அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, டிசம்பர் 14, 2013

மனிதனின் மரணமும் வாழ்வும்.
அல்லாஹுதஆலா கூறுகிறான்:

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர்  என்பதைச்  சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும்  படைத்தான் ; மேலும் அவன் (யாவரையும் ) மிகைத்தவன் ; மிக மன்னிப்பவன் .
அல்குர் ஆன் :67:2)


அல்லாஹுதஆலா மரணத்தை படைத்து பிறகு வாழ்வை படைத்தான் என்று கூறுகிறான் .இந்த மரணம் என்பது உலகத்தின் முடிவு மறுமையின் ஆரம்பம் .
மறுமையில் இந்த மரணத்துக்கு ஒரு மரணம் உண்டு .ஒரு ஆட்டின் உருவத்தில் மரணம் வந்து அது அறுக்கப்படும் .(ஒரு ஹதீஸின் கருத்து )

ஒரு முடிவான வாழ்க்கைக்காக நாம் அன்றாடம் படும் கஷ்ட்டம் சொல்லி மாளாது .ஒரு முடிவு இல்லாத வாழ்க்கைக்காக நாம் அளச்சியமாக இருப்பது , நல்ல அமல்கள் செய்யாமல் காலத்தைக் கழிப்பது நம்மை என்ன சொல்வது ?

நரகத்தைப் பற்றி அல்லாஹ் எச்சரிக்கிறான் .அது எப்படி இருக்கும் அதன் எரிபொருள் என்ன வென்று நமக்கு கூறுகிறான்:

முஃமின்களே ! உங்களையும் , உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் ; அதன் எரிபொருள் மனிதர்களும் ,கல்லுமேயாகும் ; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல் ) இருகின்றனர் ; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள் ; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.
அல்குர் ஆன் : 66:6)

யாரின் முடிவு யாரும் அறிய முடியாது. ஒருவர் எந்த நிலையில் மரணிக்கிறார் ,அந்த நிலையில்தான் அவர் எழுப்படுவார் . அல்லாஹுதஆலா கூறுகிறான்:

மேலும், ஸூர் ஊதப்பட்டதும் , உடனே அவர்கள் சமாதிகளிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள் .
"எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிருந்து எங்களை எழுப்பியவர்  யார் ? "
என்று அவர்கள் கேட்ப்பார்கள் ; அர்ரஹ்மான் வாக்களித்ததும் (அவனுடைய ) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான் " (என்று அவர்களுக்கு கூறப்படும்)

ஒரே ஒரு பேரொலி தவிர (வேறொன்றும் ) இருக்காது; உடன் , அவர்கள் யாவரும் நம்முன் கொண்டுவரப்படுவார்கள்.

அன்றியும் , அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும்  ஏதும் அநியாயம் செய்யப்படமாட்டாது ; இன்னும் நீங்கள் செய்தவற்றிகே இன்றி (வேறு எதற்கும் ) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.

அந்நாளில் நிச்சயமாக சுவர்க்கவாசிகள் (தங்கள்) அலுவலில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

அவர்களும் , அவர்களுடைய மனைவியரும் நிழல்களில் கட்டில்களின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

அங்கே அவர்களுக்கு (பலவகைக்) கனி வகைகள் உண்டு ; இன்னும் அவர்களுக்கு அவர்கள் வேண்டுவது கிடைக்கும்.

'ஸலாமுன் ' என்று , நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு .
அல்குர் ஆன் : 36; 51டொ 58)

ஒரு முஃமின் நல்ல முறையில் நடந்து கொள்வார் , அவருக்கு எது நடந்தாலும் நலவுதான் நன்மைதான் . முஃமின் விடயத்தில் ஆச்சிரியம்தான் ! முஃமினைப் பற்றி அல்லாஹுதஆலா தன் திருமறையில் கூறுகிறான் :ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர் .
அவர்கள் எத்தகையோரென்றால் , தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள் .
இன்னும், அவர்கள் வீணான (பேச்சு ,செய்யல ஆகிய) வற்றை விட்டு விலகி இருப்பார்கள் .

ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள் .
மேலும் ,அவர்கள் தங்களுடைய வெட்க தளங்களைக் காத்துக் கொள்வார்கள் .
ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டு) நிச்சயமாக அவர்கள் பழிக்கமாட்டார்கள் .
ஆனால், இதற்க்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய) வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள் .
இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட ) அமானிதப் பொருட்களையும் , தங்கள் வாக்குறுதிகளையும் காப்பற்றுவார்கள் .
மேலும், அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு ) பேணுவார்கள் .
இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின் ) வாரிசுதாரர்கள் .
இவர்கள் ஃ பிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை ) அனந்தரங்  கொண்டு அதில் இவர்கள் என்றேண்டும் தங்கியிருப்பார்கள்.
அல்குர் ஆன் ; 23; 1-11)

இந்த வசனத்தை படித்து இதில் அல்லாஹ் கூறியது போல முஃமின் தன்மைகள் நம்மிடம் இருக்கிறதா என்று நாம் நாமே சோதித்து பார்த்து கொள்ள வேண்டும்!

சுவனத்திலே மிக உயர்ந்த சுவனம் ஜன்னதுல் ஃ பிர்தவ்ஸ்  இது கிடைப்பது எவ்வளவு பெரும் பாக்கியம்!

நாம் நிறைய பாவங்கள் செய்து இருப்போம் இருப்பினும் நமக்கு அறியாமலே ஒன்று தோன்றும் " இவ்வளவு பாவம் செய்து விட்டோம் இனி நம்மை அல்லாஹ் மன்னிப்பானா ? என்று மனதில் தோன்றும் "  (வரம்பு மீறி பாவம் செய்பவர்கள்)
அல்லாஹுதஆலா கூறுகிறான்:

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான் .அவன் மன்னிப்பவன் ; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
அல்குர் ஆன் ; 39;53)

பாவங்கள் செய்யாத மனிதர்கள் இல்லை. இருப்பினும் ஒருவர் பாவம் செய்து பிறகு அவர் உணர்ந்து , மனம் திருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோர வேண்டும்!
இதுதான் மனித இயல்பு .

ஒவ்வொரு மனிதனும் அவன் மரணித்த நிலையிலேயே  எழுப்பபடுவான் என ரசூல் (ஸல்) கூறினார்கள்
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
ஆதாரம்: முஸ்லிம்)

நாம் இந்த உலகத்தில் எப்படி வாழ்கிறோம்  அல்லாஹுவும் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய வழியின்ப் படியா ? அல்லது மனோ இச்சையின் படியா ? சுவனம் போக எல்லோரும் ஆசைப்படுவார்கள் . நரகம் போவதற்கு பயப்படுவார்கள் . இது மனித இயல்பு !
சுவனம் போக வெறும் பெயர் அளவில் முஸ்லிமாக இருந்தால் மட்டும் போதாது முஸ்லிமாக வாழ வேண்டும் .ஒரு நல்ல முஃமின்னாக மாற வேண்டும்! நல்ல அமல்கள் செய்ய வேண்டும்! நாமும் செய்து ,பிறருக்கும் நாம் எத்தி வைக்க வேண்டும்!

இச்சைகளைக் கொண்டு நரகம் திரையிடப்பட்டுள்ளது . கஷ்டங்களைக் கொண்டு சுவனம் திரையிடப்பட்டுள்ளது என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பாளர் : அபூஹுர்ரைரா (ரலி)
ஆதாரம் : புகாரீ ,முஸ்லிம்)

புத்திசாலி யார் ? முட்டாள் யார் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ரொம்ப தெளிவாக ஒரு ஹதீஸில் அறிவித்து இருக்கிறார்கள்:

எவன் தன் மனத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு மரணத்திற்கு பின் வரவிற்கும் வாழ்க்கைக்காக அமல் செய்கிறானோ அவனே புத்திசாலி ஆவான் . தன்னைத் தன் மனத்தின் தகாத இச்சைகளின் பின்னே அலைய விட்டு விட்டு அல்லாஹ்விடம் தவறான நம்பிக்கை வைத்துக் கொண்டிருப்பவன் முட்டாள் ஆவான் . என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
ஆதாரம்: திர்மிதி)

அல்லாஹ்  மனிதனை படைத்த நோக்கம் , மரணத்தையும் ,வாழ்வையும் படைத்த நோக்கம் . அல்லாஹ்வை வணங்குவதற்காக , யார் செயல்களில் மிக அழகானவர் என்பதை சோதிப்பதற்காக மரணத்தையும் ,வாழ்வையும் படைத்தான் .

நாம் வாழ்க்கையின் பொருளை விளங்கிக் கொண்டால் , நமக்கு மறுமையின் ஆசை வந்து விடும். அதிகம் அமல் செய்ய ஆர்வம் பிறந்து விடும் .

அல்லாஹ் மிகவும் அறிந்தவனாக இருக்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!