அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

வியாழன், நவம்பர் 14, 2013

பெண்


பெண்

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம்செய்கிறேன்...
அல்லாஹ்வினால் அங்கிகரிக்கப்பட்ட மார்க்கம் தான் இஸ்லாம் ,மற்றவைகள் ஏற்கபடாதவைகள் .


பெண்ணுக்கு இஸ்லாத்தில் நிறைய உரிமைகள் உண்டு , பெருமைகள் உண்டு , கண்ணியவான்கல் ஆக இருப்பார்கள் . பெண்ணை கண்ணியப்படுத்தவேண்டும்  அவர்களின் உரிமைகளை கொடுக்க வேண்டும் அவர்களை நல்லவிதமாக நடத்தவேண்டும்! பெண்கள் என்பவள் இரண்டு கண்களை போல கவனமாக பாதுகாத்து வர வேண்டும்!
பெண்ணுக்கு மாதவிடாய் காலத்தில் உங்களுடன் இருப்பார்கள் ,உண்ணுவார்கள் ,பருகுவார்கள் அவர்களை ஒதுக்கி வைத்து விட கூடாது என்று சொல்லும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டும்தான் .

பெண்கள் அவர்கள் பாதுக்காக்ககூடிய முத்துக்கள் , வைரங்கள் விலை மதிக்க முடியாத பவளங்கள் . பெண்கள் அவர்கள் கூடன் கற்கள் அல்ல கண்டவர்கள் மிதித்து விட்டு போவதற்கு .பெண்கள் போகிஷங்கள்  அவர்கள் போதை பொருள்கள் அல்ல . பெண்களை ஒரு வைரமாக பார்க்கும் இஸ்லாம் உலகம் அவர்களை விலை மாதுக்களாக , போதை பொருள்களாக பார்க்கிறது ,நடத்தி கொண்டு வருகிறது .

பெண்களை தவறாக பயன்படுத்து கொண்டு வரும் இந்த மாய உலகம் ,சில காம வெறிபிடித்த மனிதர்களுக்கு இரையாக ஆக்கபடுகிரார்கள் ! ஒரு விளம்பரத்தில் ஒரு ஆண் தன் உடம்பில் வாசனை திரவத்தை பூசிகொள்வது போல , அவனை சுற்றி பல பெண்கள் அந்த வாசனைக்கு மயங்குவதை போல நிறைய விளம்பரங்கள் இருக்கிறது .

ஒரு பொருளை மூடி பாதுகாத்து வைத்தால் அந்த பொருள் மீது எந்த எறும்புகள் அல்லது ஈக்கள் மொய்க்க முடியாது ,நெருங்கவும் முடியாது . அதுபோல ஒரு பெண் வீதியில் போகும்போது அவள் தன் உடம்பை முழுதும் மறைத்து கொண்டு போனால் , எந்த ஆண்கள் கண்களும் அவள் மீது படாது , அவளை அல்லாஹ் பாதுகாப்பான் ! மாறாக ஒரு பெண் அரை குறையுடன் ஆடை அணிந்துகொண்டு வெளியில் போனால் என்றால் ,அவள் மீது எல்லோருடைய கண்களும் படும் (பெரும்பாலும் பெண்கள் சுடிதார் அணிந்து கொண்டு செல்வார்கள் மேல் துப்பட்டாவை கழுத்தில் சுற்றி இருக்கும் ,மறைக்க வேண்டிய இடம் வெளியில் தெரியும் ,அந்த இடம் ஆண்களுக்கு இச்சையை தூண்டும் .) ஆண்கள் ரசிப்பது பெண்களின் மார்புகளைதான் அவர்களுடைய கண்களுக்கு அவைகள்தான் முதலில் தெரியும்!
இது ஒரு காரணம் பாலியல் குற்றம் நடப்பதற்கு . பாலியல் குற்றம் நடப்பதற்கு இந்த ஆடைகள வழி வகுக்கிறது என்பது எதார்த்த உண்மை . இஸ்லாம் அந்த ஆடை விடயத்தில் கவனமாகவும் ,கண்டிப்பாகவும் இருக்கும் என்பதை ஏன் உலகம் எதிர்க்கிறது ? இஸ்லாத்தில் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை ,உரிமை இல்லை என்று பெரும்பாலும் ஊடகங்கள் கோஷம் போடுகிறது , அந்த ஊடகம் பெண்களை வைத்து ஆபாசம் அசிங்ககள் செய்து வருகிறார்கள் பெண்களை ஆபாசமாக படம் போட்டு பணம் சம்பாதிகிரார்கள் , இவர்கள் தான் பெண்களின் சுதந்திரத்தை பற்றி வாய் கூசாமல் பேசுகிறார்கள் !

