அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

செவ்வாய், நவம்பர் 26, 2013

காதலிப்பது ஒரு குற்றமா ?

ஒரு சிறிய பார்வை!!!

உங்கள் மகள் யாரோ ஒருவனை காதலிக்கிறாள் என்று சொன்னமாத்திரத்தில் பெற்றோர்களுக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் அறியாமலே ஒரு விதமான பதட்டம் மனதிலே ஒரு பெரியப் போராட்டம் அதுவே தினம்தோறும் மனதை வாட்டும்.

அடுத்த கட்டம் பெற்றோர்கள் அந்த பெண்ணை போட்டு அடிப்பார்கள் ,உதைப்பார்கள் அது ஒரு பக்கம் . இன்னொரு பக்கம் அந்த பையன் (boy ) யார் உள்ளுரா ? அல்லது வெளிஊரா ? முஸ்லிமா ? அல்லது ? ??
இதைப் பற்றி விசாரணை நடக்கும் .............

இந்த செய்தி ஊர் முழுதும் பரவலாக பேசப்படும் ,ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுவார்கள் . இன்னும் சில பேர்கள் திரித்து கொண்டு பேசுவார்கள். நடந்ததது நடந்துவிட்டது என்ன செய்வது இருவரையும் சேர்த்து வைக்க வேண்டியதுதானே என்று சிலர் அவர்களின் கருத்துக்களைச் சொல்வார்கள் .சர்வசாதரணமாக சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள் அவரவர் வலி அவருக்குதான் தெரியும் ,அவரவர்க்கும் வந்தால்தான் உணர முடியும்.

இந்த கெட்டுபோன காதலுக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கவேண்டும் என்று யாருக்கும் தோன்றாது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்லிக்கொண்டுதான் வருவார்கள் தவிர ஒரு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் அதன் மூலமாக நம் சமுதாயத்துக்கு ஒரு நன்மை கிடைக்கணும் என்று தோணாது .

ஊர் கட்டுப்பாடு , பெண்பிள்ளைகளுக்கு ஒரு கல்வி கூடம் , இஸ்லாத்தைப் பற்றி கற்றுக் கொடுக்க ஒரு சிறந்த ஆசிரியை . அனைத்து பெற்றோர்களும் அவர்களின் பெண்பிள்ளைகள் விடயத்தில் அக்கறைக் காட்ட வேண்டும் ! கல்லூரிக்கு மட்டும் போக வேண்டும் பள்ளிக்கு மட்டும் போக வேண்டும் இஸ்லாமிய கல்வி அவசியம் வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் ஆர்வம் வர வேண்டும்.அல்லாஹ்வின் அச்சமற்ற வாழ்க்கை ஆபத்தில் தான் கொண்டு போய் சேர்க்கும் என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும் .அன்று பிறந்த குழந்தைகள் அல்ல இவர்கள் இன்று பிறந்த குழந்தைகள் இன்று அதிக வேகமாக technologie  வளர்ந்த காலம் இது. அவர்கள் கையில் ஒரு உலகம் இருக்கிறது செல் போன் இன்டர்நெட் அதன் மூலமாக அவர்கள் காதலிப்பதை கற்று கொள்கிறார்கள். உங்கள் பெண்பிள்ளைகளுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுகிரீர்கள் , பிறகு அவர்கள் உங்களுக்கு ஒரு கெட்ட பெயரை சம்பாதித்து கொடுகிறார்கள்.

இன்று பெண்ணோ அல்லது ஆணோ கெட்டு போவதற்கு நிறைய வழிகள் இருக்கிறது , அவர்களை நல்ல வழியில் கொண்டு செல்ல ஒரே ஒரு வழிதான் இருக்கிறது அது இஸ்லாம் காட்டிய நேர்வழி .
அன்பு பிள்ளைகளே ! உங்களின் பெற்றோர்கள் மானம் உங்கள் கையில் இருக்கிறது , அவர்களை நீங்கள் தலை குனிய வைத்துவிடாதீர்கள் ! அவர்களிடம் கண்ணிய குறைவாக நடந்து கொள்ளாதீர்கள்!

பெற்றோரின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தி இருக்கிறது . பெற்றோரின் கோபத்தில் அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் (ரலி)
நூல் திர்மிதி
மிஷ்காத்:-419

அன்னிய ஆணும் அன்னிய பெண்ணும் தனிமையில் இருக்க வேண்டாம் . மஹ்ரமான ஆண் உடன் இல்லாமல் எந்தப் பெண்ணும் பிரயாணம் செய்ய வேண்டாம் என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் புகாரீ , முஸ்லிம்.

நீங்கள் ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ காதலிக்கும் பட்ச்சத்தில் அவர்களுடன் நீங்கள் தனிமையில் இருக்க நேரிடும் , ஒரு நாள் இருவரும் சந்திக்கும் நிலை வரும் அது கூடாது என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் எச்சரிக்கை செய்கிறது என்பதை உணர வேண்டும்.

உங்கள் மீது பெற்றோர்கள் திருப்தி அடைய வேண்டும் ,அடையும் பட்சத்தில் அல்லாஹ்வும் திருப்தி அடைகிறான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

ஒரு காதலனும் ஒரு காதலியும் இருவரும் தனிமையில் இருந்தால் மூன்றவதாக ஷைத்தான் உங்களுடன் இருப்பான் . ஒரு ஆணும் பெண்ணும் இருவரும்  தனிமை இருக்கும் போது மூன்றாவது நபராக ஷைத்தான் இருப்பான் என்று ஒரு ஹதீஸின் கருத்து .

நிதானம் இறைவனின் குணமாகும் . அவசரம் ஷைத்தானின் குணமாகும் என ரசல் (ஸல்) கூறினார்கள் .
ஆதாரம்: நூல் - திர்மிதி.

நீங்கள் அவசரப்பட்டு யாரையாவது காதல் செய்கிறீர்கள் அதனால் பின்விளைவு நீங்கள் யோசிப்பதில்லை . இது ஷைத்தானின் குணமாகும் , அல்லாஹ்வின் குணம் நிதானமாக இருப்பது. உங்கள் பெற்றோர்கள் தான் நிதானமாக யோசித்து உங்களின் எதிர்க்கலாம்ப் பற்றி நல்ல முடிவு செய்வார்கள் , ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைத்து கொடுப்பார்கள் என்று உறுதியாக இருங்கள்!

ஆசை அறுபது நாள் மோகம் நுப்பது நாள் அதற்க்கு பிறகு என்ன ஆகும் என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள்!

வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
நூல் :புகாரீ ,முஸ்லிம்.

ஈமானையும் ,கற்பையும் இழக்காதீர்கள் ! இந்த காதல் ஒரு பெரிய குற்றம்தான் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் , மன சஞ்சலங்கள் பகைமை பின் விளைவுகள் இவைகள் உங்களுக்கு எதுவும் தெரியாது ,புரியாது .

பெண்களே ! விழித்து கொள்ளுங்கள் காதல் போதையிலிருந்து வெளியேறுங்கள் !
மதுவும் போதைதான் ,காதலும் போதைதான் !
இந்த கட்டுரையும் ஒரு போதனைதான் !!!!!!!!
அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!