அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வெள்ளி, பிப்ரவரி 07, 2014

முகஸ்துதிக்காக வணங்குவது
அல்லாஹ்வின் திருபெயரால் இந்த கட்டுரையை ஆரம்பம் செய்கிறேன்:
உள்ள தூய்மையுடன் அல்லாஹ்வை வணங்க அல்லாஹ் நமக்கு கிருபைச் செய்வானாக .
நல்அமல்கள்  இறை திருப்தியை நாடி மனத் தூய்மையுடன் செய்யப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் முகஸ்துதிக்காக வணங்குவது 'சிறிய ஷிர்க் ' ஆகும். அந்த நற் செயல் பயனற்றதாகிவிடும் . இது நயவஞ்சகர்களின்  தன்மை என அல்லாஹ் கூறுகிறான்.


நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக் (கக் விரும்பு ) கின்றனர் . எனினும் அல்லாஹ்வோ அவர்களை வஞ்சித்து விடுகின்றான் . அவர்கள் தொழுகையில்  நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்கு காண்பிக் (க விரும்பு) கின்றார்கள் . அவர்கள் வெகு சொற்பமாகவன்றி  அல்லாஹ்வை தியானிப்பதில்லை.                        (அல்குர் ஆன் :
"பிறர் புகழ்வதற்காக நற்செயல்கள் செய்வதும் ஷிர்க் ஆகும். இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் வன்மையாக கண்டித்துக் கூறினார்கள்:

"பிறர் புகழ்வதற்காக எவன் வணங்குகிறானோ அவனை அல்லாஹ் தண்டிப்பான் . முகஸ்துதிக்காக எவன் வணங்குகிறானோ அவனையும் அல்லாஹ் தண்டிப்பான் ."
(சஹீஹ் முஸ்லிம்)


ஒருவர் ஒரு நற் செயலை அல்லாஹ்வின் திருப்தியையும் மக்களின் புகழையும் நாடிச் செய்வானேயானால் அந்த நற் செயலும் வீணானதே .

அல்லாஹ் அருளியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : "இணை வைப்பவர்களின்  இணையை  விட்டும் நான் முற்றிலும் தேவையற்றவன் . எவர் தனது நற் செயலில் என்னுடன் பிறரை இணைத்துக் கொண்டாரோ அவரையும் அவரது இணைவைக்கும்  இந்தச் செயலுடன் விட்டுவிடுகிறேன் ."      (சஹீஹ் முஸ்லிம்)
ஒருவர் ஒரு நற் செயலை அல்லாஹ்வுக்காகத் துவங்குகிறார் . பிறகு அவரது உள்ளத்தில் முகஸ்துதி எண்ணம் ஏற்படுகிறது . உடனே அவர் அந்தத் தீய எண்ணத்தை மனதிலிருந்து அகற்றிட முயற்சி செய்வாரெனில்  அவரது நற்செயல் வீணாகிவிடாது .

ஆனால் அந்தத் தவறான எண்ணம் வரும்போது தடுப்பதற்கு முயற்சி செய்யாமலிருந்தால் அந்த நற்செயல் வீணாகிவிடும்.

அல்லாஹ் அனுமதிக்காதவைகளிருந்து  பயன்களைத்  தேடுவது :
சிலர் தாயத்துகள் , கயிறுகள் , வளையங்கள்  போன்றவற்றை அணிந்து கொள்கிறார்கள் அல்லது தங்களது பிள்ளைகளுக்கு அணிவிக்கிறார்கள் . சிலர் தங்களது கை, கழுத்து , இடுப்பில் அவைகளை கட்டிக் கொள்கிறார்கள் . சிலர் சில கற்களை ராசிக்கல் என்று கூறி அதை மோதிரங்களில் பதித்து அணிகிறார்கள் .

இவ்வகையான அனைத்து செயல்களும் இறை நம்பிக்கைக்கு  எதிரானதாகும் . இவை மென்மேலும் ஈமானில் பலவீனத்தை ஏற்படுத்துகின்றன . இவைகளில் மூலம் நிவாரணம் தேடுவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும் .

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தாயத்தைத் தொங்க விட்டவன்  அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டான் .(முஸ்னத் அஹ்மத் )

இக்காரியங்களைச் செய்பவன் , இவைகள் தானாகவே நன்மை தீமை செய்யும் ஆற்றல் பெற்றவை என நம்புவன் பெரிய 'ஷிர்க்கைச்  செய்தவனாவான் .
இவை நன்மை தீமைக்குக் காரணமாக அமையலாம் என்று நம்பிக்கை கொண்டால் அது சிறிய ஷிர்க் ' ஆகும் . அனைத்து வகை ஷிர்க்கும் பெரும் பாவத்தைவிட மிகக் கொடியதாகும்.

அல்லாஹ் நம் அனைவரையும் இதிலிருந்து காப்பாற்றுவானாக .

அல்லாஹ் மிக அறிந்தவன்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!