அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, டிசம்பர் 22, 2013

பெண்களே அல்லாஹ்வை அஞ்சிகொள்ளுங்கள்!
தமது பார்வைகளைத்  தாழ்த்திக் கொள்ளுமாறும் , தமது கற்புகளைப்  பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட  பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம் . தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும் . தமது கணவர்கள் ,தமது தந்தையர் ,தமது கணவர்களுடைய தந்தையர் , தமது புதல்வர்கள் ,தமது சகோதர்களின் புதல்வர்கள் ,தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள் , ஆண்களில் (தள்ளாத வயதின் கரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள் , பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம் .அவர்கள் மறைந்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்க்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே ! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள் ! இதனால் வெற்றியடைவீர்கள் !
திருக்குர் ஆன் 24:31)


பெண்களே! உங்களுடைய சொர்க்கம்  நரகம் உங்கள் கணவர்களுடைய பிரியத்தைப் பொறுத்தே இருக்கிறது .(அல்ஹதீஸ்)

தனது கணவனை மோசடி செய்து வாழ்க்கை நடத்தும் பெண் இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்தவள் அல்ல !
நூல்: அபூதாவூது )

கணவனுக்கு நன்றி செலுத்த வேண்டிய பெண் , நன்றி செலுத்தாமல் வாழ்வாலேயானால்  கியாம நாளில் இறைவன் அவளைக் கண் கொண்டு பார்க்க மாட்டான் .
நூல்: தப்ரானி )

பெண் மறைமுகமாக இருக்க வேண்டியவள் , அவள் வெளியே வருவதை எதிர் நோக்கி  ஷைத்தான் (அவள் வீட்டு வாசலில்) நின்று கொண்டிருக்கிறான் . ஆனால் வீட்டில் இருப்பவள் இறைவன் கருணையை நெருங்கியவளாக இருக்கிறாள் .

நூல்: திர்மிதி)

வேடிக்கை பார்ப்பதற்காக ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே வருவானாள் அவளுடைய பெண்மை பெரிதும் பாதிக்கப்படுகிறது .சில சந்தர்ப்பங்களில் விபரீதம் ஏற்பட்டு விடுகிறது.
(அல்ஹதீஸ்)

வேடிக்கை என்பதின் விளக்கம் : சில பெண்கள் வெளியூர் சென்று கந்தூரி விழ , அல்லது வேற ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது , நடக்காத கூத்துக்கள் நடக்கிறது . தவறுகள் ஏற்பாடு வாய்ப்புகள் இருக்கிறது . கணவருடன் போவது என்பது அது வேறு , அதை குறிக்கவில்லை அந்த ஹதீஸ் . வேடிக்கை பார்க்க போகும் பெண்கள் என்றுதான் கூறுகிறது .

ஒழுக்கத்தை பேணவேண்டிய பெண்கள் , ஒழுக்கம் கெட்டு போவதை இன்று நாம் பார்க்கிறோம் . கற்ப்பை பேண வேண்டிய பெண்கள் , கற்ப்பை இழந்து கணவன்மார்களுக்கு துரோகம் செய்யும் சில பெண்களை இன்று நாம் நம் சமுதாயத்தில் பார்க்கிறோம்.  சில பெண்கள் மானத்தை இழந்து அவர்களின் குடும்ப மரியாதையை காற்றில் பறக்கவிடுகிறார்கள் . அற்ப சுகத்திற்க்காக இச்சைகளை தீர்த்து கொள்வதற்காக எதையும் பெரிதாக நினைக்காமல் சர்வசாதரணமாக நடந்து கொள்கிறார்கள் சில கேடுகெட்ட பெண்கள் . மாற்று மத சகோதர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை வந்து விட்டது . "எங்கள் மதத்தில் தான் சில பெண்கள் மோசமாக நடக்கிறார்கள் ,நடத்தை கெட்டவர்களாக ஆளாகிறார்கள் " உங்கள் சமுதாயத்திலும் இப்படியா என்று கேட்க்கும் அளவுக்கு சில முஸ்லிம் பெண்கள் நடக்கிறார்கள் . வேதனயும் , மன வலியாக இருக்கிறது . கொஞ்சம் கூட அல்லாஹ்வின் அச்சம் இல்லாமல் இந்த பெண்கள் தவறான பாதையில் செல்வது என்ன என்று சொல்வது இவர்களை ? போதையில் தள்ளாடும் சில முஸ்லிம் வாலிபர்கள் அவர்களுக்கு இந்த மது ஹலாலாஹி விட்டதா ?

