திங்கள், ஜனவரி 27, 2014

ஷைத்தானின் சூழ்ச்சி (தொடர்ச்சி)

Allah save us from Shaiththaan !
Allah bless us anytime!
Allah help us every time!


அல்லாஹ்வின் திருபெயரால் ....
இதன் தொடர்ச்சியாக ... இந்த கட்டுரை எங்களுக்கு, உங்களுக்கும் பயன் தரும் ,சில படிப்பினை தரும் என்று அல்லாஹ்வை நம்பி சமர்பிக்கிறேன்.


"எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு (இப்லீஸ்) ஷைத்தான் , (தவறான எண்ணத்தை) அவர்கள் மனதில் ஊசாடச் செய்து அவர்களை நோக்கி (அதன் கனியைப் புசித்தால் ) நீங்கள் இருவரும் மலக்குகலாகவோ,அல்லது மரணமற்றவர்களாகவோ ஆகி விடுவீர்கள் என்பதற்காக இன்றி (வேறெதற்காகவும் ) உங்கள் இறைவன் இவ்விருட்சதை உங்களுக்கு தடுக்கவில்லை " என்று கூறியதுடன் " நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையையே கருதுகிறேன் ," என்று அவ்விருவரிடம் சத்தியம் செய்து , அவர்களை மயக்கி (அவ்விருட்சத்தின் கனியைப் ) புசிப்பதற்காக அதன் பால் (அவர்களை)ச் செல்ல வைத்தான் "
குர் ஆன் -7:20,21,22)

(முடிவில் அவ்விருவரும்  (தடுக்கப்பட்ட) அதனைப் புசித்து விட்டார்கள் .
குர் ஆன் :20-121)

அவர்களும் ஷைத்தான் கொடுத்த அறுந்து போகின்ற கயிற்றைப் பற்றி பிடித்துக்கொண்டார்கள். ஆசை கொண்டு நிரந்தரமாக தங்கி அனுபவித்துக் கொள்ளும் பொருட்டு , ஷைத்தான் மூட்டிய தீ எரிய ஆரம்பித்தபோது சுவனபதிக்குப் பாத்திரமான இஸ்லாமிய சம்பூரனத்  தன்மையில் குறைவு ஏற்ப்பட்டதன் காரணமாக தவறு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

ஷைத்தான் கொடுத்த கயிற்றை பற்றிப் பிடித்ததின் காரணமாக இஸ்லாம் என்ற தன்மையில் குறைவு ஏற்பட்டு அவர்கள் பிடித்திருந்த கயிறு அறுந்துவிட்டது. அவர்களின் கண்ணில் பட்டதெல்லாம் கல்புக்கு வராமல் இருந்த காலமெல்லாம் , அல்லாஹ்வின் பாதுகாப்பிலும் , பொறுப்பிலும் அவனளவில் இருந்து கொண்டிருந்தார்கள் . இப்பொழுது கண்ணில் பட்டதை மேம்படுத்தி அழகு , ஆசை அவைகளை அடைந்து அனுபவித்துக் கொள்வது என்ற வகையில் கல்பில் எண்ணங்கள்  ஆகி விட்டதால் (ஊடுருவி விட்டதால்) கல்பானது அல்லாஹ்வைக் கொண்டு நரைந்து அவனது பேரின்ப திருக்காட்சியில் திரை உண்டாகிவிட்டது ஆதலால் அல்லாஹ்வின் கோபம் உண்டாகி வெளிரங்கமான காரணங்களைக் காட்டி சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றிவிட்டான் ஹிக்மத் உடைய நாயன் (அல்லாஹ்).

(அதற்கு இப்லீஸ்) "நீ என்னைப் பங்கப்படுத்தியதால் , (ஆதமுடைய சந்ததிகலாகிய) அவர்கள் உன்னுடைய நேரான வழியில் செல்லாது (தடை செய்ய வழி மறித்து அதில்) உட்கார்ந்து கொள்வேன் , நிச்சயமாக அவர்களுக்கு முன்னும், பின்னும் அவர்களின் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் அவர்களிடம் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டே இருப்பேன் ஆகவே அவர்களின் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோராக நீ காணமாட்டாய் ; என்றும் கூறினான் .
குர் ஆன் :7-16,17)

"மேலும் (நபியே!) நீர் குர் ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) வெருட்டபட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக!.
(குர் ஆன் :16-98)

'சத்தியமாக அறிந்து கொள்ளுங்கள்! ஷைத்தான் மனித மனங்களில் ஊசாட்டங்கலை உண்டு பண்ணி அதற்க்கு ஏற்பத் திட்டமிட்டு நிர்ணயம் செய்து முயற்ச்சியின் ஈடுபடவைக்கிறான் . அதாவது அவனது கைப்பாவையாக ஆட்டிப்படைக்கிறான் . அவனது நோக்கத்தை (திட்டத்தை) இவ்விதம் இஸ்லாமிய இனத்தவர்களிடையே செயல்படுத்துகிறான். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி)  அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஷைத்தான் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தவனாக மனிதனுடைய மனதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் . மனிதன் அல்லாஹ்வை திக்ரு செய்தால் ஷைத்தான் இயலாதவனாக கேவலமடைந்து பின் வாங்கி ஓடி விடுகிறான் . மனிதன் அல்லாஹ்வை மறந்திருந்தால் ஷைத்தான் அவன் மனதில் ஊசாட்டதை போடா ஆரம்பிக்கிறான் .
(மிஷ்காத் )

