அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, ஜனவரி 11, 2014

வாழ்க்கையின் பொருள் ...
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்....
அல்லாஹ் நம்மை மனிதனாக படைத்ததற்கு அல்லாஹுக்கே எல்லாப் புகழும்!
அல்லாஹ் நம்மை முஸ்லிமாக பிறக்கவைத்தான் அல்லாஹுக்கே எல்லாப் புகழும்!
அல்லாஹ் நம்மை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தாக ஆக்கி வைத்தான் அல்லாஹுக்கே எல்லாப் புகழும்!
நாம் முஸ்லிமாக இருக்கிறோம் ஆனால் ???

அல்லாஹு தஆலா கூறுகிறான் : மறுமையில் நன்மை, தீமை நிறுக்கும் ஒரு துல்லியமான தராசு ..

وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا ۖ وَإِن كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا ۗ وَكَفَىٰ بِنَا حَاسِبِينَ

இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும். 21:47

நாம் அதிகம் அதிகம் நன்மையை செய்ய வேண்டும் . தீமையை விட்டு விலக வேண்டும் . நாம் செய்த தீமையான காரியத்தை அல்லாஹ்விடம் மன்றாடி அழுது பாவமன்னிப்பு (தௌபா ) செய்ய வேண்டும். அல்லாஹ் நிச்சயமாக பாவங்களை மன்னிக்க போதுமாணவன். நம் வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்றால் , அல்லாஹ்வின் அச்சமும் அவன் மீது நம்பிக்கையும் இரண்டுக்கும் மத்தியில் நாம் இருக்க வேண்டும் . நம் பாவங்கள் நினைத்து அஞ்சி இருக்க வேண்டும். அதே சமயத்தில் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை இருக்க வேண்டும். அல்லாஹ் நிச்சயமாக எல்லாப் பாவங்களையும் மன்னிப்பான் என்று மனதில் உறுதியுடன் இருக்க வேண்டும். அல்லாஹ்வின் மீது அவநம்பிக்கை வந்து விட கூடாது. அடுத்து : நாம் அதிகம் அதிகம் நன்மை செய்யும் போது அந்த நன்மைகள் இக்லாஸுடன் (தூய எண்ணத்துடன் ) அவசியம் இருக்க வேண்டும் . அதில் எந்த அசுத்தமும் கலந்து விடாமல் நாம் கவனமாக இருக்க வேண்டும்! எது செய்தாலும் அல்லாஹுக்கே (அவன் பொருத்தத்தை நாடி ) பெருமை, முகஸ்தூதி , புகழ்காக, பிறர் பாராட்ட வேண்டும், இவ்வைகளில் ரொம்ப ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . அப்படி கலந்து விட்டால் அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ள மாட்டான் .

அல்லாஹ்வின் ஒரு நல்லடியார் (வலிமார்) கொள் சொல்வதைப் பற்றி கூறும்பொழுது "பிறர் கூறுவதை உன்னிடம் தூக்கிக்  கொண்டு ஓடிவருபவன் நீ கூறுவதையும் பிறரிடம் தூக்கிக் கொண்டு ஓடுபவன் . எனவே அவனுடன் தொடர்ப்பு கொள்வதைத் தவிர்ந்து கொள்வதே சிறப்புடையது " என்று எடுத்துரைத்தார்கள்.

என்ன ஒரு அழகான கருத்து . இதில் நமக்கு ஒரு முக்கியமான படிப்பினை இருக்கு.
மேலே கூறியது போல அல்லாஹ்வின் ஒரு நல்லடியார் அவர்தான் ஹஸன் பஸரீ (ரஹ்)

இவ்வுலக வாழ்வைப் பற்றி:
இவ்வுலக வாழ்வைப் பற்றி  அவர்கள் எடுத்துரைக்குங்கால் , "மனிதன் இவ்வுலகை விட்டு நீங்கும்பொழுது மூன்று விதமான வருத்தங்களுடன் செல்கின்றான் . அவை1 தான் தேடியவற்றை முழுக்க முழுக்க அனுபவிக்க இயலவில்லையே என்ற வருத்தம் 2) தான் விரும்பிய அனைத்தையும் தன்னால் எய்தப் பெற இயலவில்லையே என்ற வருத்தம். 3) தான் மறுமைக்காக யாதொன்றையும் தேடிக் கொள்ளவில்லையே என்ற வருத்தம் ஆகும்" என்று கூறினார் (ஹஸன் பஸரீ (ரஹ் )

மேலும் அவர்கள் கூறியது , "இவ்வுலகில் பற்றற்று வாழ்பவர்கள் ஈடேற்றம் பெறுவார்கள். ஏனையோர் அழிந்தொளிவார் . இவ்வுலக வாழ்வை இறைவன் தன்னிடம் நல்கிய அடைக்கலப் பொருளெனக் கொண்டு அதனை அவன் கேட்குங்கால்  அவனிடம் அதனை மகிழ்ச்சியுடன் எவன் ஒப்படைக்கின்றானோ அவனுக்கு இறைவன் பேரருள் பாலிப்பானாக !

