அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வெள்ளி, ஜனவரி 24, 2014

அன்னியப் பெண்களுடன் தனித்திருத்தல்

அன்னியப் பெண்களுடன் தனித்திருத்தல்
மனிதர்களை வழிகெடுப்பதில்  ஷைத்தான் மிகுந்த பேராசையுடையவன் அதனாதான் நாம் அவனது சூழ்ச்சியில் சிக்கி விடக்கூடாது என அல்லாஹ் எச்சரிக்கிறான் :

விசுவாசிகளே ! ஷைத்தானுடைய அடிச்சுவட்டைப் நீங்கள் பின்பற்றாதீர்கள் .(ஏனென்றால் ) எவன் ஷைத்தானுடைய அடுச்சுவட்டை பின்பற்றிச் செல்கிறானோ அவனை, அவன் மானக்கேடான விஷயங்களையும்  பாவமான காரியங்களையும் செய்யும்படி நிச்சயமாக தூண்டிக் கொண்டேயிருப்பான் .

அல்குர் ஆன் 24:21)மனிதனின் ரத்த நாளங்களில் எல்லாம் ஊடுருவும் ஷைத்தான் மனிதனை வீழ்த்துவதற்கான வழிமுறைகளில் ஒன்றுதான் அன்னியப் பெண்களுடன் தனித்திருக்கச் செய்வதும்.

அதனால்தான் அத்தகைய தீமைகள் நடைபெறுவதற்கான அனைத்து வழிகளையும் இஸ்லாம் முற்றிலும் அடைத்துவிட்டது.

நபி (ஸல்) அவர்கள் அருளியதாக அபூஹுர்ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு ஆண் (அன்னியப் ) பெண்ணுடன் தனித்திருப்பானேயானால் நிச்சயமாக மூன்றாமவனாக ஷைத்தான் இருக்கிறான்.
(திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : எனது இன்றைய தினத்துக்குப் பிறகு எந்தவொரு மனிதனும் அவனுடன் ஒன்று அல்லது இரு ஆண்கள் இணைந்தே தவிர கணவன் வீட்டில் இல்லாத நிலையில் உள்ள பெண்களிடம் நுழைய வேண்டாம்.
சஹீஹ் முஸ்லிம்)

எந்தவொரு மனிதனும் மனைவியின் சகோதரிகள் , ஊழியம் செய்யும் பெண் போன்ற அன்னியப் பெண்ணுடன் வீட்டிலோ வாகனத்திலோ பிரயாணத்திலோ தனிமையில் செல்வது தடை செய்யப்பட்டதாகும் .

பெரும்பாலானோர் தன் மீதுள்ள நம்பிக்கையாலோ அல்லது வேறு காரணத்தினாலோ இது விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறார்கள் .அதன் விளைவாக இழிவான செயல்களில் வீழ்ந்து தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் பெருகிவிடும் விபரீதத்துக்கு வித்திடுகிறார்கள் .

அன்னியப் பெண்களிடம் முஸாபஹா செய்வது :
அன்னியப் பெண்கள் கரம் பற்றி முஸாபஹா செய்வது சமூகத்தில் சிலரிடையே காணப்படும் வரம்பு மீறிய செயலாகும். இது விஷயத்தில் அல்லாஹ்வின் கட்டளையைவிட வழிகெட்ட கண்மூடித்தனமான பழக்கங்களே முன்னிலை பெறுகின்றன .இந்நிலையில் மார்க்கச் சட்டங்களைக் கூறி இப்பழக்கங்களை கண்டிப்பவரை பிற்போக்குவாதி , இரத்த பந்துக்களைத் துண்டிப்பவர் , வீண் சந்தேகங்களை ஏற்படுத்துபவர் என்றல்லாம் விமர்சிக்கிறார்கள் . பெரிய தந்தை சிறிய தந்தையின் மகள் , சகோதரனின் மனைவி , தந்தையின் சகோதரர்களின் மனைவி , மாமாவின் மனைவி போன்ற திருமணம் செய்யத் தடையில்லாத பெண்களுடன் முஸாபஹா செய்வது நமது சமூகத்தில் வெகு சாதாரன்மாகிவிட்டது .

இச்செயல் சமூகத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்தால் நிச்சயமாக அதைத் தவிர்த்து விடுவார்கள் .

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவருடைய தலையில் இரும்பினாலான ஊசியால் குத்துவது அவருக்கு தொட அனுமதியில்லாத பெண்ணைத் தொடுவதை விட அவருக்குச் சிறந்ததாகும் .
தப்ரானி)

இவ்வாறு கை கொடுப்பது கையினால் செய்யப்படும் விபச்சாரம் என மார்க்கம் கூறுகிறது .

