செவ்வாய், டிசம்பர் 24, 2013

திருந்தாத சில ஜென்மங்கள்




கந்தூரி
மூடநம்பிக்கை
ஆனாச்சாரம்
விழாக்கள்
அறியாமை
இன்னும் பல கூத்துக்கள்  நடந்துகொண்டு தான் இருக்கிறது.


தமிழக முஸ்லிம்கள் எதையுமே விழாவாக்குவதில்  கைதேர்ந்தவர்கள் ஆக உள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்குக் கூறப்பட்டால் நபியைப் பின்பற்றுவதன் அவசியத்தை அதிலிருந்து உணர மாட்டார்கள். மாறாக அதை எப்படி விழாவாக்குவது என்பதிலேயே அவர்களின் கவனம் செல்கின்றது.

இறை நேசர்களின் சிலர் இந்த மார்க்கத்துக்காக ஆற்றிய சேவைகளைக் கூறினால் 'நாமும் அப்படிச் செய்ய வேண்டும்' என்று அதிலிருந்து உணர மாட்டார்கள். மாறாக அதை எப்படி விழாவாக ஆக்கலாம் என்பதில் தான் அவர்களுக்குக் கவனம்.

முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளை மறக்கச் செய்வதற்காக ஷைத்தான் விரிக்கும் மாய வலைகள் இவை .

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் மவ்லூது ஓதினால் போதும்; எல்லாக் கடமைகளையும் புறக்கணிக்கலாம் என்ற மனப்பான்மையை வளர்த்தது இந்த விழாக்கள் தான் .

உண்மையான முஸ்லிம்கள் இது போன்ற விழாக்களை முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.

சமீபத்தில் நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு எழுதுகிறேன்:
வசந்த் டிவியில் புலன்விசாரணை என்ற நிகழ்ச்சி  வழியாக (ஒளிப்பரப்பு ஆனது தேதி 22/12/13) மாவட்டம் ஊர் பெயர் ஞாபகம் இல்லை . சில முஸ்லிம்கள் செய்த கூத்துக்கள் , ஷிர்க்கு என்னும் இணைவைப்பு "  ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய் விடுகிறார் அவரை தேடும் பணியில் ஈடுப்பட்டும் , அவரை கண்டுபிடிக்க முடியவில்லை பிறகு  யாரோ ஒருவர் கனவில் அவர் வந்து " நான் புலியால் அல்லது வேற மிருகத்தால் கொல்லப்பட்டுவிட்டேன் இப்பொழுது நான் ஒரு மரத்தடியில் இருந்து வருகிறேன் " என்று கூறிவிட்டார் . இதா நடந்தது பிறகு என்ன நடந்ததது ? அந்த மரத்தில் அருகில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது . அந்த நிகழ்ச்சியை நீங்கள் பார்த்தால்தான் உங்களுக்கு புரியும் ! எனக்கு சொல்வதற்கே வாய் கூசுகிறது . முஸ்லிம்கள் அடிக்கும் லூட்டி , கூத்துக்கள் இதைப் பார்த்து கொண்டிருக்கும் சில மாற்றுமத சகோதரர்கள் " அவர்கள் கேட்க்கும் கேள்வியினால் நம்மால் பதில் சொல்ல முடியவில்லை ". ஒரு இறைவன் என்று சொல்கிறீர்கள் ஆனால் உங்கள் சில முஸ்லிம்கள் இப்படி எல்லாம் செய்கிறார்களே ? என்ன சொல்வது ? அறியாமையா ? அல்லது இஸ்லாம் கல்வி இல்லாமையா ? அல்லாஹ்வின் அச்சம் இல்லாமையா ? உண்மை சொல்லவேண்டுமானால் இவர்களுக்கு அல்லாஹ்வின் பயம் இல்லை .மறுமையின் நம்பிக்கை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்னொரு விடயம் ஒன்று இருக்கிறது அதையும் எங்கே சொல்லித்தான் ஆக வேண்டும்: காதல்
ஒரு ஊரில் ஒரு முஸ்லிம் வாலிபன் (வயது 20 அல்லது அதிகம் இருக்கும் அல்லாஹ் அறிந்தவன்) அவன் முஸ்லிம் பெண்ணை காதலித்தான் , பிறகு அந்த பெண்ணுக்கு வேற இடத்தில் திருமணம் நிச்சயம் ஆனது . அந்த வாலிபன் கோபத்தில் " நீ என்னை மணக்காமல் (திருமணம் செய்யாமல் ) வேற ஒருவனை மணக்க போறியா என்று அவளை கத்தியால் குத்தி விட்டான் " . அவ்வளவுதான் ! பிறகு நீங்களே புரிந்து கொள்ள வேண்டுடியதுதான் ! காதல் மோகம் எந்த அளவுக்கு கொண்டு செல்லுகிறது என்று .

அல்லாஹ் நம் பிள்ளைகளைப் பாதுக்காக்கனும் ! நல்ல பிள்ளகைகளாக ஆக வேண்டும் ! அல்லாஹ்வின் அச்சம் உள்ளவர்களாக ஆக வேண்டும்! ஆமீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!