அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, ஜனவரி 26, 2014

ஷைத்தானின் சூழ்ச்சி
ஷைத்தானாகிறவன்,  தனக்குதானே இழைத்துக்கொண்ட அநீதியை அறியாதவனாக அனைத்தும் அறிந்தவனும் ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து விட்டான். இருந்தாலும் தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பது ஒரு புறம் இருக்க, தான் செய்ததும் முன்பு எண்ணியதுமே சரி எனப்பட்டு , வெளிரங்க காரணமாகிய ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வஞ்சித்துப் பழிவாங்கும் பகைமை  உணர்வுடன் வைராக்கியம் பூண்டு விட்டான் . வல்லோனின் ஹிக்மத்தை அவனைத் தவிர உள்ள எந்த சிருஷ்டிகளும் அறிந்து கொள்ள முடியாது.


அல்லாஹ் கூறுகிறான்:  "மறைவானவற்றின்  சாவிகள் அவனிடந்தான் இருக்கின்றன .அவற்(ரிலுள்ளவர்) றை அவனையன்றி வேறெவரும் அறியார் ".
குர் ஆன் -6-59)

எவ்வாறு ஷைத்தான் தன் தவறை உணராதவனாக இறை கட்டளையை மீறி (இறைமறுப்பு) செய்தானோ அதுபோல் அல்லாஹ்விடத்தில் இவன் கூறியதை ஆதமிடம் அவர்களின் மக்களிடத்திலும் நிறைவேற்றி வருகிறான் . ஆதமும் , அவர்தம் மக்களுமாகிய இப்பேதை மக்கள் இன்று வரையுலும் இதை அறிய முடியாது போனார்கள். (அவன் நாடிய பேர்களைத் தவிர ) எவ்வாறென்றால் , காரணங்களைக் கூறியும் , அதில் நம்பிக்கை கொண்டும் "தான் " என்று சரீரத்தை முன் வைத்து இல்மு , அமல் ,ஆற்றல் என்ற வகையில் எண்ணம் உறுதியாகி , இறை மறுப்புடன் வாழ்பவர்களாகி விட்டார்கள். ஷைத்தானுடைய தன்மை இவ்விதம் இவர்களிடத்தில் படர்ந்து படிமானம் ஆகிவிட்டது.

அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக (அவர்கள் தன்னைப் பின்பற்றுவார்க்லென்று) அவர்களைப் பற்றி இப்லீஸ் எண்ணிய என்னத்தை, உண்மை என்றே அவன் கண்டு கொண்டான் . ஆகவே விசுவாசங்கொண்ட சிலரைத்தவிர (மற்ற) அவர்கள் யாவரும் அவனையே பின்பற்றினார்கள் "
குர் ஆன் -34-20)

ஷைத்தான் தனக்குதானே செய்து கொண்ட அநீதியானது: இல்மு ,அமல், இரண்டிலும் உயர்ந்தவனாக இருப்பதும் , அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றிருப்பதும் அவனது நெஞ்சத்தில் பெருமையை உண்டாக்கி விட்டது. இதைதான் ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளது .

ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் உங்களில் யாரும் தங்களுடைய அமலைக் கொண்டு ஈடேற்றம் பெற முடியாது என்று கூறினார்கள். அப்போது சஹாபாக்கள் , 'தாங்களும் ஈடேற்றம் பெற முடியாதா ? என்று வினவ ' ஆம் நானும் ஈடேற்றம் பெற முடியாது', ஆனால் அல்லாஹ் தனது ரஹ்மத்தைக் கொண்டு என்னை மறைத்துக் கொண்டாலே தவிர" என்று நவின்றார்கள் .
(மிஷ்காத் )

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: உங்களில் யாருடைய அமலும் உங்களை சொர்க்கத்தில் நுழைய வைக்கவோ , நரகில் நின்றும் காப்பாற்றவோ முடியாது , நானும் அவ்வாறே . ஆனால் அல்லாஹ்வின் ரஹ்மத்தைக் கொண்டு ஈடேற்றம் பெற்றாலே தவிர " என்று கூறினார்கள்.
மிஷ்காத்)

ஷைத்தான் வெளிரங்கமாகவும் அல்லாஹ்வின் கட்டளையை புரகநித்தவனாக , தான் நெருப்பால் படைக்கப்பட்டவன் என்றும் , மண்ணால் படைக்கப்பட்டுள்ள ஆதம் (அலை) தாழ்ந்தோர் என்றும் சஜ்தா செய்யாமல் விலகிக் கொண்டான் .

