அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, டிசம்பர் 14, 2013

இட ஒதுகிடு அவசியமா ?
தேர்தல் கூத்து இன்னும் சில மாதங்களில் துவங்க இருக்கிறது . இட ஒதுகிடு என்ற பெயரில் பெரிய அளவில் கூட்டம் கூடி என்ன சாதிக்க போகிறார்கள் என்பது என்றும் புரியாத புதிர் .முஸ்லிம் மக்கள்களுக்கு இந்த இட ஒதுகிடு கிடைத்து விட்டால் , முஸ்லிகளின் பெரும்பாலும் பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று இந்த தௌஹீத்வாதிகள் நினைகிறார்கள் . பாபரி மஸ்ஜித் போராட்டம் என்று ஆரம்பித்து அது இப்பொழுது முடிவுக்கு வந்து விட்டது . இப்பொழுது தௌஹீத் கையில் இருப்பது இந்த இட ஒதுகிடு பிரச்சனை மட்டும் தான் . வேற என்ன போராட்டம் செய்ய முடியும் ? மக்களை ஒன்றுதிரட்டி இட ஒதுகிடு கேட்டால் நிச்சயமாக நமக்கு இட ஒதுகிடு கிடைத்து விடும் என்று கனவு காணுகிறார்கள் . இட ஒதுகிடு என்பது தாழ்த்த பட்ட மக்களுக்கு , கல்வியில் பின்தங்கியவர்கள் எந்த திறமையும் கல்வியும் இல்லாத ஒருவருக்கு அரசு வேலை கிடைப்பது .இது எந்த நாட்டிலும் இல்லாத ஒரு புதிய சட்டம் அல்லது ஒரு நூதன கொள்கை . ஒருவர் நல்ல படித்து பட்டம் பெற்று திறமையை வளர்த்து கொண்டவருக்கு அரசு வேலை கொடுக்கலாம் , அதுதான் முறை . ஆனால் , இட ஒதுகிடு என்ற பெயரிலே மக்களை ஒன்று திரட்டி இட ஒதுகிடு வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை வைத்து .இந்த மானகெட்ட அரசியல்வாதிகளுக்கு ஒட்டு போட்டு அவர்கள் நமக்கு இட ஒதுகிடு தருவார்கள் என்று கால காலமாக நம்பித்தான் வருகிறோம். ஒரு மிக பெரிய கூட்டம் நடத்த போகும் இந்த தௌஹீத் வாதிகள் அவர்களுக்கு நாம் பொருளாதார உதவி செய்ய வேண்டும் . வீடு வீடாக சென்று நிதி திரட்ட போகிறார்கள் இட ஒதுகிடைப் பற்றி மக்களிடம் சொல்லி இன்னும் மக்களிடம் பணத்தை வசூல் செய்து , வீண் விரயம் செய்ய போகிறார்கள். இந்த கூட்டத்தில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் எந்த பாகுப்பாடும் இருக்க கூடாது , சுன்னத் ஜமாஅத் அவர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும். இவர்கள் அவர்களுக்கு ஆகாது , ஆனால் சுன்னத் ஜமாஅத் கொடுக்கும் நிதி தேவை வாங்கி கொள்வார்கள் . ஆனால் மற்ற காரியத்தில் இவர்கள் ஷிர்க்வாதிகள் ,தர்கா வாதிகள் என்று வாய் கூசாமல் பேசுவார்கள்  , எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார்கள். சுன்னத் வாதிகள் எல்லாம் நரக வாதிகள் என்று வாய் கூசாமல் சொன்னவர்கள் . இன்று இவர்கள் அனைத்து முஸ்லிம்களுக்கு நலவை நாடுகிறார்கள் . தரம் குறைவாக பேசுவார்கள் , தரம் கெட்டு நடந்து கொள்வார்கள் ஆனால் , நிதி (பணம் ) வேண்டும் என்று போனால் பணிவுடன் நடப்பார்கள் . விவாத மேடையில் ; சுன்னத் ஜமாஅத் தணி , தௌஹீத் ஜமாஅத் தணி இருவரும்  முஸ்லிம்கள் தானே ! ஒன்றாக அமர்ந்து விவாதத்தை கேட்டக்க கூடாதா ? இதிலும் வித்தியாசம் . ஆனால் இந்த கூட்டம் எல்லோரும் ஒன்றாக ஒன்றுகூடி வர வேண்டும் ,கலந்து கொள்ள வேண்டும். அன்று சகோதரர் பிஜே அவர்கள் ; இன்று இருக்கும் ஆட்சியில் அம்மா ஜெயலலிதா அவர்களை இகழ் பாடினார் , கண்டப்படி பேசினார் . ஆனால் இன்று சகோதரர் பிஜே அவர்கள் ஜெயலலிதாவைப் பற்றி புகழ் பாடுகிறார் " அன்று உள்ள வருடம் 95 லில் ஜெயலலிதா வேறு , இன்று உள்ள வருடம் 2013 லில் ஜெயலலிதா வேறு என்று விளக்கம் சொல்லிகிறார் . அந்த அம்மாக்கு ஒட்டு போட்டால் நிச்சயம் நமக்கு இட ஒதுகிடு கிடைக்கும் என்று உறுதியாக சொல்லும் அண்ணன் பிஜே அவர்கள். தூத்துவதும் , போற்றுவதும் கொள்கை சகோதர்களுக்கு வழக்கமாக ஆகிவிட்டது . இந்த