இஸ்லாம் மட்டுதான் பெண்களை ஒவ்வொரு வயதை கடக்கும் பொது அவர்களை பக்குவபடுத்துகிறது . வயதுக்கு வந்த பெண்கள் எப்படி இருக்க வேண்டும் ! அவர்கள் எப்படி நடக்க வேண்டும் அந்நிய ஆண்களுடன் பழக கூடாது பேச கூடாது தனிமையில் இருக்க கூடாது அவர்கள் கல்வில்யில் விடயத்தில் கவனமாக இருக்க சொல்கிறது , கல்லூரிகளுக்கு போவதையோ இஸ்லாம் தடுக்கவில்லை மாறாக ஒரு பெண் பர்தா இல்லாமல் போவதை மட்டும் தடுகிறது .

இஸ்லாம் சொல்லும் ஒவ்வொரு அறிவுரைகள் , போதனைகள் மனித வாழ்வுக்கு ஏற்ற தாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஒரு துளி கூட இல்லை . மாற்று மத பெண்களும் இஸ்லாத்தை பற்றி முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்! பெண்களுக்கு  கண்ணியம் பாதுகாப்பு அனைத்தும் எல்லாம் கிடைக்க கூடிய ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டும்தான் என்பதை முஸ்லிம் அல்லாத பெண்கள் உணர வேண்டும்!

எவன் புகழ்க்காகவும் பகட்டுக்காகவும் இவ்வுலகில் ஆடை அணிகின்றானோ அவனுக்கு கியாம நாளில் இழிவான ஆடையை அல்லாஹ் அணிவிப்பான் என ரசூல் (ஸல்) கூறினார்கள் .ஆதாரம்: அஹ்மத் .

அந்நிய ஆணும் அன்னியப் பெண்ணும் தனிமையில் இருக்க வேண்டாம் . மஹ்ரமான ஆண் உடன் இல்லாமல் எந்தப் பெண்ணும் பிரயாணம் செய்ய வேண்டாம் என ரசூல்(ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி ,முஸ்லிம்.

ஒரு பெண்ணுக்கு ஆடை என்பது அவளின் அழகையும் , உடலையும் மறைக்கத்தான் . மாறாக ஒரு பெண் அவள் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம் , விதவிதமாக மாடர்னாக அணிந்து கொண்டு வெளியில் போகலாம் என்று நினைத்தால் ஆபத்து உங்களுக்குத்தான் என்பதை நீங்கள் உணர வேண்டும் !

ஆண்களை ஈர்க்க கூடிய ஒரு விடயம் இருக்கும் என்றால் அது பெண்ணின் மார்புகள்தான் .அவைகளை மூடி மறைக்காமல் ஈர்க்கும் வகையில் வெளியில் சென்றால் , பாலியல் குற்றம் அதிகரித்து கொண்டுதான் இருக்கும் .குற்றம் செய்தவனுக்கு எந்த தண்டனையும் இல்லை ,அப்படி தண்டனை கொடுத்தால் வழக்கு இழுத்து கொண்டே போகும் , சிறையில் வைத்து அவர்களை உணவு கொடுப்பார்கள் ,காலம் சென்று விடும் வழக்கும் தவறான முறையில் முடிந்து விடும் !

பெண்ணுக்கு அடக்கம் ,ஒழுக்கம் , வெட்கம் , பணிவு , பண்பு தன்மை அனைத்தும் இருக்க வேண்டும் ! இவைகளை போதிக்கும் மார்க்கம் தான் இஸ்லாம் !

ஒரு சம்பவம் , ஒரு நாட்டில் வீதியில் ஒரு பெண் நடந்து சென்றால் , அவள் அறையும் குறையுமாக ஆடை அணிந்து கொண்டு அழகை வெளியில் தெரிம்யும்படி காட்டி கொண்டு போனால் , ஒரு வாகனத்தில் ஒரு ஆண் அவளைப் பார்த்து கொண்டே வேற ஒரு வாகனத்தில் மோதிவிட்டான் ,அவன் பின்னாடி வந்த ஒரு வாகனமும் இவனால் அவனும் மோதி கிழே விழுந்தார்கள் .அப்படி உயிர்க்கு ஆபத்து வரும் நிலை இருந்தால் என்ன ஆகும் , ? கொஞ்சம் சிந்திக்கவும்!

பெண்ணைப் பற்றி பெண்ணுக்கு தெரிய வில்லை , அவள் கண்ணியமாக இருக்க வேண்டியவள் , இழிவான நிலைக்கு அவளே ஆளாகிறாள் !

அல்லாஹ் மிகவும் அறிந்தவன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!