(ஆகவே இறைவன் இப்லீஸை நோக்கி) "நான் உனக்கு கட்டளையிட்ட சமயத்தில் நீ சிரம்பணியாதிருக்கும்படி உன்னைத் தடை செய்தது எது ? என்று கேட்டான் . அதற்க்கு இப்லீஸ் , " நான் அவரை விட மேலானவன் . (ஏனென்றால் ) நீ என்னை நெருப்பால் சிருஷ்டித்தாய் . அவரை களி மண்ணால் சிருஷ்டித்திருக்கின்றாய் ;" (களி மண்ணை விட நெருப்பு உயர்ந்தது) என்று (இறுமாப்புடன் ) கூறினான்.
குர் ஆன் -7-12)

நெருப்பானது ஒன்றை ஆக்குவதற்கும் , அழிப்பதற்கும் பயன்படுவதைப் போன்று நெருப்பால் படைக்கப்பட்டுள்ள ஷைத்தான் தன்னை அல்லாஹ்விடத்தில் ஆகுமாக்கிக் கொண்டிருந்த காலமெல்லாம் அது அவனுக்கு நன்மையாக இருந்தது. தன்னை தவறாக பயன் படுத்தியபோது (அது தனக்குதானே ) அல்லாஹ்விடத்தில் அழிவை உண்டாக்கிவிட்டது. முதன் முதலில் அல்லாஹ்விடத்தில் மரணித்தவன் ஷைத்தானாகவே இருக்கின்றான்.

அல்லாஹ்விடத்தில் தனக்கு அழிவை உண்டாக்கிவிட்டது எது ? என்ற சத்தியத்தை தவறவிட்டு தன்னை மறந்து விட்டான் ஷைத்தான் . தனக்கு நாசத்தை உண்டாக்கிவிட்ட அந்த நஞ்சு கலந்த நெருப்பைக் கொண்டே சுவர்க்கத்தினுல் பிரவேசித்து ஆதம் (அலை) ஹவ்வா இருபேர்களிடத்திலும் அதனை பாய்ச்சி விட்டான் . இவ்வாறு , அவன் செய்து கொண்ட சபதத்தை நிறைவேற்றப் புறப்பட்டுவிட்டான் .

அல்லாஹ் கூறுகிறான்: , (அதற்க்கு இப்லீஸ் ) "நீ என்னைப் பங்கப்படுத்தியதால் (ஆதமுடைய சந்ததிகலாகிய ) அவர்கள் உன்னுடைய நேரான வழியில் செல்லாது (தடை செய்ய வழி மறித்து அதில்) உட்கார்ந்து கொள்வேன்" என்று கூறினான் .
(குர் ஆன் -7-16)

குறிப்பு : ஆசையின் காரணமாக இன்பத்தை அனுபவிக்க தீவிரமாகும்போது , காமத்தீ உடலில் பரவுகிறது அது போன்று சத்துருவாகிய கோபம் ஏற்படும் போதும் உஷ்ணம் மேலோங்கி அறிவிழக்க வைக்கின்றது .இவ்வாறே அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்துக்களை அனுபவித்திருந்தும் அறிவிழந்து , அழிவுக்கும் ஆளாகிய ஷைத்தான் , அதே ஆசை எனும் தீயை ஆதம் (அலை) , ஹவ்வா , இருபெரின் உள்ளத்திலும் எரியவைத்து விட்டான் .

அழகுக்கு அடிமையாகி அதை விரும்புவதும் அதை அடைய நினைப்பதும் இயல்பானதால் (உலக அளவிலும் மார்க்க ரீதியிலும் சரியே) சுவன பதிக்குப் பாத்திரமான இஸ்லாத்தின் சம்பூரண பூராயத்துவத் தன்மையைப் பெற்றிருந்த ஆதம் (அலை), ஹவ்வா இருவரிடத்திலும் அவர்கள் பெற்றிருந்த சுவனபதி தன்மையில் குறைவு செய்ய நாட்டம் கொண்டு , சுவனத்தை மிக்க அழகானதாகக் காட்டினான் ஷைத்தான் . அத்துடன் அதில் ஆசையை ஏற்படுத்துகின்ற வகையிலும் பேசலானான் . அழகு மிக்கதும், அனுபவிப்பதில் மிகச் சிறந்ததுமான இந்த இடத்தில் நின்றும் உங்களை வெளியேற்றுவதற்காகவே அல்லாஹ் ஒன்றை விலக்கியுல்லான் .இவ்வாறு நயம்பட , நன்மை செய்யவே அன்றி தீங்கிழைப்பவன் அல்ல என்பன போன்று , முருக்கித் திரித்து பாசாங்கு செய்து நஞ்சு கலந் ஆசைத்தீயை மூட்டி விட்டான் .

இன்ஷாஅல்லாஹ் இன்னும் வளரும்...................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!