அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

திங்கள், டிசம்பர் 02, 2013

கனவின் பலன் (3)
அறிமுகமில்லாத வீடு: வியாதிகள் பல ஏற்பட்டு வருந்துவீர்கள் . அல்லாஹ் விடம் பாவத்திலிருந்து பாதுகாப்புத் தேடிக் கொள்ளவேண்டும்.

அத்திமரம்: உங்கள் செல்வம் பெருகும், பெருந்தனவந்த்ராவீர்கள் , நீங்கள் வர்த்தகறா இருந்தால் உங்கள் வியாபாரம் பெருகிக் கொண்டே போகும்.

அகன்ற கதவைக் காணுதல்:உங்களுக்கு அதிகமான உணவு கிடப்பதற்கான அறிகுறியாகும் இது.

அடைக்கப்பட்ட கதவைக் காணுதல்: வறுமையும்,கஷ்ட்டமும் ஏற்படுவதற்கான அறிகுறி .

அறிமுகமில்லாப் பெண்ணின் மடியிலிருத்தல்:உங்களது நோக்கம் நிறைவேறும், செல்வம் பெருகி வளமான நல்வாழ்வு கிட்டும்.

அறிமுகமில்லாப் பெண்ணுடன் புணர்தல் :இத்தகைய கனவைக் கண்டவர்கள் பிரயோசமடைவார்கள் .

அத்தர் வியாபாரியைக் காணுதல்:உங்களுக்கு அரசாங்கத்தில் ஓர் உத்தியோகமோ அல்லது உதவியோ கிடைக்கும் .இவையேதும்கிடைக்காவிட்டால் உங்கள் பெயர் பிரபலமடைந்து புகழ் பெறுவீர் .

அத்தர் தடவ கண்டால்: மார்க்க சமந்தமான அம்சங்களால் உங்களுக்கு ஆனந்தம் ஏற்படும் . வாழ்வில் சுபிட்சம் அடைவீர் .

அடுப்புக் கரி : நீங்கள் சர்வ எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். எதிர்பாராத வகையில் அச்சமும் ,பகையும் உங்களுக்கு ஏற்படும் கடுமையான வியாதி உண்டாகும் .கஷ்ட்டங்களும் ஆபத்துகளும் வரும்.

அகண்ட இல்லம்: உலகத்தில் செல்வப் பெருக்க மேற்படும் .

அந்நிய ஆடவன் தன் படுக்கையில் :ஆயிட்காலம் நீளமாகும் என்பதன் அறிகுறி இது.

அந்நியன் படுக்கையில் தன்னைக் காணுதல்:விரோதி உண்டாவான் அதனால் பலவித சங்கடங்களுக்கு ஆளாவீர்கள்.

அதிகம் சிரித்தல் : எந்தவகையிலேனும்துக்கமும் வருத்தமும் ஏற்படுவதற்கான அறிகுறி இது.

அகன்ற மார்பைக் கண்டால்: வீரச் செயல்களில்  பெரும் புகழும் , கீர்த்தியும் அடைவீர்கள்.

அல்லாஹ்வின் பிரகாசம்: முஃமினானவனுக்கு சந்தோசம் உண்டாகும்.முஸ்லீம்க்கு நன்மை ஏற்படும் ஆலிம்களுக்கு தூய்மை உண்டாகும், அதிகாரிகளுக்கு நேர்மையும்  நட்பினமும் உண்டாகும் ......

தாய் தந்தையைக் காணுதல்:உம்மைப் பிடித்துள்ள கவலையும் , துன்பமும் விலகி போகும்.மரணம் அடைந்த விட்டவருக்காக ஏதேனும் நன்மையை செய்யுங்கள்.

மாதவிடாயிலிருந்து பரிசுத்தமாதல்:பாவமன்னிப்புக்கான அடையாளமாகும் இது.

முற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!