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரு கண்கள் விபச்சாரம் செய்கின்றன .இரு கைகளும் விபச்சாரம் செய்கின்றன . இரு கால்களும் விபச்சாரம் செய்கின்றன மர்மஸ்தானம்  விபச்சாரம் செய்கிறது .
முஸ்னத் அஹ்மத் )

நபி (ஸல்) அவர்களைவிட தூய உள்ளமுடையவர் வேறு எவரேனும் இருக்க முடியுமா ? ஆனால் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"நிச்சயமாக நான் (அன்னியப் ) பெண்களிடம் முஸாபஹா செய்ய மாட்டேன் (கை கொடுக்க மாட்டேன்)
முஸ்னத் அஹ்மத் )

பெண்கள் வாசனை பூசிக் கொண்டு ஆண்களிடையே செல்வது :

நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்திருந்தும் இது நமது பெண்களிடையே மிகுதமாக பரவி நிற்கும் தீமையாகும் .

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எந்த ஒரு பெண் நறுமணம் பூசி அதை ஆண்கள் நுகர வேண்டுமென்பதற்காக அவர்களிடையே நடந்து செல்கிறாளோ அவள் விபச்சாரியாவாள் .
முஸ்னத் அஹ்மத்)

சில பெண்கள் இது விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர் . தங்களது டிரைவர் , கடைக்காரர் , காவலாளிகள் போன்றவர்களிடம் நறுமணம் பூசிய நிலையில் நெருங்கிப்  பழகுகிறார்கள் . ஆனால் இதை மார்க்கம் வன்மையாகாக் கண்டிக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண் நறுமணம் பூசி தனது நறுமணத்தை பிறர் நுகர்வதற்காக பள்ளிவாசலுக்கு செல்வாளானால் அவள் பெருந்தொடக்குக்காக குளிப்பது போன்று குளிக்கும் வரை அவளது தொழுகை ஒப்புக் கொள்ளபடாது .
முஸ்னத் அஹ்மத் )

நமது குடும்பப் பெண்கள் திருமண விழாக்களில் நறுமண கமழ ஆண்களிடையே வலம் வருகின்றனர் . அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.

பெண்களுக்கான நறுமணப் பொருட்ள்கள் நிறமுடையதாக , இலேசான மனமுடையதாக இருக்க வேண்டுமென்பது மார்க்க சட்டம்.

அன்னியப் பெண்ணை வேண்டுமென்று பார்ப்பது:
(நபியே!) விசுவாசிகளான ஆண்களுக்கு நீர் கூறும் : அவர்கள் தங்கள் பார்வையைக் கீழ்நோக்கியே வைக்கவும் . அவர்கள் தங்கள் கற்பையும் காத்துக் கொள்ளவும் . இது அவர்களை பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை  நன்கறிந்து கொள்கிறான் .
அல்குர் ஆன்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கண்ணின் விபச்சாரம் எபது பார்வையாகும்"
சஹீஹூல் புகாரி)

அதாவது அல்லாஹ் பார்க்க கூடாது என்று தடுத்ததை பார்ப்பது கண்ணினால் விபச்சாரம் செய்வதாகும்.
பெண் பேசுபவர் ,மருத்துவர்  போன்றவர்கள் பார்ப்பது அனுமதிக்கப்பட்டதாகும் .அவ்வாறே ஒரு பெண் ஆணை மயக்கும் விதமாக பார்ப்பது ஹராமாகும் .

(நபியே!) விசுவாசமுள்ள பெண்களுக்கு நீர் கூறும் : அவர்களும் தங்கள் பார்வையைக் கீழ்நோக்கியே வைத்து தங்கள் கற்பையும் காத்துக் கொள்ளவும் .
(அல்குர் ஆன்

இச்சையுடன் சிறுவர்களை பார்ப்பதும் , ஒரு ஆண் மற்று ஆணின் மறைவிடத்தை பார்ப்பதும், ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மறைவிடத்தை பார்ப்பதும் மார்க்கத்தில் விலக்கப்பட்டதாகும்.

சிலர் பத்திரிகைகளிலும் சினமாவிலும் வரும்  உருவத்தை அது நிழல்தான் நிஜமல்ல என்று கூறி அதைப் பார்க்கிறார்கள் . ஆனால் இதில் இச்சை ஏற்படுவதும் குழப்பம் உருவாவதும் மிகத் தெளிவானதே ஆதலால் இதுவும் தடை செய்யப்பட்டுள்ளது .


அல்லாஹ் மிக அறிந்தவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!