அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், ஜனவரி 16, 2014

சமுக சீர்கேடும் முஸ்லிம் உம்மத்தும்......

ரயில் போகும் பாதையை விட்டு கொஞ்சம் நகர்ந்தாலும் நிச்சயமாக விபத்தும் நேரிடும்.அதுபோல நம் முஸ்லிம் பெண்கள் அல்லது ஆண்கள் இஸ்லாமிய பாதையை விட்டு விட்டு வேறு பாதைக்கு (மேற்கத்திய கலாச்சாரம்) சென்றால் நிச்சயமாக அது வழிகேட்டில் கொண்டு போய் சேர்க்கும் .


இலங்கையில் மத கலாச்சாரத்திற்கு மதிப்பளித்து  கலாச்சாரத்தை  பின்பற்றி ஏனைவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்த சமுகம் எமது முஸ்லிம் சமுகம். மத விடயமாக இருக்கட்டும் அபிவிருத்தி, கல்வி ,அரசியல் ,  தலைமைத்துவம், பொருளாதாரம்   இவை அனைத்திலும்  ஏனைய சமுகத்திற்கு எடுத்துகாட்டு எமது சமுகம் என்பதை  வெட்கப்படாமல்  தலை நிமிர்ந்து  சொல்ல முடியும் அப்போது  ஆனால் இப்போது  நிமிர்ந்த தலையை   குனிய வேன்டிய  காலம்  நெருகிக்கொன்டே இருக்கிறது   வெட்கத்தில் அல்ல   அவமானத்தில். இன்று எமது முஸ்லிம் சமுகத்தின் பெருமையை  ஒரு வார்த்தை நாம் பேசினால் கேவலமான பல வார்த்தை வெளிவருகிறது.  இந்த நிலைக்கு யார் காரணம்? நாம் தான் காரணம்  ஈமான் பலவீனமாகிவிட்டது.

தொழிநூற்பம்  வளர வளர நமது ஈமான் பலவீனமாகிகொண்டே இருக்கிறது .பாடசாலை மாணவி காதலனோடு   தலைமறைவு  என்று ஆரம்பித்த செய்தி மாற்றான் மனைவி. கள்ளக் காதலன்.  என்று செய்தி வரும் வரை தற்போது எமது சீர்கேடு அபிவிருத்தி அடைந்துள்ளது நல்ல முன்னேற்றம்.  ஒருவரது தவறு  அந்த குடும்பம்.பரம்பரை  பிரதேசம் முஸ்லிம் சமுகம் வரை அவமானத்தை  ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கிய காரணம் கட்டாய  திருமணம். சிறுவயது திருமணம். ஆடம்பரம். ஈமானின் பலவீனம். நாளைய  மறுமையை நம்பியவர்கள்  நாங்கள்  மஹ்சரில்  கேட்கப்படும்  வாலிபத்தை எவ்வாறு கழித்தாய்? என்ற வினாவுக்கு விடை கொடுக்காமல் ஓர் அடியானின் பாதம் மறுமையில் நகர முடியாது என்பதை பின்வரும் ஹதீஸ் எச்சரிக்கின்றது- ‘மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது’. அவை யாவன…

01. தனது வாழ்க்கையை எவ்வாறு கழித்தாய்?

02. தனது வாலிபப் பருவத்தை எந்த விடயங்களில் ஈடுபடுத்தினாய்?

03. செல்வத்தை எவ்வாறு சம்பாதித்து எவ்வாறு செலவு செய்தாய்?

04. பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தாய்? (ஆதாரம் – தபராணி)

சில மஹரம் இல்லாத ஆண்கள் . மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் பெண்களுக்கு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்றுமத இளைஞர்கள் காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இது இருக்கிறது. விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், மொபைல் போன் இண்டெர்னெட் வடிவில் வந்துவிட்டது. முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலம் நேரடியாக அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள்.

இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.

மேலும் (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக. ‘தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும். தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும் அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்.

தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்;

மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம்.

அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31)

பாவத்திலிருந்து தௌபா செய்யக்கூடியவன். பாவமே இல்லாதவனைப் போன்று ஆகிவிடுகின்றான்  என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத்  (ரலி)
ஆதாரம்: இப்னு மாஜா
muhasabanet.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!