சனி, நவம்பர் 23, 2013

திருமணங்களும் சட்டங்களும்





வினா :
ஒரு சகோதரன் ஒரு பெண்னை திருமணம் முடிப்பதற்கு ஆண் பெண்
இருதரப்பிலும் முடிவெடுக்கப்பட்டு விட்டது. என்றாலும்
திருமணம் தாமதமாகியே நடைபெறும். இதற்கு இடைப்பட்ட காலத்தில்
அவ்விருவரும் தனிமையில் இருந்து பேசிக் கொள்ளலாமா?

விடை:
ஒரு பெண்னை திருமணம் முடிப்பதற்கு முடிவெடுத்துவிட்டால்
அவளை அவரும் அவரை அவளும் திருமணத்தின் முன் பார்த்துக்
கொள்வது சுன்னத்தாகும். 'நபிகளாரும் அவ்வாறு பெண்னைப்
பார்ப்பதற்கு முகீறா (ரழி) அவர்களுக்கு கூறினார்கள்' (ஆதாரம் :
திர்மிதி, அஹ்மத் 18137)

இந்த அளவுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அவ்விருவருக்குமிடையில் திருமணம் நடைபெறும் வரை
அவ்விருவரும் ஒருவருக்கொருவர் மற்றவரை அஜ்னபியாகவே
கருதுவார்கள்.

சிலவேளை அவ்விருவருக்குமிடையில் திருமணம் நடைபெறாமலும்
விடலாம். மிகநெருக்கமாக பெற்றோரின் ஆதரவோடு இருந்த
எத்தனையோ சோடிகள் அவ்விருவருக்குமிடையில் திருமணம்
நடைபெறாமல் அவ்விருவரும் பிரிந்துவிடுவதை நாளாந்தம்
பார்த்து வருகின்றோம்.

எனவே திருமணம் முடிப்பதற்கு நிச்சயிக்கப்பட்டுவிட்டதால்,
அப் பெண் மனைவியின் அந்தஸ்த்தை அடைந்து விடமாட்டாள். எனவே
மனைவியோடு தனிமையில் சந்தோஷமாக கதைத்திருப்பது போன்று
இவருடன் தனித்திருக்க முடியாது. மூன்றாவதாக அங்கே ஷைத்தான்
வந்துவிடுவான்.

ஏனெனில் றசூல் (ஸல்) கூறினார்கள் ' எந்த ஒரு ஆணும் ஒரு
பெண்னோடு தனித்திருக்க வேண்டாம் மஹ்ரமானவர் அங்கே அவளுடன்
இருந்தாலே தவிர'  (ஆதாரம் : புஹாரி)

இந்த ஹதீதின் சட்டம் அவ்விருவரும் திருமணம் செய்யும் வரை
அவர்கள் மீது நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறே அவ்விருவரும் தொலைபேசி மூலம் கணவன், மனைவியர்களைப்
போன்று பேசிக் கொண்டிருகக் கூடாது. குறிப்பாக
காம உணர்வைத் தூண்டக் கூடிய பேச்சை பேசுவது பாவமாகும்.

எனவே இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு பெண்பிள்ளைகளின்
பெற்றோர்கள் நடந்து கொள்வது அவசியம். எப்போதாவது
இவர்தானே என் மகளை முடிக்கப்போகிறார் என்று நம்பி
அவ்விருவரும் தனிமையாக இருக்கக் கூடிய விதத்தில் பெண்
தரப்பினால் அனுமதி கொடுக்கப்பட்டதால்
நடந்துள்ள விபரங்களை நான் விவரிக்கத் தேவயில்லை.

அல்லாஹ் அளித்த சலுகையை துஷ்பிரயோகம் செய்யாமல் நடந்து
கொள்வதே ஒரு முஃமினின் கடமையாகும்

நன்றி srilankamoors .com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!