மேலும் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களை நோக்கி , " எங்களின் இதயங்கள் உறங்கிக் கிடக்கின்றன . எனவே தங்களின் அறிவுரைகளால் எங்களுக்கு யாதொரு நன்மையையும்  ஏற்படவில்லை . இதற்க்கு நாங்கள் என்ன செய்வது ? என்று கூறியபொழுது , " உங்களின் இதயங்கள் உறங்கிக் கொண்டிருக்கவில்லை . செத்து மடிந்து விட்டன . அதனால்தான் அதனை என்னால் உயிர்த்தெழச் செய்ய இயலவில்லை  " என்று இவர்கள் மறுமொழி பகர்ந்தார்கள் .

இன்று நம்மில் சிலருக்கு என்ன அறிவுரை சொன்னாலும் , அவர்களுக்கு போய் சேராமல் இருப்பது . அவர்களின் உள்ளம் செத்து மடிந்து விட்டதா என்று நினைக்கும் அளவுக்கு அவர்களின் கூற்றுக்கள் இருக்கும். மூடநம்பிக்கைகள் , அனாச்சாரம், நூதன காரியம், பித் அத் இதுபோன்ற செயல்கள் மார்க்கத்தில் கூடாது என்று கூறினால்  அவர்கள் ஏற்க்க மறுக்கிறார்கள். மீண்டும் மீண்டும் அவைகளைச் செய்து வருகிறார்கள்.

வாழ்வின் நோக்கம் என்ன வென்று நமக்கு புரிந்தால் நிச்சயமாக நாம் இந்த உலகத்தின் மீது வைத்துருக்கும் பற்று வெறுப்பாக மாறி விட்டிருக்கும் . இன்னும் நம் உள்ளத்தில் இந்த உலகத்தின் மோகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு நாம் செய்யும் செயல்கள் நிருபிக்கும் .

ஹாத்திம் அஸம் (ரஹ்) அவர்களின் சில கருத்துக்கள் :

ஒரு நாள் அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கும்பொழுது  தாமதிப்பது நன்மையாகவும் அவசரப்படுவது ஷைத்தானுடைய செயலாகும் இருந்தபோதிலும் விருந்தினருக்கு உணவளிப்பதும் , இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதிலும் , பருவமெய்திய பெண்களை மண முடித்துக் கொடுப்பதிலும் கடனைத் திருப்பிக் கொடுப்பதிலும் பாவ மன்னிப்புக் கோருவதிலும் துரிதப்படுவது சிறப்புடையதாகும் " என்று கூறினார்.

மேலே கூறியதை நன்றாக சிந்தித்து பார்த்தால் நிறைய விடயங்கள் புரியும். இறந்தவர்களை உடனே நல்லடக்கம் செய்ய வேண்டும் தாமதிக்க கூடாது . ஆனால் இன்று நேருக்கு மாற்றம் இவர் வராரு ,அவரு வராரு இன்னாரு வராரு என்று சொல்லியே  ஒரு நாள் அல்லது அதற்க்கு அதிகம் நாம் தாமதம் செய்கிறோம். பருவமெய்திய பெண்களை சீக்கிரம் மணம் முடித்து கொடுப்பது சிறந்த்தது , காலம் கடத்த கூடாது (சிலர் நிச்சயம் செய்து ஒரு ஆண்டு அல்லது சில ஆண்டுகள் கழித்து மணம் முடித்து கொடுக்கிறார்கள் இது ஒரு பெரிய தவறு இப்படி செய்வது கூடாது)
கடன் ரொம்ப முக்கியம் . நமக்கு மரணம் எப்பொழுது வரும் என்று தெரியாது , அதற்குள் கடனைக் கொடுத்து விடவும் . கடனுடன் இறக்க கூடாது , அது யாருக்கும் அல்லாஹ் அப்படி வைக்க கூடாது. பாவ மன்னிப்பு அதுவும் துரிதப்படுத்தவும் . நாளை பாவ மன்னிப்பு கோருவோம் , மறுநாள் கோருவோம் என்று நாட்களை தள்ளி போடா கூடாது.

வாழ்க்கைக்காக பொருள்கள் தேடுவது அவசியம் , வாழ்க்கையின் பொருளை விளங்குவது ரொம்ப ரொம்ப அவசியம் .

அல்லாஹ் மிக அறிதவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!