ஞாயிறு, டிசம்பர் 15, 2013

இன்றே செயல்படுங்கள்!




அண்ணலெம் பெருமானார் (ஸல்) கூறுகிறார்கள் :"ஐந்துக்குமுன் ஐந்தை பாக்கியமாக கருது ! முதுமைக்கு முன் இளமை ,நோயிக்கு முன் உடல் நலம் ,வறுமைக்கு முன் வசதி , பெரும் பாரத்திற்கு  முன் அமைதி, மரணத்திற்கு முன் வாழ்வு !
ஆதாரம்: திர்மிதி)


எந்த இறைக்கடமையும் அதை செய்வதற்குரிய பருவம் சந்தர்ப்பம்  குறித்த நேரம் வந்தவுடன் செய்து முடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் , கடமை தட்டிபோககூடிய நிலை உண்டாகலாம் . அல்லது இவ்வுலகிலோ மறு உலகிலோ இறைவனின் சோதனையை சந்திக்க நேரிடலாம் .

இந்த உண்மையை முழுமையாக புரிந்து வைத்துள்ள நமது சமுதாயம் இறைக்கட்டளைப் படி ஒழுகி வாழாமல் அனாவசியமான மெத்தனத்துடன் காலம் தள்ளுவது வேதினை தரும் விஷயம்.

உலகியல் வாழ்வில் உயர்வையும் , பொருளாதார முன்னேற்றத்தையும் அடைய அவசரகதியில் செயல்படுகின்றோம் .செல்வத்தைப் பெருவாரியாகக் குவித்துக் கொள்ளவும் , அழகிய மாளிகையை கட்டி வாழவும் பணத்தை அள்ளிக் கொடுத்ததும் காரிய சாதிக்கின்றோம் . கண் மூடித்தனமாக பணப் பேராசையால் , அடுத்தவர் மானம் , உரிமை நீதியை பற்றி நாம் கிஞ்சிற்றும் அஞ்சாமல் , வஞ்சகம் செய்கின்றோம் . யார் எவரோ இந்த கொள்கையில் சவாரி செய்வது பற்றி நமக்கு பெரும் கவலையில்லை . ஒரு இஸ்லாமியன் , குர் ஆன் ஹதீஸை முன் மாதரியாகக் கொண்டவன், பூமான்கள் அமைத்துக் கொடுத்த இஸ்லாமிய பூஞ்சோலையில் , பிறந்து வளர்பவன் எப்படி இந்த கோணல் கலாச்சாரத்தைப் பின்பற்றலாம் ? இது தான் நமது கேள்வி.

அப்படியானால் , ஒரு இஸ்லாமியனுடைய இறை நம்பிக்கை இறைவழிபாடு எந்த முறையில் இருக்க வேண்டும்? எந்தக் காரியத்தை கடமையைச் செய்ய அவன் முந்த வேண்டும் ? என்பதை இன்றே நாம் தெரிந்து கொண்டு செஇயலில் இறங்க கடமைப்பட்டுள்ளோம் .

அருமை நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

"ஒருவர் இவ்வுலகை நேசித்தால் , மறுமையை இழப்பார் .மறுமையை நேசித்தால் ,உலகில் பாதிப்புக்குள்ளாவார் .ஆயினும் , நீங்கள் அழியும் உலக தவிர்த்து அழியா உலகைத் தேர்ந்தெடுங்கள் ;" ஆதாரம்: அஹ்மது )

அல்லாஹ் ரசூலை நம்பிய இஸ்லாமியன் , நமக்கு இறப்பு உண்டு- மறு வாழ்வு உண்டு -கேள்வி கணக்கு உண்டு - செயல் வினை உண்டு- பின்னர் சுவனம் செல்வோம்  அல்லது நரக வேதனைக்கு ஆளாவோம் என்பதையும் நம்பியிருகிறான் .அப்படி நம்புவனே உண்மையான முஸ்லிம் .

உலகோடு ஒட்டி வாழ வேண்டும் .அந்த சமயம் உலகபித்து தலைக்கேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.மறுமையின் கவலை ,நம்பிக்கை முழுமையாக இருக்கும் பொழுது அதற்காக இவ்வுலகில் சில தியாகங்கள் செய்ய முன் வர வேண்டும்.

அதில் சில பகுதிகள்:

தொழுகைக்கு சிறிது நேரம் செலவிட வேண்டும் ,நோன்புக்கு சில காலம் பசித்து விழித்துருக்க வேண்டியதேற்படும் .ஹஜ்ஜுக்கு பணத்தையும் , உடல் நலத்தையும் பயன்படுத்தி சில காலம் உற்றாரை விட்டு தனிதிர்க்க வேண்டி வரும்.

இந்தக் கடமையைச் செய்து தியாக உணர்வுடன் வாழுபவன் , மறுமையை வெறும் எண்ணத்தில் வைத்திராமல் , நம்பிக்கையை செயலில் காட்டி இறை நம்பிக்கையாளன் ஆகின்றான் . மருமையைத் தேர்ந்தெடுத்து பிறந்த பலன் கண்ட நல்லோர் கூட்டத்தில் கலக்கின்றான் . இதைதான் மேற்கூறிய ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.

ஒரு கால வரும்பொழுது ... நம் இளமை, ஆரோக்கியம் , வசதி, அமைதி , உலக வாழ்க்கை எல்லாம் விடை பெற்றுச் சென்று முதுமை , நோய் வசதியின்மை , பெரும் பாரம் மரணம் தொற்றிக் கொள்ளும்.

இந்த ஐந்துக்கு முன் அந்த ஐந்தை நாம் உரிய சந்தர்பத்தில் பயன்படுத்திக் கொண்டால் , அது நமது ஈருலக வாழ்வுக்கு ஜெயம் கொடுக்கும்.

அல்லாஹ் மிகவும் அறிந்தவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!