயம்! ஆண் பிள்ளைகள் காதலிப்பது முஸ்லிம் அல்லாத பெண்களை , பெண் பிள்ளைகள் காதலிப்பது முஸ்லிம் அல்லாத ஆண்களை .இவர்கள் (முஸ்லிம் பிள்ளைகள்) அந்த பெண்களை இஸ்லாத்துக்கு சேர்த்து விடுகிறார்கள் , அவர்கள் காதலுக்காக எத்தனை கலிமா வேண்டுமானாலும் சொல்ல தயார் ! பிறகுதான் தெரியும் என்ன ஆகும் என்று. முஸ்லிம் பெண்கள் அவர்களை இஸ்லாத்துக்கு கொண்டு வர முடியாத பட்சத்தில் இவர்கள் அங்கே போகிறார்கள் ஈமானை இழந்து . அப்படி அவன் இஸ்லாத்துக்கு வந்தாலும் கலிமா சொன்னாலும் அவன் இஸ்லாத்தின் படியா நடக்க போகிறான் (இவளுக்கே இஸ்லாத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது ) ? பிறகு என்ன ஆகும் ? கேள்விப்பட்டவரையில் பெரும்பாலும் முஸ்லிம் பெண்கள் காதலுக்காக ஈமானை இழந்து காதல்தான் முக்கியம் என்று அவர்களுடன் சென்று விடுகிறார்கள் ,அவர்களுடைய கலாச்சாரத்தின் படி திருமணம் செய்து கொள்கிறார்கள் .இது உண்மையா அல்ல்லது நான் சொல்வது பொய்யா என்று நீங்களே சிந்தித்து பாருங்கள் . இன்று நடக்கும் கூத்துக்கள் ஒன்று அல்ல இரண்டு அல்ல ரொம்ப அதிகம் . காதல் என்ற பெயரிலே இவர்கள் அடிக்கும் கூத்து கும்மாளம் கொஞ்சம் நஞ்சம் இல்லை.


இந்த காதலுக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் ,இல்லையென்றால் இது வைரஸ் போல பரவிவிடும் . இந்த விடயத்தை பற்றி ஒவ்வொரு பெற்றோர்களும் ,நம் சமுதாயமும் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும் ! நம் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி இன்றே நாம் யோசிக்க வேண்டும் ,ஒவ்வொரு ஊரிலும் பள்ளி விடுமுறை நாளில் பெண்களுக்கு மார்க்க கல்வி போதிக்க வேண்டும் , இறைச்சமுள்ளவர்களாக அவர்களை கொண்டு வர வேண்டும்.

இந்த செல் போனினால் நன்மைகள் குறைவு ஆனால் , தீமைகள் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த செல் போன் எல்லாக் கைகளிலும் தவழ்கிறது ,இந்த செல் போனினால் விபரிதங்கள் ,பிரச்சனைகள் தவறான அணுகு முறைகள் ,ஆபாசங்கள் தவறான அழைப்புகள் இன்னும் பட்டியல் போடலாம் ... இந்த செல் போனை வைத்து நெட் கார்டு போட்டு அதன் மூலமாக இன்டர்நெட் வழியாக ஆபாசங்கள் ,அசிங்கங்கள் , பார்ப்பது , காம கதைகள் படிப்பது இதுபோன்ற தவறான செயல்கள் மூலம் பாலியல் குற்றங்கள் ,காதல் செய்து காம பசியை தீர்த்துகொள்வது. எல்லாக் கெட்ட செயல்களும் நடக்கின்றன . இந்த செல் போனை வைத்து பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று கூட பெற்றோர்கள் கவனிப்பதில்லை , அவன் ஏதோ கேம் விளையாடுகிறான் என்று நினைத்து கொண்டு இவர்கள் சும்மா இருந்து விடுகிறார்கள் . பிரச்சனை என்று வந்தால் அப்பொழுதுதான் இவர்களுக்கு புரிகிறது . இச்சைகளை தூண்டுவது இந்த ஆபாசங்கள் , அதை அடைய வேண்டும் என்று மனசு துடிக்கிது ஒரு பெண்ணை பார்த்தவுடன் காதல் செய்ய பிடிக்கிது , காதல் வலையில் சிக்கி இந்த பெண்ணு தவிக்குது  கற்பை இழந்து பரிதாகமாக நிற்கிறது . காதலின் முடிவு பல வகைகள் இருக்கலாம் ஒன்று ஈமான் இழந்து ,கற்பை இழந்து , தற்கொலை அல்லது விபசாரத்தில் தள்ளபடுது ஏதாவது ஒன்று நடக்கும்.இது உறுதி !

இந்த காதலினால் எத்தனை பெற்றோர்கள் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருகிறார்கள் . மனைவி இருந்ததும் ஒரு கள்ளகாதலி அவள் யாருடன் ஒடிவிட்டாள் அதனால் இவன் தற்கொலை முயற்சி இதைக் கேட்கவே அசிங்கமாக இருக்கிறது. பெற்றோர்களுக்கு தெரியாமல் ஓடி வந்து சில பெண்கள் அவர்களுடைய கற்பை இழந்து தற்கொலையும் செய்து கொண்டார்கள் என்று அன்றாடம் செய்தி தாள் மூலம் நாம் படிக்கிறோம். அதிகமாக இந்த காதலில் ஏமாந்து போவது பெண்கள்தான் என்பது ஏன் பெண்களுக்கு புரியவில்லை ? முஸ்லிம் பெண்கள் ஈமானை இழந்து ,கற்பையும் இழந்து தத்தளித்து கொண்டு இருக்கிறார்கள் என்பது ஏன் இன்னும் உங்களுக்கு புரியவில்லை ?

இவன் இல்லை என்றால் இன்னொருவன் ஈமான் இல்லை என்றால்  ? உன் நிலை என்ன ஆகும் ? அற்ப சுகத்துக்காக காதலுக்காக விலை மதிக்க முடியாத ஈமானை இழப்பதா ? முஸ்லிமாக பிறந்து காஃபிராக மரணிக்க வேண்டுமா ? (அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:" மறுமையில் காஃபிர்கள் கூறுவார்கள் நாங்கள் முஸ்லிமாக இருந்திர்க்க வேண்டாமா என்று புலம்புவார்கள் ") சிந்திக்க வேண்டாமா அருமை சகோதரிகளே ! நீங்கள் சுவனவாசிகளாக ஆக வேண்டும் அல்லாஹ் நாடினால் ! ஈமான அல்லது காதலா ? எது வேண்டும் உங்கள் கையில் .
பெற்றோர்களின் மானம் ,மரியாதையும் உங்கள் கையில் மறந்துவிட வேண்டாம் .
அஸ்ஸலாமு அழைக்கும்!

குறிப்பு: இந்த கட்டுரையில் ஏதாவது தவறு இருப்பினும் , சுட்டிக்காட்டவும் அல்லாஹ்வுக்காக என்னை மன்னிக்கவும் .
please contact me by email: sathiya.pathai.islam@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!