அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

புதன், பிப்ரவரி 26, 2014

நபிவழி நல்வழிஅல்லாஹ்வின் திருபெயரால் .........
ஒரு மனிதன் காலையில் எழுந்த உடன், அவன் மாலையில் படுக்கும் வரை .அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறை .

உண்பதிலும் பருகுவதிலுமுள்ள நபி வழி முறைகள் :
சாப்பிடுவதற்கு முன் கரங்களை சுத்தப்படுத்துவது நன்மையைப் பெரும் செயலாகும் . சாப்பிட்ட பின் சுத்தப்படுத்துவது முஸ்தஹப்பு (விரும்பத்தக்கது )ம் சுன்னத்து மாகும் .

உணவு விரிப்பு (சுப்ரா ):

ஏதேனுமொரு  துணி அல்லது கைக்குட்டையை தரையில் விரித்து உணவை அதன் மீது வைத்து சாப்பிட வேண்டும். தோலினால் செய்யப்பட்ட விரிப்பாக இருந்தாலும் சாலச் சிறந்ததாகும் .

பிஸ்மில்லாஹ் கூறுதல் :

இது அவசியமான சுன்னத்தாகும் . பிஸ்மில்லாஹ் கூறி சாப்பிட வேண்டும். இல்லையெனில்  ஷைத்தானும் சேர்ந்து விடுகிறான் . உணவின் பரக்கத்து அகன்று விடுகின்றது . ஆரம்பத்தில் நினைவு இல்லையென்றால் சாப்பிடுமிடையில் நினைவு வந்ததும்; பிஸ்மில்லாஹி  அவ்வலஹூ வஆகிரஹூ " எனக்கூறிக் கொள்ள வேண்டும். இதனால் பரக்கத்து மீண்டும் ஏற்பட ஆரம்பிக்கின்றது .

உண்ணும் பொழுது உட்காருதல் :

உணவருந்தும் பொழுது இரு கால்களையும் நேட்ட வைத்து அல்லது ஒரு காலை படுக்க வைத்து மறுகாலை நிற்க வைத்து அல்லது இரு கால்களை மடித்து உட்கார வேண்டும். இது சுன்னத்தான வழிமுறை !

கரங்களை உபயோகித்தல் :

உண்பதற்கும் பருகுவதற்கும் வலது கரத்தை உபயோகப்படுத்த வேண்டும். சாப்பிட்ட பின் விரல்களை சூப்பிக் கொண்டால் மாபெரும் நன்மைகள் உண்டு .

சாப்பாட்டுக் கவளம் :

உண்ணும் பொழுது கவளம் கீழே விழுந்து விட்டால் அதை சுத்தப்படுத்தி சாப்பிட வேண்டும். ஷைத்தானுக்காக விட்டு விடக் கூடாது. இதைப் போன்று சாப்பிட்ட பின் கீழே விழுந்து விட்ட உணவின் பருக்கைகளை எடுத்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

மாமிசம் உண்பது :

மாமிசம் உண்பது சுன்னத்தாகும் . நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "மாமிசம் இம்மையிலும் மறுமையிலும் உணவு வகைகளில் தலைசிறந்ததாகும் " என நவின்றுள்ளார்கள் .

சாப்பிடும் பாத்திரம் :

உணவருந்திய பாத்திரத்தை சுத்தப்படுத்திக் கொண்டு விரல்களை சூப்பிக் கொள்ள வேண்டும். எவர் இந்த சுன்னத்தை நிறைவேற்றுவாரோ அவர் அளவில்லா நன்மையைப் பெறுவார் . மேலும் அப்பாத்திரமும் அவருக்காக பாவ மன்னிப்பு கோரி துஆச் செய்யும். (இன்று தட்டையை சுத்தமாக வளித்து சாப்பிடுவது அநாகரிகமாக சிலர் கருதுகிறார்கள் . இது தவறான கருத்துக்கள் ஆகும் )

திருமணம் :

எளிமையான முறையில் நடைபெறும் திருமணமே சுன்னத்தான முறையாகும் . இதில் ஆடபரங்கள் அதிகமான பொருட்களும் இருக்க கூடாது . நாள் : திருமணத்திற்கு சுன்னத்தான நாள் வெள்ளிகிழமை ஆகும் . இதனால் பரக்கத்தும் நலன்களும் உண்டாகின்றன .  இடம்: பள்ளிவாசலில் திருமணம் முடிப்பது சுன்னத்தாகும் .அறிவிப்பு செய்தல் : திருமணம் பலரறிய நிகழ்வது சுன்னத்தாகும். பேரீத்தம் பழம்: திருமண நிகழ்ச்சிக்குப் பேரீத்தம் கனிகளை அல்லது உலர்ந்த பேரீத்தம் பழங்களை பங்கிடு செய்தல் சுன்னத்தாகும்.

