வெள்ளி, பிப்ரவரி 28, 2014

உனக்குத் தொழுகை நடைபெறும் முன் நீ தொழுது கொள் ''

இது கதை அல்ல ,,நிஜம் .

அல்லாஹ்வின் திருபெயரால் ............
அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ் ]

இது உங்களுக்கும் மட்டுமல்ல ,, எனக்கும் தாம் என்பதை பணிவுடன் தெரிவித்துகொள்கிறேன் .


இந்த வார்த்தையைப் பல பள்ளிகளில் நாம் கண்டிருக்கலாம் . வெறுமனமே எழுதினால் உரைக்காது என்று எண்ணி பக்கத்திலே சந்தூக்கையும்  படமாகப் போட்டிருப்பார்கள் . இந்த சொற்கள் எத்தனை பேரைத் திருத்தியதோ தெரியாது. ஆனால் சவூதி அரேபியாவிலுள்ள  ஓர் இளைஞ்சர்  இந்த வசனத்தால் எப்படித் திருந்தினார் என்பதை அவரே விளக்குகின்றார் . முற்றிலும் உண்மையான இந்நிகழ்ச்சி  நமக்குள்ளும் நல் உணர்வைத் தரட்டும்.

டீன் ஏஜ் !

''நான் வாலிபன்- பணக்கார வாலிபன் ,, செல்லமாக வீட்டில் வளர்ந்தவன் . ஆனால் எனக்கு வாய்த்த  நண்பர்கள் என்னைத் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடுத்திவிட்டனர்  . ஷைத்தானின் வலையில் சரியாகச் சிக்கிக் கொண்டேன். பாங்கொலி காதில் விழும்  . ஆனால் நாங்கள் பூங்காக்களில் அரட்டை அடித்துப் பொழுதைப் போக்குவோம்  . தொழுகை என்பது என் எழு வயதின் கனவாக வந்து போகும்  . மது, மாது , சூது என்று எங்கள் வாலிபம் ஜாலியாகப் போய்கொண்டிருந்தது  . என் தந்தை எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் . ஊகூம் ....எந்தப் பயனும் இல்லை.

என் தாயின் அன்பான வேண்டுகோள், கெஞ்சல்  , சகோதரர்களின் அதட்டல் , மிரட்டல்  எதுவுமே என்னை அசைக்க முடியவில்லை. பைத்தியகாரர்கள் . அனுபவிக்கத் தெரியாதவர்கள்  . இப்பொழுதே போய்  பள்ளிகளில் குவிகிறார்கள். அதற்கெல்லாம் வயது வரவேண்டாமா ? வாழ வேண்டிய வயதில் வாழ்ந்து விட்டு வயதான பிறகு தவ்பாச்  செய்து, தொழுது தாடி வைத்து, நோன்பு வைத்து, ஹஜ் செய்தால் போதாதா? என்று எனக்கு நானே சொல்லி சபாஷ் போட்டுக் கொள்வேன்.

செல்லின் அலறல் !

இளமையெனும் நதியில் இன்பமெனும் படகு செல்வம் எனும் தென்றலால் தாலாட்டப்பட்டுப் போய்க்  கொண்டிருக்கும் பொழுதுதான் திடீரென ஒரு நாள் ... எனக்கு  பேரிடியாக ... ஒரு செய்தி செல்போன்  அலறியது . காலை சுமார் 9 மணிக்கு முன்னர் கண்  விழித்திராத நான் அதிகாலை 5.30 மணிக்கு செல்லின் அலறலால் பதறி  விழித்தேன் . ''ஹலோ! யார் நீங்கள்? என்று அதட்டினேன் . எதிர் முனையிலிருந்து  பதில் வருவதற்கு முன் விசும்பல் ஒளியும் அழுகுரலும் கேட்டது . ஹலோ  என்ன விஷயம்? யார் நீங்கள்? ஏன்  அழுகிறீர்கள் ? என்று மீண்டும் கேட்டேன் . 'தம்பி நீ அஹமத் தானே' ''ஆம் '' என்றேன் . உன் ஆருயிர் நண்பன் ஹாலிது போய்ச் சேர்ந்து விட்டானப்பா...........? என்றபடி அந்தப் பெரியவர் கேவிக் கேவி  அழுகிறார் . ''என்ன சொல்கிறீர்கள் .. நீங்கள் ஹாலிதின் தந்தையல்லவா ? என்ன ஆயிற்று என் ஹாலிதுக்கு  ? இரவு நானும் அவனும் நீண்ட நேரம் ஜாலியாக இருந்தோமே '' என்று கதறினேன் .

படுத்த படுக்கை....

ஆம், உன்னிடமிருந்து பிரிந்து வந்த என் பிள்ளை படுக்கையில் படுத்தவன் தான் சற்று முன்  அவனை மெத்தையிலே மய்யித்தாகத் தான் நாங்கள் கண்டோம் ... என்ன செய்வது  ? பெரிய பள்ளிவாசலில் காலை 10 மணிக்கு ஜனாஸா  தொழுகைக்கு வா  என்று சொன்னப்படி போனைக் கட் பண்ணினார் . எனக்கு மலை ஒன்று  திடீரென சாய்ந்து மணலாக மாறி விட்டது போன்ற பிரமை ...எவ்வளவு அழகு! துடிப்பு! இளமை..! எப்படிப்பட்ட ஆஜானுபாகுவான உடம்பு ...!

இந்த வயதிலும் வருமா ?

