அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வெள்ளி, நவம்பர் 22, 2013

சோதனை+ மனவேதனை +சிரமம் =வெற்றி
அல்லாஹ்வின் திருபெயரால் .....
அல்லாஹ்வின் மார்க்கத்தை நோக்கி மக்கள்கள் வருகிறார்கள் , இன்ஷாஅல்லாஹ் இன்னும் வருவார்கள் . இதுதான் சத்திய மார்க்கம் , சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது !
இஸ்லாத்துக்கு வந்தவர்கள் புதியவர்கள் ,அவர்கள் இஸ்லாத்தை நன்றாக ஆராய்ந்து அறிந்து கொண்டு இஸ்லாத்தை ஏற்றவர்கள் ! சிரமத்துக்கு மத்தியில் சிலர் இஸ்லாத்தை கடைப்பிடித்து வருகிறார்கள்  அவர்கள் வீட்டில் எதிர்ப்பு  பல இன்னல்கள் ,தொல்லைகள் , அதிகமான சிரமங்கள் அவைகளுக்கு மத்தியில் ஒரு பெண் அல்லது ஒரு ஆண் (இஸ்லாத்தை ஏற்ற பிறகு) இஸ்லாத்தை முழுமையாக கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது ஒரு பெரிய விஷயம் தான் என்று சொல்ல வேண்டும்!  அந்த சிரமத்திலும்   இஸ்லாத்தை மன உறுதியுடன் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்து பின்பற்றி வருவது ஒரு வியப்பு ! எது வந்தாலும் வரட்டும் " நான் ஏற்ற இந்த இஸ்லாத்தை ஒருகாலமும் விட்டு விட்டு மறுபடியும் பழைய மதத்துக்கு திரும்ப மாட்டேன் என்று மன உறுதியுடன் " இருந்து வருவது அல்லாஹ்வின் மிக பெரிய உதவி என்று தான் சொல்ல வேண்டும். அல்லாஹ் உள்ளத்தையும் , செயலையும் பார்க்கிறான். மாறாக , உங்கள் ஆடைகளையோ அல்லது செல்வங்களையோ பார்ப்பதில்லை என்று ஒரு ஹதீஸின் கருத்து .

ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டால் , அவர் வீட்டில் எதிர்ப்பு இல்லாமல் இருக்காது அதையும் அவர் சமாளிப்பார் . மனம் தளந்து விடமாட்டார் , உறுதியாக நிற்பார்!
அவர் வீட்டில் சொல்லும் முதல் வார்த்தை " இவன் தீவிரவாதியாக மாறிவிட்டான் " இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறது என்று பெரும்பாலும் முஸ்லிம் அல்லாத மக்கள்கள் தவறாக விளங்கி வைத்துருகிரார்கள் . இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்டு ,இஸ்லாத்தின் மீது கால்புனர்ச்சி ,வெறுப்பு முஸ்லிம் மீது வெறுப்பு அவன் ஒரு தீவிரவாதி என்றல்லாம் பெரும்பாலும் மக்கள்கள் தவறாக நினைத்துகொண்டு இருக்கிறார்கள் . இதற்க்கு ஒரு முக்கிய காரணம் ஊடகம் தான் ! மீடியாக்கள்  பத்திரிக்கைகள் தொலைகாட்ச்சிகள் , இன்னும் சில மதம் வெறிபிடித்த மனிதர்கள் ,கட்சிகள் . இவர்கள் தான் இஸ்லாத்தை பற்றியும் , முஸ்லிம்களை பற்றியும் தவறான முறையில் பரப்பிக்கொண்டு வருகிறார்கள் . தீவிரவாதிகள் யார் ? தீவிரவாதம் செய்து கொண்டிருப்பவர்கள் யார் என்று சில நல்ல மக்கள்களுக்கு தெரியும் , இருபினும் அவர்கள் எதுவும் செய்ய முடியாது . உலகத்தில் உள்ள மீடியாக்கள் எல்லோரும் யூதர்கள் கையில் இருக்கிறார்கள்  யூதர்கள் இஸ்லாத்துக்கு எதிரியாக இருக்கிறார்கள் . மீடியாவை கையில் வைத்து கொண்டு எதுவேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று இவர்கள் (யூதர்கள், நஸ்ரானிகள் , இன்னும் ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் ) நினைத்துகொண்டு இருக்கிறார்கள் . இஸ்லாத்தையும் , இஸ்லாத்தை ஏற்று கொண்ட மக்கல்களையும் , இஸ்லாத்தை ஏற்க்க இருப்பவர்களையும் இவர்களால் எதுவும் செய்ய முடியாது .

இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் , தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம்தான் இஸ்லாம்!  ஒருவர்  தீவிரவாதியாக இருக்கிறார் என்றால் அவர் ஏதாவது ஒரு மதத்தை சார்ந்தவனாக தான் இருக்க முடியும் , அந்த மதத்துடன் இணைத்து பேசுவது அந்த மதமும் தீவிரவாதம் தான் என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம் ? ஒரு இந்தியன் ஒரு நாட்டில் திருடுகிறான் என்றால் அந்த திருட்டு பழி அவனை தான் சேரும் , அவன் இருக்கும் நாட்டை நாம் பழி சுமத்த முடியாது " இந்தியா திருட்டுக்கு வழி வகுக்கிறது ,திருட சொல்லி போதிக்கிறது என்று சொல்ல முடியாது " அதுபோல தான் இதுவோம் ஒருவன் தனிப்பட்ட முறையில் போராடுகிறான் என்றால் அவன் எதற்கு போராடுகிறான் ஏன் போராடுகிறான் என்றால் அவனுக்கும் அவனைச் சார்ந்த்த நாட்டுக்கும் தான் பிரச்சனை ஒழிய இது மத சமந்தபட்டது அல்ல என்பதை மக்கள்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்!

ஒரு ஹதீஸின் கருத்து :

சிரமத்திலுள்ள ஒரு மனிதனைக் கண்டு அவனின் சிரமத்தை நீக்குபவருக்கு அல்லாஹ் (கியாம நாளில் ) தன நிழலில் இடம் கொடுப்பான் என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி)
ஆதாரம் முஸ்லிம்.

சில நபர்கள் சிரமத்துடன் இஸ்லாத்தை ஏற்று வீட்டின் எதிர்ப்பினால் வெளி வந்து விடுவார்கள்  , அவர்களுக்கு நாம் தாம்  உதவி செய்ய வேண்டும்!  அந்த சிரமத்திலிருந்து  நீக்கி அவர்களுக்கு ஒரு நல்ல இடம் கிடைக்க உதவ வேண்டும்! இதற்க்கு என்று நிறைய  இடங்கள் இருக்கிறது புதிதாக இஸ்லாத்தை ஏற்று வருபவர்களுக்கு , அங்கே உதவி செய்பவர்கள் நிறைய பெயர்கள் உண்டு.

இஸ்லாத்தை ஏற்றவர்கள் அவர்களின் ஆர்வம் ,ஆசைகள் என்ன வென்றால் அவர்கள் சுதந்திரமாக இஸ்லாத்தை பின்பற்ற வேண்டும் அமல்கள் செய்ய வேண்டும் என்று துடிகிரார்கள் , ஆர்வமாகவும் இருக்கிறார்கள் . சில பேரின் நிலைமை தங்கள் வீட்டில் எதிர்ப்புகளும் ,தொல்லைகளும் இருக்கும் காரணத்தினால் அவர்கள் மேலே கூறியப்படி விரும்புகிறார்கள் .

ஆனால் , நாம் முஸ்லிமாக பிறந்து எந்த சிரமமும் இல்லாமல் இருந்து வருகிறோம் . நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை , எவர்களின் தொல்லைகளும் இல்லை , இருப்பினும் நாம் அவர்களை போன்று ஆர்வமாக இஸ்லாத்தை பின்பற்றி வருகிறோமா ? அவர்களின் ஈமானும் நம்முடைய ஈமானும் எப்படி இருக்கிறது ? நாம் நம்மையே சோதித்து பார்ப்போம் . அவர்களின் ஈமானின் உறுதி எங்கே , நம் ஈமானின் உறுதி எங்கே ? சிந்திக்க வேண்டும் !
இஸ்லாத்தை ஏற்றவர்கள் மின்னல் வேகத்தில் போய்கொண்டு இருக்கிறார்கள் , ஆனால் நாம் ஆமை வேகத்தில் அசைந்து போய்கொண்டு இருக்கிறோம் !

இஸ்லாத்தை ஏற்றால் சிரமமும் உண்டு , சோதனையும் , மனவேதனையும் உண்டு அல்லாஹ் உங்கள் மனதை உறுதிபடுத்தும் வரை . பிறகு இம்மைக்கும் வெற்றி மறுமைக்கும் வெற்றி !

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!