அல்லாஹ் கூறுகிறான்: "(நேர்வழி பெரும்) அவர்கள் எத்தகையோரென்றால் , அவர்கள் தாம் (முற்றிலும் ) ஈமான்கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தியானத்தால்தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
குர் ஆன் :13-28)

மறுமை நாளின்போது அல்லாஹ்விடத்தில் ஷைத்தான் இதையேதான் கூறுபவனாக இருக்கிறான். எப்படி என்றால் , 'உங்களின் உள்ளங்களில் ஊசாட்டங்கலை (எண்ணங்களை  ) போட்டேன் ; நீங்களோ சிந்தித்து உணராது செயல்பட்டீர்கள் . இவ்வாறு  செயல்பட்டது நீங்களேயன்றி நானில்லை . இந்த நேரத்தில் உங்களின் செயலுக்கு உரிய கூலியை நீங்களே பெறக்கூடியவர்கள் . நான் உங்களுக்கு யாதொரு உதவியும் செய்ய முடியாது . நீங்களும் எனக்கு  யாதொரு உதவியும் செய்ய முடியாதவர்களால இருக்கின்றீர்கள் ' என்பதாக கூறிவிடுவான் .

மறுமையில் இவர்கள்பற்றித்) தீர்ப்புக் கூறப்பெற்றதும் ஷைத்தான் இவர்களை நோக்கி " நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதியையே வாக்களித்திருந்தான் , நானும் உங்களுக்கு வாக்களித்திருந்தேன் , ஆனால் நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கில் மாறு செய்து விட்டேன்  நான் உங்களை அழைத்தேன்  ; அப்போது நீங்கள் என் (அழைப்பி)னை ஏற்றுக் கொண்டீர்கள் என்பதைத் தவிர எனக்கு உங்களுக்கு மீது யாதொரு அதிகாரமும் இல்லை"
குர் ஆன் :14-22)

எனதருமைச் சகோதரர்களே! நன்றாகச் சிந்தியுங்கள். சாதாரணமாக உலக காரியங்களில் ஈடுப்படும்போதுகூட  அந்தந்த காரியங்களைப் பற்றி எண்ணம் கொண்டு முடிவு செய்து பிறகு செயல்படுவது சாத்தியமாகும். அவ்வாறு இல்லையென்றால் செய்யல்படுவதற்குண்டான தடயங்களோ, முகாந்திரமோ  இல்லாமலாகிவிடும் . இவ்வாறு அகத்தேயும் , புறத்தேயும் (உள்ளும், புறமும்) ஒருங்கிணைந்து செயல்படுவது தான் மனிதப்பண்புகளில் நின்றும் உள்ளதாக இருக்கின்றது.

அகத்தேயும் புறத்தேயும் ஒன்றுபட்டுச் செயல்படுவது மனிதப் பண்பில் நின்றும் உள்ளது. ஆகையால், இஸ்லாத்தின் அடிப்படையில் நீர் புரியும் வணக்க வழிப்பாடுகள் புற நிலையில் மட்டும் காட்டிக் கொண்டு அகத்தினுள்  அகிலத்தின் இச்சா பாசங்களுக்கு ஏற்ப மோதவிட்டு நிலை தடுமாறித் திரியும் நீ எந்தப் பிரிவைச் சார்ந்தவன் ?

நீ எந்தெந்த வழிகளிலெல்லாம் திரும்புகின்றாயோ அந்ததன் வழிகளிலெல்லாம் ஷைத்தான் உன்னை வழி மறித்து நிற்கின்றான் என்பதை அறிந்து கொள்! ஏனென்றால் , உன்னிடத்தில் இஸ்லாம் என்ற புனிதத்தன்மையும் தூய்மையும் இல்லாதபோது உன்னிலே சக்கீனத் என்ற அமைதிக்கு இடம் இல்லை ஆகிவிட்டது. இஸ்லாத்தின் தன்மையை அறிந்து அத்தகு தன்மையுடன் அலைமோதித் திரியும் உன் மனதை ஒப்பிட்டுப்பார் .

அல்லாஹ் கூறுகிறான்: "பதுங்கி இருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (ரப்பிடத்தில் காவல் தேடுகிறேன் ) அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகின்றான் ".
(குர் ஆன் :144-4,5)

இன்ஷாஅல்லாஹ் அடுத்ததில் இறுதி பகுதியைப் பார்ப்போம் !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!