அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, ஜனவரி 25, 2014

தூங்குகிறதா ... இஸ்லாமிய சமுதாயம் ...?
சமீபகாலமாக சமுதாயத்திற்கு மிகப்பெரும் தலைகுனிவை உண்டாகுவது ஆண்-பெண் இளவயதினர்கள் காதல் , காமம் என்று தடம்புரண்டு செல்வது , இஸ்லாத்தில் பிறந்து இளவயதினர் "முர்த்தத்து " எனும் ஈமானை இஸ்லாத்தை  பறிகொடுத்துவரும் சம்பவங்களுமாகும் . இந்த நிலைகள் திட்டமிட்டோ , சூழ்நிளைகளிநாளோ தினமும் நடந்து கொண்டிருப்பதை தாங்கள் அறிவீர்கள். சமீப காலத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளும், தகவல்களும் மிகவும் மனவேதனை அளிக்கின்றன. இஸ்லாத்தின் தூய கொள்கைகளையும் , மேன்மைமிகு சகோதர -சமத்துவத்தையும் , சமூக நல்லிணக்கத்தையும் ஆராய்ந்து உலகில் பல நாடுகளில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக இணைந்து கொண்டிருக்கும் வேளையில் , நாம் வாழக்கூடிய நமது பகுதிகளில் இஸ்லாத்தில் பிறந்தவர்களின் ஈமானை பாதுகாக்க வேண்டிய நிர்பந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டு உள்ளோம் . பெற்றோர்களும் , சமூதாயமும் தீவிரமாக பரிசீலினை செய்ய வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றோம்.

பெரும்பாலும் இந்த மதம் மாறும் நிலைக்குக் காரணம் காதல் வலையில் சமுதாய இளவல்கள் சிக்கித் தவிப்பதுதான் . கல்லூரிகள் , விடுதிகள், அலுவலங்கள் ஆகிய ஆண் -பெண் கலப்புள்ள இடங்களில் நம் பிள்ளைகளும் சுதந்திரமாக பழகி வருகின்றனர். இனக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு காதல் என்ற பெயரில் எல்லாவற்றையும்  இழக்கத் துணிந்து விடுகின்றனர். இது ஒரு வரட்டுத் துணிச்சல் என்பது திருமணத்திற்கு பின்போ , கற்பை இழந்ததற்கு பின்போதான் அந்த இளசுகளுக்கு தெரிகிறது. அதற்குள் காரியம் கைமீறிப் போயிருக்கும் . மானம் கப்பலேறியிருக்கும்.

தாய்ப்பாசம் ,தந்தையின் அரவணைப்பு , உடன் பிறந்தவர்கள் உறவினர்கள், சமுதாயத்தின் கண்ணியமான நட்புகள் யாவற்றையும் தூக்கிஎறிந்  துணியும் இன்றைய  வாலிப ஆண்கள், பெண்கள் விலைமதிக்க முடியாத ஈமானையே  இழந்து நிரந்தர நரகத்தை தேடிக் கொள்ள இளைஞர்கலும் , குமரிப் பெண்களும் துணிந்து விடுகின்றனர் . இந்த இளசுகளை காதல் மோகம் , அதில் கிடைக்கும் அற்பசுகம் , பக்குவமில்லாத பருவம், வாழ்வில் அனுபவமில்லாத இளைய நண்பர்கள் தரும் ஊக்கம் , சினிமா , டிவி தரும் தவறான உணர்வுகள் யாவும்  சேர்ந்து வாழ்வில் எல்லாவற்றையம் இழக்கத் தூண்டிவிட்டு சமுதாயத்தையே தலைகுனிய வைத்துவிடுகின்றன .

பெற்ற தாயும் , தந்தையும் புத்திர சோகத்தால் அழுது புலம்பி வெளியே தலைகாட்ட முடியாமல் கூனிக்குறுகி அணு அணுவாக செத்து கொண்டிருப்பதும் , உற்றார் உறவினர் பரிதவிப்பதும் , சமுதாயத்திற்கு ஏற்படும் தலைகுனிவும், அவமானமும் எதுவும் காதல் போதையில் இருக்கும் அவர்களின் கண்களில்படுவதில்லை. குறைந்தபட்சம் தங்களுக்கு பிறக்கும் குழைந்தைகளும் இதே பாணியை கையாண்டு காதல் வலையில் சிக்கி, தாய் தந்தையுடன் மோதி , இவர்கள் ஒழித்துக்கட்டி அவமானப்படுத்த துணிந்தால் தங்கள் நிலைமை என்னவாகும்? என்பதை இந்த விடலைகள் எண்ணிப் பார்ப்பதில்லை. இதையெல்லாம் காதலுக்காக செய்யும் தியாகம்! என இவர்கள் வசனம் பேசலாம். சினிமா வாழ்க்கை வேறு நடைமுறை வாழ்க்கை வேறு , நிழல் உலகக் கனவு உண்மை வாழ்க்கைக்கு ஒத்துவராது என்பதும் இவர்களுக்கு உரைப்பதில்லை.

