திங்கள், நவம்பர் 18, 2013

உலமாக்களை (மார்க்க அறிஞ்சர்களை) குறை பேசலாமா ?




மார்க்க அறிஞ்சர்கலான உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள் . மார்க்க கல்வியைப் பயில்வதற்காக பெரும் சிரம்பங்களை மேற்கொண்டு ஏராளமான அறிவைப் பெற்றவர்கள் .எனவே அவர்களில் யாரையும் குறைவாக பேசுவதோ ,இழிவாக கருதுவதோ கூடாது . சில ஆலிம்கள் கற்ற இல்மின் பிரகாரம் அமல் செய்யாமல் இருக்கலாம் . நாம் அதை அல்லாஹ்விடம் விட்டு விட்டு அவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும்!
ஆனால் எந்த ஆலிம்களிடம் தக்வா உள்ள பயபக்தியான வாழ்கையும் சாலிஹான அமலும் உள்ளதோ அந்த ஆலிம்களிடம் மட்டும் நாம் தொடர்ப்பு கொண்டு நமக்கு தேவையான மார்க்க அறிவை பெற வேண்டும்! தக்வாவும் சாலிஹான அமலும் இல்லாத ஆலிம்களிடம் கண்ணியமான முறையில் அவர்களைச் சீர்திருத்த முயற்சி செய்யலாம் . குர்ஆனில் சில அச்சுப்பிழை உள்ளவையும் வேறு சில அச்சுப்பிழை இல்லாமல் சரியாகவும் உள்ளன .அச்சுப்பிழை உள்ளதைப் புறகணிக்க மாட்டோம் .ஆனால் கண்ணியமான முறையில் அதை ஓர் இடத்தில் வைத்துவிட்டு   அச்சு சரியாக உள்ளதைப் பார்த்து ஓதுவோம் .அதைப் போன்றுதான் அமல் இல்லாத ஆலிம்களை அவமதிக்க கூடாது . அவர்களின் ஆலோசனைகளைப் பெறவும் கூடாது. ஆனால் அச்சு சரி இல்லாத குரானை கண்ணியபடுத்தியது போன்று அமல் இல்லாத ஆலிம்களையும் கண்ணியப்படுத்த வேண்டும்!.

ஓர் ஊரிலுள்ள தக்வா உடைய ஆலிமை அவ்வூரைவிட்டு வெளியேற்றிவிட்டார்கள் . அந்த ஆலிம் வேறு ஊரில் குடியமர்ந்து விட்டார்கள். சில நேரங்களில் சொந்த ஊரின் நினைவு வந்து மன சஞ்சலமடைவார்கள் . அந்நேரங்களிலேல்லாம் அவர்களின் சொந்த ஊரில் நெருப்பு பிடித்து விடும் .அவ்வூர் மக்கள் அந்த ஆளிமிடம்   நீங்கள் எங்களை பத்து ஆ  செய்கின்றீர்களா ? என்று கேட்டபோது  , "இல்லை . எனக்கு ஊர் நினைவு வந்தால் என் மனம் சஞ்சலடையும் " என்று கூறவே , ஊரில் நெருப்பு பிடிக்கும் காரணத்தைப் புரிந்து கொண்டார்கள் .இதுபோன்று இன்னும் பல சம்பவங்கள் உண்டு.

இன்று சர்வசாதரணமாக தௌஹீத் வாதிகள் ஆலிம்களை குறை பேசுவதை நாம் பார்க்கிறோம் ! சில ஆலிம்கள் தவறு செய்கிறார்கள்  (தவறு செய்வது மனித இயல்பு ,அவர்களும் மனிதர்கள்தான் ) அவர்களை குறை சொல்வதினால் என்ன பலன் ? அவர்களை பற்றி குறை சொல்லிக்கொண்டு திரிவதினால் நமக்குதான் பாவம்  . அவர்களை மென்மையாக சொல்லி சீர்திருத்த வேண்டும் நல்ல முறையில் அணுகி எடுத்து சொல்ல வேண்டும்! எடுத்தோம் கவுத்தோம் என்று இல்லாமல் , பொறுமையாக அறிவுர்த்த வேண்டும்.  ஒரு வாகனத்தை எடுக்கும்போது சாவி போட்டு முதல் கீர் போட்டு மெதுவாக தான் போக வேண்டும் ஆரம்பத்திலே ஆக்சுலட்டர் வேகமா அழுத்தினால் வாகனம் எங்கே போய் நிற்கும் அந்த வாகனம் ஏதாவது ஒரு இடத்தில் மோதித்தான் நிற்கும் . இது ஒரு சிறிய ஊதாரணம் !

அப்படிதான் இந்த தௌஹீத் வாதிகள் நடந்து கொள்கிறார்கள் , அவர்களின் கடுமையான பேச்சு , நடவடிக்கை அனைத்தும் மற்றவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கிறது .இன்னும் அவர்களை பற்றி சொல்லி கொண்டே போகலாம் , நோக்கம் அவர்களை குறை சொல்வதின் நோக்கம் இல்லை , அவர்கள் கண்முடித்தனமாக நடக்கிறார்கள் ,நடத்து கொள்கிறார்கள் அவர்களுக்கு அல்லாஹ் மென்மையும் , பணிவையும் , கனிவான சொற்களையும் தருவானாக ...ஆமீன் !

நன்றாக புரிந்துகொண்டோம் என்றால் ஏது பிரச்சனை , ஒற்றுமைதான் நிலவும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!