இட ஒதுகிடு முஸ்லிம்களுக்கு தேவை இல்லை , அது கிடைக்க போவதில்லை ,அப்படி கிடைத்தாலும் அதனால் எந்த பலனும் கிட்ட போவதில்லை . அரசியல்வாதிகள் ஓட்டுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள் . வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள் ஆனால், எதையும் முறையாக செய்ய மாட்டார்கள் . அரசியல் ஒரு சாக்கடை அந்த சாக்கடையில் நாம் ஏன் விழ வேண்டும் . ஒரு இட ஒதுகிடுக்காக நாம் செய்யும் அனைத்து காரியமும் வீண் என்பதை மக்கள்கள் உணர வேண்டும் . இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்காக நாம் ஆதரிக்க வேண்டுமா ? அவர்களுக்கு ஓட்டு கேட்டு வீடு வீடாக போய் , வீதி வீதியாக போய் நம் நேரத்தையும் , பணத்தையும் செலவு செய்ய வேண்டுமா ? ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாதின்ப் படி வாழ்க்கையை அமைத்து கொண்டு அல்லாஹ்வை மட்டும் முழுமையாக நம்பி வாழ்ந்து வந்தான் என்றால் அதுவே அவனுக்கு சுபிட்சம் (இம்மைக்கும், மறுமைக்கும் போதும்) . பெண்களையும் ,பிள்ளைகளையும் மற்றும் வயோதிர்களையும் அழைத்து கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு ஒரு பெரிய சாதனை செய்தது போன்று மாய தோற்றத்தை உண்டு பண்ணும் இந்த தௌஹீத் சகோதரர்கள் . இந்த இட ஒதுகிடை ஒவ்வொரு முஸ்லிம் நன்றாக சிந்தித்து " இது நமக்கு அவசியமா ? இது கிடைக்குமா ? இதனால் என்ன முஸ்லிம் களின் ஒரு பெரிய மற்றம் ஏற்பட போகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் படிப்பு அறிவு இல்லாததைப் போன்று " நாங்கள் கல்வியில் பின்தங்கி இருக்கிறோம் என்று அன்பு சகோதரர் பிஜே சொல்லி கொண்டு இருக்கிறார் . (அவருடை இணையதளம் tntj  போய் பாருங்கள் இட ஒதுகிடைப் பற்றி பேசி இருப்பார்.) நமது நோக்கம் அண்ணன் பிஜே அவர்களையும் ,அவரை சார்ந்த தௌஹீத் சகோதரர்களையும் தவறாக சொல்லும் எண்ணம் இல்லை . மக்கள்கள் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும் . வீண் கூட்டம் , விவாதம் , பேரணி ,ஆர்ப்பாட்டம் என்று மக்கள்கள் ஈடுபடுவதினால் எந்த மாற்றமும் வர போவதில்லை .ஒரு வீண் பழி முஸ்லிம் மீது அல்லது முஸ்லிம் மீது தவறான வழக்குகள் அல்லது முஸ்லிம் கள் மீது காவல் துறைகள் அத்துமீறி நடந்து கொள்வது ,அவர்களை கைது செய்து கொடுமை படுத்துவது போன்ற விடயத்துக்காக நாம் ஆண்கள் மட்டும் குரல் கொடுக்கலாம் , போராடலாம் . முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கி இருக்கிறார்கள் " எங்களுக்கு இட ஒதுகிடு வேண்டும் என்று ஒரு பெரிய கூட்டம் போட்டு தமிழ் நாட்டையும் , அனைத்து ஊடகத்தையும் அவர்கள் பக்கம் பார்வைகள் திரும்ப வேண்டும் என்ற என்ன நோக்கத்துடன் செய்யல படுகிறார்கள் என்பது " அல்லாஹ் அறிந்தவன்.

இன்ஷாஅல்லாஹ் இன்னும் சில மாதங்களில் தேர்தல் கூத்து வரும் , அப்பொழுது என்ன கூத்து நடக்க போகிறது என்று நீங்களே பார்ப்பீர்கள்! எல்லாம் புரியாத புதிராக தான் இருக்கும் . அப்பாவி முஸ்லிகள் பலிகடாவாக ஆகாமல் இருக்க வேண்டும் .

அறியாத நம் முஸ்லிம் தௌஹீத் சகோதரர்கள் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் அவர்களின் நேரத்தையும் , உடல் உழைப்பையும் செலவு செய்கிறாகள் என்பதை நினைக்கும் பொது ரொம்ப வருத்தமாக தான் இருக்கிறது. அவர்கள் செய்யும் உழைப்புகள் முஸ்லிம் சமுதாயத்துக்கு ஒரு பெரிய தியாகம் செய்வது போன்று செய்ய போகிறார்கள் .அல்லாஹ் அவர்களுக்கு விளங்கக் கூடிய பாக்கியத்தை தருவானாக ...ஆமீன்.

அல்லாஹ் மிகவும் அறிந்தவனாக இருக்கிறான் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!