அவனுக்காக இந்த மரணம் ? இந்த வயதிலும் மவ்த்  வருமா ? எந்த நோயும் இல்லாமலும் இப்படி திடீர் என்று இறப்பு ஏற்படுமா ? ஐயோ ..என் நண்பா ! என்னைத் தவிக்க விட்டுப் போய்விட்டாயே .. படுக்கையிலேயே அழுது  அழுது  ஓய்ந்து போனேன்  .9மணிக்கு பகீரென எழுந்தேன் . யாரிடமும் பேசவில்லை.. எதையும் எடுக்கவில்லை.. குளிக்கவில்லை .. எதுவும் குடிக்கவில்லை .. என்றாக பெரியபள்ளியை நோக்கி  நான் செல்லவும் ஜனாஸா கொண்டு வரவும் சரியாக இருந்தது.  ''ஆ... நண்பனே! ஹாலிது! என்னடா இப்படிப் போய் விட்டாய் ...!'' என்று அரற்றினேன் . என் தந்தை என்னைப் பிடித்து வைத்துக் கொண்டார் . நீ என்ன வேண்டுமானாலும் கேள்  . ஆனால் அவன் உன் உயிர்த்தோழன் எதுவுமே பேச மாட்டான். உளுச்  செய்து விட்டு அவனுக்காகத் தொழு..! என்று கூறினார் .

இது நாள் வரை என் தந்தையின் சொற்கள் எதையும் கேட்டிராத நான் முதன் முதலாக உளுச்  செய்தேன் . என் வாழ்நாளில் அது தான் நான்  தொழும்  முதல் ''மையித்'' தொழுகை . அது என் உடன் பிறவா சகோதரனுக்காக ! என்னை நேற்று  வரை இன்பத்திலேயே  ஆழ்த்தி ..இப்போது துன்பத்திலே மூழ்கிச் செய்து விட்ட என் அன்பு  ஹாலிதுக்காக ! நினைக்கும் பொழுதுதே நீர் பெருக்கெடுத்து கண்கள் குளமாயின .

ஆடிய ஆட்டமென்ன ?

தொழுகை முடிந்தது . அவனைத் தூக்கித் தோளில்  வைத்துக் கொண்டு கப்ருஸ்தானுக்கு சென்றேன்  . நேற்று வரை அவன் ஆடிய ஆட்டம் என்ன ? இன்று ஆடாமல்   கிடந்தான் 25 வயது இளைஞ்சன் . ஆயிற்று...ஆயிற்று .. எல்லாம் முடிந்தது  . என் தோழனை மண்ணுக்குள் போட்டு மூடி எல்லாரும் புறப்பட்டார்கள். ஒருவர்  கூட அவனருகில் நிற்கவில்லை . இது தான் உலகமா ? நான் அங்கிருந்து அகல  மறுத்தேன் . மண்ணறையின் அருகிலேயே நின்று அவனை எண்ணினேன் .இப்போது மண்ணுக்கடியில் கிடக்கும் என் நண்பனிடம்  மலக்குகள் வருவார்கள் கேள்வி கேட்பார்கள். என்ன பதில் சொல்வான் கொண்டு வந்ததென்ன? தொழுகையா ? நோன்பா ? தர்மமா? ஹஜ்ஜா? ஊகும் எதுவும் இல்லை .

சேமித்தவை இவைதான் !

ஆயிரமாயிரம் சினிமாக்கள். ஆபாசக்காட்சிகள் , மதுபுட்டிகள் அந்தோ .. இவைதானே நாங்கள் இன்று வரை சேர்த்தவை . இவற்றை அவர்களிடம் கொடுக்க முடியுமா? தொழுதாய ? என்று கேட்டால் என்ன பதில் சொல்லப் போகிறான் ?

செவியில் பாய்ந்த தோட்டா 1

இப்படி நான் சிந்தித்தேன் . அவனது நிலையை  எண்ணி  வேதனையால் விம்மினேன். அப்போது ஒருகுரல் என் செவிகளில் .. 'ஸல்லி கப்லா அன்யுசல்லா அலைக்க  உனக்குத் தொழவைக்கு  முன் நீ தொழுது கொள்'
''துப்பாக்கித் தோட்டாக்கள் போல என் செவியில் பாய்ந்தன அந்தச் சொற்கள் அதைச் சொன்னவர் வேறு யாரும் இல்லை என் தந்தைதான்  ... அன்றுடன் என் ஆடம்பரம் ஒழிந்தது . ஆட்டமும் , பாட்டமும் அடங்கியது . என் நண்பனுக்கு ஏற்பட்ட அந்த திடீர்  மரணம் எனக்கு வரும் முன்னர் நான் ஏதாவது செய்தாக வேண்டுமே! என் மண்ணைரைக்  கேள்விகளுக்குரிய விடைத்தாளில் எழுத வேண்டிய பதில்கள்  இப்போது பள்ளிவாசல் முன் வரிசையில் நின்று தேடிக் கொண்டிருக்கிறேன் . என் பாவங்கள்  மன்னிக்கப்பட எல்லோரும் பிரார்த்தியுங்கள்.-முஹம்மது அல்  அரீபீ  ரியாத்திலிருந்து அச்சிட்டு அனுப்பிய  கடிதம் . தாவப் செய்யும்போது புனித கஃபா வின்  அருகில் நம் கரத்தில் திணிக்கப்பட்டது .

இது நமக்கு ஒரு படிப்பினையும், பாடமும் .

அல்லாஹ்  மிக அறிந்தவன் .............
நன்றி குர்ஆனின் குரல்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!