ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

பெண்கள் குட்டைப்பாவாடைமெல்லியஇறுக்கமான ஆடைகளை அணிவது 

தற்காலத்தில் இஸ்லாமிய எதிரிகள் தங்களது அநாகரிக கலாச்சார ஆடைகளை நம்மிடைய புகுத்தி விட்டார்கள் . அவர்களால் திணிக்கப்பட்ட இந்த ஆடைகள் பெண்ணின் மறைக்கவேண்டிய பகுதிகளை மறைக்காத வகையில் அவை குட்டையாக உள்ளன. அல்லது உடல் பகுதிகள் தெரியும் வகையில் மிக மெல்லியதாக அல்லது உடம்போடு உடம்பாக ஒட்டிக் கொண்டிருக்கின்றன .


இந்த அந்நிய கலாச்சார உடைகளில் பெரும்பாலானவைகளை அணிவது தடுக்கப்பட்டதாகும் . பெண்கள் தங்களுக்குள் அல்லது மஹ்ரமான ஆண்களுக்கு மத்தியில் கூட அணியக் கூடாது . இதுபோன்ற தீமைகள் சமுதாயத்தில் உருவாகுமென நபி [ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்தார்கள்.

நபி [ஸல்]  அவர்கள் கூறியதாக அபூஹுர்ரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள் .. நரகவாசிகளில் இரு கூட்டத்தார் இருக்கிறார்கள். அவர்களை நான் [இப்போது] பார்க்கவில்லை . அவர்களில் ஒரு கூட்டம் தங்களிடம் மாடுகளின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பார்கள். அதனால் மக்களை அடித்துத் துன்புறுத்துவார்கள். மற்றொரு கூட்டம் பெண்களாவர் . அவர்கள் ஆடை அணிந்திருப்பார்கள்  . ஆனால் அது அவர்களை மறைக்காது நிர்வாணமாகக் காட்சியளிப்பார்கள்  . இவர்களின் தலை, உயரமான கழுத்துள்ள அங்குமிங்கும்  சாயும் ஆண்  ஒட்டகைகளின்  திமில்களைப் போல இருக்கும் . இவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள் . அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள் . சுவனத்தின் வாடையை இன்னின்ன  தூரத்திலிருந்தும் அடைந்து கொள்ளலாம்.
[ஸ ஹீஹ் முஸ்லிம் ]

சில பெண்கள் நீளமான கீழாடையை அணிகிறார்கள். ஆனால் அது கீழிருந்து கிழிக்கப்பட்டதாக  இருக்கிறது . அவர்கள் உட்காரும் போதும் நடந்து செல்லும்போது  அவர்களது அங்கங்கள் தெரிகின்றன. இவ்வாறான ஆடைகளை  அணிவது குற்றம் .

சிலர் பாடகர், நடிகர்களின் உருவங்கள், மதுக் கிண்ணங்கள், உயிருள்ளவைகளின்உருவங்கள் , சிலுவைகள், தவறான நடத்தியுள்ள அமைப்புகள், சங்கங்களின் [கிளப்] அடையாளச் சின்னங்கள், தவறான வாசகங்கள், படங்களை உடைய ஆடைகளை அணிகின்றனர் . இவைகள் சமூக சீர்கேட்டை உருவாக்குகிறது . அந்நியர்களின் கலாச்சாரத்தை இத்தூய்மையான கலாச்சாரத்தில் கலந்துவிடக் காரணமாகிவிடும் . இவையனைத்தும் முற்றிலும் சமூகத்திலிருந்து தூக்கி எறியப்பட வேண்டிய தீமைகள்  .

இன்று வித விதமான புர்க்காக்கள்  வந்து இருக்கிறது. அதில் சில வகைகள் ரொம்ப மெல்லியதாக இருக்கிறது  , உள்ளே இருக்கும் ஆடைகள் வெளியில் தெரியுபடி காட்சியளிக்கிறது  . அதுபோன்ற வகைகளை தவிர்க்க வேண்டும் .

சில பெண்கள் பாலியல் குற்றத்திற்கு ஆளாகும் ஒரு முக்கிய காரணம் இந்த ஆடைகள்தான்  . துப்பட்டாவைக் கழுத்தில் சுற்றிக் கொண்டு திரிவது . ஆண்களை ஈர்க்கும் வகையில்  உள்ளது எதார்த்த உண்மை! ஆடைகளை நெருக்கமாக அணிவது  , மெல்லிய விதமாக அணிவது . இவைகள் எல்லாம் தீமைகளை உண்டாக்குகிறது என்பதில் ஒரு துளிக் கூட சந்தேகம் இல்லை.

சில முஸ்லிம் பெண்கள் தங்கள் தலை முடிகளை வெளியில் தெரியும்படி வெளியில் செல்கிறார்கள்  .[பின்முடிகள்] இதுவும் தவறானது .ஒட்டுமுடி [சவரி ] கட்டுவது  இஸ்லாத்தில் கூடாது. ஆணாயினும் பெண்ணாயினும் தனது முடியுடன் ஒட்டுமுடி கட்டுவது ஹராமாகும் . அது மனித முடி அல்லது மிருக முடியாயினும் சரியே!

அஸ்மா பின்த் அபூபக்கர் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. ''ஒரு பெண் நபி [ஸல்] அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு மணப்  பருவத்தில் ஒரு மகள் இருக்கிறாள். அவளது தலையில் பொடுகின் காரனாக முடி கொட்டி விட்டது. அவளுக்கு நான் ஒட்டுமுடி அணிவிக்கலாமா? '' என்று கேட்டாள் . நபி [ஸல்] அவர்கள்  ''ஒட்டுமுடி கட்டுபவனையும் கட்டி விடுபவனையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று கூறினார்கள்.''
ஆதாரம் /ஸ ஹீஹ்  முஸ்லிம்]


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!