அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

செவ்வாய், டிசம்பர் 24, 2013

கற்றது கையளவு ......இறைவனிடம் கையேந்துங்கள் ..அவன் இல்லையென்று சொல்வதில்லை ..
அல்லாஹ்  கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றான். நாம் துஆ கேட்பதற்கு தயாரா..?
அல்லாஹ்வின் திருபெயரால் .......

உங்களில் எவரேனும் தூங்கிவிட்டால் ஷைத்தான் அவருடைய பிடரியின் மீது மூன்று முடிச்சுகளை  போட்டு ஒவ்வொரு முடிச்சிலும் (அவருடைய உள்ளத்தில் ) இன்னும் நீண்ட இரவு மீதமிருக்கிறது . நீ நன்றாக தூங்கு என்று ஊதிவிடுகிறான். ஆனால் அம்மனிதர் விழித்து அல்லாஹ்வை திக்ரு செய்வாரானால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு அவர் ஒளு செய்வாரானால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது . மேலும் அவர் தொழுதால் மூன்றாம் முடிச்சும் அவிழ்ந்து விடுகிறது. அவர் அதிகாலையில்  தெளிவான உள்ளத்துடன் மகிழ்ச்சியுடன் எழும்பி விடுகின்றார் . அவ்வாறல்லாமல் அவர் விழிக்க வுமில்லை  , ஒளு செய்யவுமில்லை , தொழவும் மில்லையானால்  அன்றைய காலை பொழுதில் சோம்பல் உடையவராக கெட்ட மனமுடையவராக விழித்து எழுகிறார் .


நூல்: புகாரி ,முஸ்லிம், அபூதாவூத் .

துன்பமா ? துவளாதீர்
உள்ளத்தாலும் கண்களாலும் துன்பத்தை வெளிப்படுத்துவது இறைவன் புறத்தில் உள்ளதாகும் . கையாலும் நாவினாலும் துன்பத்தைக் காட்டுவது ஷைத்தானின் செயலாகும் .
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்
நூல்:அஹமது .

எவரிடம் மூன்று விசேஷங்கள்  உள்ளனவோ அவர் மீது இறைவன் தன்னுடைய  கையை வைப்பான் .
1.ஏழைகள் மீது இறக்கம் கொள்வது
2.பெற்றோர் மீது அன்பு (பாசம்) வைப்பது
3.பணியாளருக்கு உதவி செய்வது

பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது .நற் செயல்களைத் தவிர எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.
நூல்: இப்னு மாஜா .

எவர் ஒருவர் என்னிடம் கையேந்தி துஆ  வேண்டுவதை விட்டு விட்டு குர் ஆன் ஓதுவதிலும் திக்ரு செய்வதிலும் ஈடுபடுவாரோ அவருக்கு என்னிடம் கை ஏந்தி துஆ  கேட்பவருக்கு  அளிப்பதை விட மேலானதை கொடுத்தருள்வேன்.
நூல்:திர்மிதி.

வானங்கள் பூமியைப் படைப்பதற்கு  50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  அல்லாஹ் படைப்பினங்களின் அளவு முறையை நிர்ணயித்து விட்டான். அப்போது அவனுடைய  அர்ஷ் தண்ணீர் மீது இருந்தது .
நூல்: முஸ்லிம்.

மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தி  அடைவதாகும். மனிதனுக்குரிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையை வேண்டுவதை கைவிடுவதாகும் . இன்னும் மனிதனுக்குரிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியை கொண்டு அதிருப்தி  அடைவதாகும்.
நூல்: திர்மிதி .

நிச்சயமாக ஒருவர் நெடுங்காலமாக சொர்க்கவாதியின் செயல்களைச் செய்து வருகின்றார் . பின்பு அவருடைய (எழுதப்பட்ட விதியினால்) முடிவில் நரகவாசிகளின் செயல்களால் (நரகவாசியாகி) விடுகின்றார் . நிச்சயமாக நெடுங்காலமாக ஒருவர் நரகவாதியின் செயல்களைச் செய்து வருகிறார்  (எழுதப்பட்ட விதியினால்) அவருடைய முடிவில் சொர்க்க வாசியாகி விடுகின்றார் .

நூல்:  முஸ்லிம்)

துஆ பிரார்த்தனையை விட வேறு எதுவும் விதியை மாற்ற முடியாது.
நூல்: திர்மிதி)

இங்கே தந்துள்ள அனைத்து ஹதீஸ்கள் ஆதாரம் உள்ளவைகள் . நம் வாழ்க்கைக்கு படிப்பின்னை பெற இவைகள் போதும்! விதியைப் பற்றி நாம் அதிகம் கேள்வி கேட்க்க  கூடாது , அந்த விதியை நாம் திருப்தி கொள்ள வேண்டும் . விதியை மாற்ற கூடியது ஒரு விடயம் இருக்கிறது என்றால் அது தான் " துஆ "  . இன்று நம்மில் நிறைய பேறுகள் என்னையும் சேர்த்து , இந்த துஆ விடயத்தில் அளச்சியமாக இருக்கிறோம் , அதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறோம் . துஆவின் சிறப்பு, மகிமை , அது ஒரு பெரிய ஆயுதம் சொல்லிக்கொண்டே போகலாம்..........அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!