அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, பிப்ரவரி 15, 2014

தந்தை செய்த உபகாரங்கள் என்ன?

அல்லாஹ்வின் திருபெயரால் ....
அஸ்ஸலாமு அழைக்கும் !

இன்று நடக்ககூடிய சில விஷயங்களைப் பார்க்கும்போது ரொம்ப மன வருத்தமாக இருக்கிறது. சில பிள்ளைகளின் விஷயத்தைப் பற்றி கூறுகிறேன் . பெற்றோர்கள் படாதபாடுப்பட்டு உழைக்கிறார்கள் , பிறகு அவர்களுக்கு முடியாத காலம் வரும்போது . அவர்கள் சோர்வு அடைந்துவிடுகிறார்கள் , அவர்களை பிள்ளைகள் கவனிக்க வேண்டிய நேரத்தில் , பிள்ளைகளின் அலச்சியப் போக்கும் , அக்கறை இல்லாமையும் இருக்கும் காலமாகிவிட்டது . சில பெற்றோர்கள் அனாதைபோல காட்சி அளிக்கும் கோலத்தை நாம் சில இடங்களில் காண முடிகிறது. பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் அருமை, பெருமை தெரியவில்லை , அவர்களுக்கு ஒரே குறிக்கோள் சொத்து " மட்டும்தான் அவர்களுக்கு தென்படுகிறது . குரானை பாருங்கள் ! அண்ணல் நபி [ஸல்] அவர்களின் போதனைகளைப் பாருங்கள்! இம்மையிலே என்ன ஆகும் என்பதை பிள்ளைகள் சிந்திக்க வேண்டும்  ! அல்லாஹ்வை அஞ்சி   கொள்ளுங்கள் !


உன் தந்தை உன் வாழ்விற்காக இரவு பகலாக பாடுபட்டு சம்பாதித்து உனக்கு ஆக வேண்டிய செலவுகளை அவரே செய்தார் . உன் தாய் உன்னை வயிற்றில் சுமந்திருந்த சமயம் ஏற்பட்ட வைத்திய செலவையும்  நீ பிறக்கும் பொழுதும் , பிறந்த பிறகும்  ஏற்பட்ட வைத்திய செலவையும் உன் தந்தைதான் ஏற்றுக் கொண்டார் . உன்னுடைய உணவிற்கும் உடைக்கும்  இன்னும் ஆக வேண்டிய மற்ற செலவினங்களுக்கும்  அவர்தான் பாடுபட்டு சம்பாதித்தார் . நீ இடை இடையே சுகக்குறைவாக  இருந்த சமயம் அதற்க்கான வைத்திய செலவுகளை உன் தந்தைதான் பொறுபேற்றுக் கொண்டார்  .  நீர் சிறுவனாக இருந்த சமயம் உன்னை மகிழ்விப்பதற்காக  விளையாட்டுப் பொருள்களை வாங்கி வந்து உன்னை மகிழ்வித்ததும் உன் தந்தைதான்  . மேலும் உன்னை சந்தோஷப்படுவதர்க்காக வெளியில்  செல்லும் பொழுதெல்லாம் உன்னை அழைத்துச் சென்றார் . அவ்வாறு செல்லும்பொழுது  சில சமயங்களில் உன்னால் நடந்து செல்ல இயலாமலிருந்தது . அப்பொழுது அவர் உன்னைத் தூக்கிக்கொண்டு சென்றார் . பெருநாட்கள் வரும் பொழுதெல்லாம்  உனக்கு நல்ல நல்ல ஆட்களை வங்கித் தந்தார் . அது மட்டுமா ? அவர் கடை வீதிக்குச் சன்று வரும் சமயமெல்லாம்  உனக்கு ஏதேனும் தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு வந்து தந்தார் . மேலும் உன்னை மதரஸாவில்  ஓத வைத்து , பள்ளிகூடத்தில் படிக்க வைத்து இந்தளவு உன்னை ஆளாகியது உன் தந்தையல்லவா ? அது மட்டுமா ? உனக்கு திருமணத்திற்கு வேண்டிய செலவுக்காய்  செய்ததும் உன் தந்தைதானே ? உனக்காக இவ்வளவு சிரமங்களை ஏற்று உன்னை ஆளாக்கிய உன் தந்தையை  உன் வீட்டு வேலைக்காரனை விட கேவலமாக நினைகின்றாய்  . நம் அருமை நாயகம் ]ஸல் [ அவர்கள்  பெற்றோர்களுடன் நடந்தது கொள்ள வேண்டிய முறைகளையும் அவர்களுடைய மேன்மைகளையும்  அவர்களுடன் விரோதம் செய்து கொண்டால் என்னென்ன  தீமைகளுன்டாகும் என்பதைப் பற்றி எல்லாம்  பல தலைப்புகளில் மிகத் தெளிவாக  கூறியுள்ள ஹதீஸ்களை நன்றாக படித்துப் பார் . அவ்வாறு நீ படித்துப்  பார்த்தால்  நீ யார் ? உன் தந்தை யார் ? உன் தாய் யார் ? அவர்களின் அந்தஸ்து  உன்னிடத்தில் எப்படி இருக்க வேண்டும் ? என்பதைஎல்லாம்  தெளிவாக புரிந்துகொள்வாய்  . " உன்னுடைய பெற்றோர்கள்தான் சொர்க்கமும் , நரகமும் என்று கூறும்பொழுது  இதைவிட வேறு என்ன வேண்டும் ? அதாவது பெற்றோர்களுக்கு கட்டுப்பட்டு நடந்தால் சொர்க்கமும் , அவர்களுக்கு கட்டுப்படாமல்  நடந்தால் நரகமும் கிடைக்கும் என்பதுதான் இதனுடைய பொருள்.