வலீமா என்னும் விருந்தோம்பல் :

தனது மனைவியுடன் முதலிரவை கழித்த பின் வலீமா என்னும் விருந்தோம்பல் செய்ய  வேண்டும். தனக்குப் பிரியமுள்ளவர்கள் , உறவினர்கள் ,நண்பர்கள் , ஏழைகளை இல்லத்திற்கு அழைக்க வேண்டும். மிக அதிகமான உணவு வகைகளை கொண்டு தான் விருந்தளிக்க வேண்டுமென்பதில்லை . மாறாக சிறிதளவான உணவை சமைத்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை கூட்டி , சிறிது சிறிதாக அளித்தாலும் போதுமானதே . இவற்றைக் கொண்டு சுன்னத்து நிறைவேறி விடும். எதில் செல்வந்தர்கள் மற்றும் மேல் மட்டத்திலிருப்பவர்களை மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் , நலிந்தவர்கள் , மார்க்கபற்றுள்ளவர்கள் புறக்கணிக்க படுகிறார்களோ அவ்வலீமா விருந்து மிகவும் கெட்டதாகும் - ஏழைகள் தேவையுடைவர்களை அழைக்காமல் நிகழும் வலீமா சரியானதல்ல - மிகவும் தவறானதாகும் .

நோய் விசாரித்தல்:

முஸ்லிம் சகோதரர் நோய் வாய்ப்பட்டால் அதை விசாரிக்கச் செல்வது சுன்னத்தாகும் . நோயாளியை சந்தித்த பின்னர் தாமதிக்காமல் அங்கிருந்து திரும்பி விட வேண்டும். இதுவே சுன்னத்தாகும் . அங்கு அதிகமாக உட்காருவதினால் அவருக்கு துக்கமோ சங்கடமோ நேரலாம் . மேலும் அவரது வீட்டாரின் அலுவல்களில் இடையூறு ஏற்படலாம் . (இன்று நேருக்கு மாற்றமாக நடக்கிறது. சுன்னத்தான வழிமுறைகளை அறிந்து , மற்றவைகளை தவிர்த்து கொள்ள வேண்டும்)

ஆறுதல் கூறுதல்:

நோயாளிக்கு எல்லா வகையிலும் ஆறுதல் கூறுவது சுன்னத்தாகும். அவரிடத்தில் "இன்ஷாஅல்லாஹ் நீங்கள் அதிவிரைவில் குணமடைந்து விடுவீர்கள் . அல்லாஹுதஆலா மாபெரும் சக்தி படைத்தவனாக உள்ளான் " எனக் கூற வேண்டும்.

மருந்தை உபயோகித்தல் :

நோயிற்றுக்கும் சமயம் மருந்தை பயன்படுத்துவது சுன்னத்தாகும். குணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அல்லாஹ்வின் மீதே வைக்க வேண்டும்.

ஸலாம் கூறுதல்:

ஸலாம் கூறுவது பெரும் சுன்னத்தாகும் . நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை வலியுறுத்தியுள்ளார்கள் . ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஸலாம் கூற வேண்டும். அறிமுகமில்லாதா இருப்பினும் சரியே. ஏனெனில் ஸலாம் கூறுவது இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும் ஸலாம் கூறப்படுபவர் அறியப்பட்டவராகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை .

தும்முதல்:

தும்மினால் "அல்ஹம்துலில்லாஹ் " என கூற வேண்டும். பிறர் தும்மியதும் அல்ஹம்துலில்லாஹ் கூறக் கேட்டால் பதிலாக " யர்ஹமுகல்லாஹ் " என அவசியமாக் கூற வேண்டும் . இதுவும் சுன்னத்தாகும் இஸ்லாமிய கடமைகளில் கட்டாயமானதாகும். இதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்னும் நிறைய சுன்னத்தான வழிமுறைகள் இருக்கின்றன . இது சுர்க்கமான முறையில்  தரப்பட்டுள்ளன .

அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!