சில குடும்ப பெண்களின் நிலைகளை சொன்னால் ரொம்ப அசிங்கமாக இருக்கிறது. கணவன்மார்கள் வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்க போகிறார்கள் . ஆனால் சில இவர்களின் மனைவிமார்கள் எல்லா வித கூத்துக்கள் செய்கிறாகள் . இவர்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படவில்லை ,அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படவில்லை , கணவன்மார்களுக்கும் கட்டுப்படவில்லை . அவர்கள் இஷ்ட்டத்துக்கு அலைகிறார்கள் ,அன்னியவர்களிடம் சர்வசாதரணமாக பழகிறார்கள். ஆனால் நம் சமுதாயம் எங்கே போகிறது என்று தெரியவில்லை ? சில ஊர்களில் நிலைமைகள் ரொம்ப மோசமாக இருக்கிறது. இந்த பெண்களுக்கு எப்படி அல்லாஹ்வின் அச்சத்தை ஊட்டுவது ?
அல்லாஹுதஆலா தன் திருமறையில் விபச்சாரத்தைப் பற்றி கூறும்பொழுது :

" நீங்கள் விபச்சாரத்தில் பக்கம் நெருங்காதீர்கள் என்றுதான் கூறுகிறான்"
விபச்சாரம் செய்யாதீர்கள் என்று கூறவில்லை , அந்த பக்கம் கூட நெருங்காதீர்கள் என்று அல்லாஹ் நம்மை எச்சரிக்கிறான் . அந்த பக்கம் கூட நாம் தலை வைத்து படுக்க கூடாது .

இந்த வட்டியையும் சில முஸ்லிம்கள் ஹலாலாக்கி விட்டார்களா ? சிலரின் வாதம் இந்த வட்டி பங்கில் வாங்கினால் தவறும் எதுவும் இல்லையாம் , அவர்கள்தான் கொடுக்கிறார்கள் ஏன் அதை வாங்க கூடாது என்று சிலரின் வாதம் . சில விளக்கம் தருகிறார்கள் இது அவர்களுக்கு அல்லாஹ்வுக்கும் . சில பெண்கள் கந்து வட்டிக்கு வாங்கி பெரும் சிக்கல்களில் மாட்டி கொள்கிறார்கள் . கந்து வட்டிக்கு கொடுப்பவன் அவன் ஒரு ரௌடியாகதான் இருக்க முடியும் அந்த தொழிலை அவன் தான் செய்ய முடியும் . சில பெண்கள் அறியாமல் புரியாமல் உடனே பணம் கிடைகிறது என்று இந்த கந்து வட்டிக்கு பணம் வாங்குகிறார்கள் , பிறகு அவர்கள் பல தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் ,பாலியல் தொல்லைகளுக்கும் ஆளாகிறார்கள் என்பது ஒரு பெரிய வேதனை. இதனால் சில விபரீதங்கள் நடக்கிறது என்பதில் ஐயம் இல்லை.

இதுபோன்ற பாவமான காரியங்களிருந்து விடுபட ஒரு வழி இஸ்லாம் காட்டிய வழி முறைதான் , ஈமான் உறுதியும், இறையச்சமும் இருந்தால் நிச்சயமாக இவ்வுகலத்திலும்  , மறு உலகத்திலும் நமக்கு ஜெயம்தான் என்பதில் துளிகூட ஐயம் இல்லை.

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் , பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான் . அவற்றின் கீழ்பகுதியில் ஆறுகள் ஓடும் . அதில் நிரந்தரமாக இருப்பார்கள் . நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன . அல்லாஹ் வின் பொருத்தம் மிகப் பெரியது . இதுவே மக்கத்தான வெற்றி.
அல்குர் ஆன் 9:72)

அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது ! நாம் கொடுக்கும் வாக்குகளை போன்று அல்ல . இந்த உலகம் நிலை யானது அல்ல எனபது சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை . இது அற்ப வாழ்க்கை ! அற்ப சுகதிருக்காக ஒரு நிலையான அதிகம் சுகம் தரும் சுவனத்தை நாம் இழப்பதா , ? சிந்தித்து பாருங்கள்!

அதேநேரத்தில் , சில சொல்லவேண்டிய விடயங்கள் இருக்கிறது:

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளை கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் ! அவர்களே குற்றம் புரிபவர்கள் .
அல்குர் ஆன் : 24:4)
நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும் , தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்.

அல்குர் ஆன்:33:58)

சில செய்திகளை நாம் அறியாமல் ,ஆராயாமல் கூறிவிடுகிறோம் ! அது எந்தளவுக்கு உண்மை அல்லது பொய் என்று கூட நமக்கு தெரியாது . நாம் அந்த விடயத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.

ஒருவர் அவர் செய்யாத காரியத்தை செய்தார் போன்று நம்மில் சிலர்  அவதூர்களைப் பரப்பி வருவதை நாம் பார்க்கிறோம் . நம் காதில் விழும் செய்திகளை நாம் அவசியம் ஆராய வேண்டும்; அவசரப்பட்டு நாமும் பாவத்துக்கு ஆளாக கூடாது .

அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!