அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வெள்ளி, நவம்பர் 22, 2013

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர்!அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம்செய்கிறேன்...
நாம் மார்க்கத்தை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும்! நமக்கு மத்தியில் நிறைய குழப்பங்கள் , கருத்து வேறுபாடுகள் இருக்கிறது , இருப்பினும் நாம் நிதானமாக சிந்திக்க வேண்டும்.  யார் சொல்வது உண்மை அல்லது பொய் என்று நாம் குழப்பிக்க கூடாது நடுநிலையாக இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டும்! இவரா அல்லது அவரா ? இந்த இயக்கமா ? அந்த ஜமாத்தா ? எதுவும் நமக்கு தேவையில்லை நாம் பொதுவான ஜமாஅத் ! நடுநிலையாக இருக்க வேண்டும் ! எல்லோரு முஸ்லிம்கள்தான் , சகோதரர்கள்தான் என்பதை நாம் மதிக்க வேண்டும் !
இது என் தாழ்வான கருத்து .


வரட்டு வாதங்களைக் கூறி சமாதி வழிப்பாட்டை நியாப்படுத்துவது போலவே குர் ஆனிலிருந்தும் கூட தவறான வியாக்கியானம் கொடுத்து இவர்கள் ஆதாரங்களைச் சமர்பிக்கிறார்கள் .

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள் ! மாறாக உயிருடன் உள்ளனர் . எனினும் உணர மாடீர்கள் . (அல்குர் ஆன் 2:154)

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள் ! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர் . உணவளிக்கப்படுகின்றனர் .
(அல்குர் ஆன் 3:169)

மரணித்த பின்பும் நல்லடியார்கள் வாழ்கிறார்கள் என்று இரண்டு வசனங்களும் கூறுவதால் அவர்களை வழிப்படலாம் என்பது இவர்களின் வாதம் (சுன்னத் ஜமாஅத் )

பல நியாயமான காரணங்களால் இவர்களின் வாதம் முற்றிலும் தவறாகும் .
முதலாவது வசனத்தின் உயிருடன் உள்ளனர் . எனினும் (அதை) நீங்கள் உணர மாட்டீர்கள் என்று கூறப்படுகிறது .

அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் தெரிந்து வைத்துள்ள அர்த்தத்தில் அல்ல . மாறாக இதை நீங்கள் உணர முடியாது என்று இங்கே அல்லாஹ் தெளிவுப்படுத்துகிறான் . நாம் உணர்ந்து கொள்ள இயலாத வேறொரு விதமான   வாழ்க்கையை  அவர்கள் வாழ்ந்து கொண்டிருகின்றனர் .

இரண்டாவது வசனத்தில் தங்கள் இறைவனிடம் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்கிறான் . நம்மைப் பொறுத்த வரை அவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனிடம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருகிறார்கள்.

நாம் பேசுவதைக் கேட்கவோ . பதிலக்கவோ இயலாத நமக்குத் தெரியாத இன்னொரு வாழ்க்கையை அவர்கள் வாழ்வதாக தான் இந்த வசனங்கள் கூறுகின்றனவே அன்றி இவர்கள் நினைக்கின்ற அர்த்தத்தில் வாழ்கிறார்கள் எனக் கூறவில்லை .

அடுத்து இந்த வசனம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டோம் . அதற்கக் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். " அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்து பறவைக் கூட்டுக்குள்ளிருந்து சொர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரிகின்றன " என்று விளக்கமளித்தார்கள் . (அறிவிப்பவர் இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் முஸ்லிம் 3500)

உயிருடன் உள்ளனர் என்பதன் பொருள் சொர்க்கத்து வாழ்வு தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கிய பின் அதற்க்கு மாற்றமாக இவர்கள் (சுன்னத் ஜமாஅத்) தரும் விளக்கம் தள்ளப்பட வேண்டியதாகும்.

இந்த நிலை எல்லா நல்லடியார்களுக்கும் பொதுவானதன்று  அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு  கொல்லப்பட்டவர்களுக்கே உரியதாகும் . மற்ற நல்லடியார்களுக்கு இந்த நிலைமை  இல்லை.

மற்ற நல்லடியார்களின் நிலை என்ன என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது .

ஒரு நல்லடியார் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் கேள்விகள் கேட்கப்படும் . அவர் சரியாக பதில் கூறுவார் . அதன் பின்னர் " புது மணமகனைப் போல் நீ உறங்கு ! அல்லாஹ் உன்  உறக்கத்திலிருந்து உன்னை எழுப்பும் வரை உறங்கு !" எனக் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
(சுர்க்கம்)

அஹ்மத் , திமிதி ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ளன .

உயிருடன் இருந்தாலும் கூட கியாமநாள் வரை எழாமல் உறங்கி கொண்டே இருப்பவர்களை அழைப்பது என்ன நியாயம் ?
இதையெல்லாம் விட்டுவிடுவோம் . இவர்கள் நினைக்கின்ற விதமாக உயிருடன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம் .
உயிருடன் இருப்பது மட்டும் பிரார்த்தனை செய்வதற்குரிய  தகுதியாகுமா ?

இருவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்காக அவரிடம் போய்ப் பிள்ளையைக் கேட்க முடியுமா ? மழையைக் கேட்க முடியுமா ? உயிரோடு இருப்பதால் பிரார்த்திக்கிறோம் என்றால் பிரார்த்திப்பவர்களும் உயிருடன் தான் உள்ளனர் ?

வாதங்கள் எப்படிவேண்டுமானாலும் செய்யலாம் பாமர மக்களிடம் எப்படி வேண்டுமானாலும்  விளக்கம் தரலாம் . ஆனால் அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் நீங்கள் செய்து கொண்டிருப்பதை அவன் பார்த்து கொண்டிருக்கிறான் என்பதை யாரும் மறுக்க இயலாது . அல்லாஹ் மிகவும் அறிந்தவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!