அடிப்படை கோளாறு: பெற்றோர்கள் தம் பிள்ளைகளை கஷ்டமே தெரியாமல் செல்லமாக வளர்ப்பதுதான் . அதுதானாக செல்லமாக வளர்ந்தாலும் சரி அல்லது பிள்ளைகளின் பிடிவாதத்தால் அவர்களை கண்டிக்காமல் வளர்ந்தாலும் சரி , விளைவு ஒன்றுதான். கடன் பட்டாவது படிக்க வைக்கிறார்கள். மக்களின் மனம் நோகாது கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள் . கொஞ்சம் வளர்ந்தவுடன் பிள்ளைகள் சுயமாக முடிவெடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் பாலுக்கும், பாய்சனுக்கும் வித்தியாசம் சொல்லி வளர்த்தவர்கள், பாவத்திற்கும், புண்ணியத்திற்கும் வித்தியாசம் சொல்லி வளர்ப்பதில்லை . மார்க்கத்தின்  அறநெறிகளை சொல்லி வளர்க்க வேண்டிய அவர்கள் மேலை நாட்டு நாகரீகத்தை புகட்டி அதில் பெருமைப்படிகிரார்கல்.

இதனால் நம் இளைய தலைமுறையினரிடம் வெட்கம் , மானம் ஒழுக்கம் ஆகிய மாண்புகள் எல்லாம் கேலிப் பொருட்களாகத் தெரிகின்ற பரிதாப நிலை தான் காணப்படுகிறது. தொழுகை, மார்க்கப்பற்று , நல்லுரைகள் கேட்பது , நல்ல பழக்க வழக்கங்கள் , நல்ல நண்பர்களுடன் பழக்கம்- இவற்றையெல்லாம் சொல்லி அதை ஏற்று நடக்காதவரை தங்கள் மக்கள் செல்வம் தங்களுக்கு சொந்தமில்லை .

மதமாற்றத்திற்கு வறுமையும் ஒரு காரணம்தான் . வறுமையால் ஈமானை இழக்கத் துணிகின்ற ஒருவரிடம் அந்த ஈமான் ஆழமாகப் பதியவில்லை என்பதுதான் பொருள்.இதற்கும் பெற்றோரே காரணம். சிறுவயதிலேயே இஸ்லாத்தை கற்பிக்க வேண்டும். ஈமானின் அவசியத்தை உணர்த்த வேண்டும். மறுமையைப் பற்றிய சிந்தனையை ஊட்ட வேண்டும். அத்துடன் வறுமை கோட்டிற்குக் கீழே மூச்சுவிட முடியாமல் திணறும் குடும்பங்களை கண்டறிந்து அவர்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற மஹல்ல ஜமாஅத் , இஸ்லாமிய அமைப்புகள் , இளைஞர் மன்றங்கள் பாடுபட வேண்டும் . ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே ஒழுக்கமாக வளரும் . இறைவன் நல்ல பண்பாளர்களாக உங்கள் பிள்ளைகளை வளர்ப்பான் .

ஆக மதம் மாறிவிடுவதும் , பாலியல் மோகத்தால் தடம்மாறிச் செல்வதும் சமுதாயத்தின் அழிவிற்கு அடிகோலுவதும் , கலாச்சார சிதைவுக்கு வழி கோலுவதுமாகும். நம் சமுதாயத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கி விடும். சமந்தப்பட்ட அனைவரும் இதன் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக செயல்பட முன்வர வேண்டும் .

அல்லாஹ் நம் பிள்ளைகளைப் இந்த கேடுகட்ட கலாச்சாரத்தில் இருந்தும் ,இந்த காதம் மோகத்திலிருந்து காப்பானாக .ஆமீன்
அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!