சனி, டிசம்பர் 21, 2013

இவைகளை தெரிந்துகொள்வது அவசியம்!




இரு
 வஸ்துக்கள் !

1.தேன்
2.குர் ஆன் -

உடல் வியாதிக்கு -தேன்

ஜைத்தூன் எண்ணையை குடியுங்கள் . உடலின் மீது தேய்த்துக் கொள்ளுங்கள் ஏனன்றால் அது பாக்கியம் பெற்ற எண்ணையாகும் .
நூல்: திர்மிதி )

எவர் காலை உணவாக பேரீச்சம் பழங்களை உண்ணுகிராரோ அவரை சூன்யமோ விஷக் கடியோ நெருங்காது .
நூல்:புகாரீ )

ஓதி பார்ப்பது ஆகுமானதா ?

கண் திருஷ்டிக்கு ஓதிப் பார்க்க அல்லது ஒதிப்பார்த்துக் கொள்ள திருநபி (ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்டார்கள் .

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி)
நூல்:புகாரீ)

கண்திருஷ்டி பொல்லாதது . அது மரணத்தில் கொண்டு விட்டுவிடும் . விஷமுள்ள அனைத்திருக்கும் (விஷகடிகளுக்கு ) ஒதிப்பார்ப்பதற்க்கு திருநபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள் .
நூல்:புகாரீ)

நபித்தோழர்கள்   பாம்பு , தேள் கடிகளுக்கு  காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்களுக்கும் சூரா ஃ பாத்திஹா ஓதி ஊதி இருக்கின்றனர் .திருநபி  (ஸல்) அவர்களும் இவ்வாறு செய்வதை விரும்பியுள்ளார்கள் .
நூல்: புகாரீ )

ஒரு முஃமினை வியாதி வாட்டி வதைக்குதென்றால் அது செய்த பாவங்களுக்கு பரிகாரமாகவும் வருங்காலத்தில் அவருக்கு ஒரு படிப்பினையாக அமைந்துவிடுகிறது .
நூல் : முஸ்லிம்)

ஆயிஷாவே ! சின்ன சின்ன பாவங்களை விட்டும் விலகி கொள்வீராக ! ஏனென்றால் நிச்சயமாக அவற்றைக் குறித்தும் கியாம நாளில் கேள்வி கேட்கப்படும் .

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி)
நூல்: இப்னு மாஜா )

ஈமான் கொண்டவருக்கு சிரமம் துன்பம்  நோய் ஆகியவற்றில் ஏதேனும் நிகழ்ந்து அவரை கவலைக்கு ஆளாக்கினால் இறைவன் அவருக்கு அவற்றை அவருடைய பாவச் செயலுக்கு பரிகாரமாக அவற்றை ஆக்கி போக்கடித்து விடுகிறான் .

அறிவிப்பவர்: அபூஹுர்ரைரா (ரலி)
நூல் புகாரி ; முஸ்லிம்)

உங்களுக்கு நோய் வந்தால் திட்டாதீர்கள் . ஏனென்றால் நெருப்பு இரும்பின் துருக்களை எப்படி சுத்தம் செய்கின்றதோ அப்படியே நோய் உங்களின் பாவங்களை சுத்தப் படுத்துகிறது.
நூல்: முஸ்லிம்)

பெரும் பாவங்களுக்கு அடுத்து பெரும் பாவம் தான் பட்ட கடன்களை செலுத்துவதற்கு எதுவுமே விட்டு வைக்காமல் மரணிப்பது ஆகும் .
நூல்:அபூதாவூது )

மனிதா ! உன் ஆரம்பம் சிறு துளி இந்திரியம் .முடிவில் நீ ஒரு பிணம் .இதற்க்கு இடையில்  சுமந்திதிருப்பதோ மலம் . நீ விரும்பியபடி வாழ்ந்து கொள் நிதம் . நிச்சயமாக நீ மரணிப்பது நிஜம் . நீ விரும்பிய செல்வங்களை சேமித்து வைத்துக் கொள் உன் வசம் . அவை உன்னை விட்டுப் பிரியத்தான் போகிறது ஓர் தினம்.
அல்ஹதீஸ் )

அல்லாஹ் மிக அறிந்தவன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!