குறிப்பு / மார்க்கத்திற்கு விரோதமான காரியங்களில் பெற்றோர்களுக்கு கட்டுபடுவதுக் கூடாது என்பதை மறந்து விடக் கூடாது.

அல்லாஹுதஆலா கூறுகிறான்

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும் படி உபதேசம் செய்தோம் , அவனுடைய தாய்  , வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே  அவனைப் பெற்றெடுக்கிறாள் ,[கர்ப்பத்தில்] அவனைப் சுமப்பதும், அவனுக்கு பால் மறக்கச் செய்வதும் [மொத்தம்] முப்பது மாதங்கள் ஆகும்  . அவன் வாலிபமாகி         , நாற்பது வயதை அடைந்ததும் "இறைவனே! நீ என் மீதும்   , என் பெற்றோர் மீதும் புரிந்த நி ஃ மத்துக்காக  [அருள் கொடைகளுக்காக ] நன்றி செலுத்தவும்  , உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய சாலிஹான நல்ல அமல்களைச்  செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக ! [இதில் எனக்கு உதவுவதற்காக ] என்னுடைய சந்ததியையும் சாலிஹானவர்கலாக [நல்லது செய்பவர்களாக] சீர்படுத்தியருள்வாயாக ! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்  , அன்றியும் நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக [உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக ] இருக்கிறேன்" என்று கூறுவான்.

இதுபோன்று துஆச் செய்யும் பிள்ளைகளாக ஆக வேண்டும் . பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அப்படி ஆக்க வேண்டும்!

சொர்க்கத்தில் குரான் ஓதும் பாக்கியம் யாருக்குக் கிடைத்தது ?

ஹஜ்ரத் ஆயிஷா [ரலி] அவர்கள் கூறுகிறார்கள் .. நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள் .. '' சொர்க்கத்திற்கு சென்றபோது அங்கு கிரா அத்  ஓதக்கூடிய சப்தத்தைக் கேட்டேன் ." நான் ,அந்த மனிதர் யார் ? என்று வினவியதற்கு அவர் ஹாரிஸ் இப்னு நுஃமான்  ' என்று பதில் வந்தது. அவர் தம் பெற்றோருக்கு எல்லா நிலைமைகளிலும் கித்மத் செய்தாரென்றும் மேலும் அவர்களுக்கு அடிபணிந்து நடந்தாரென்றும்  கூறப்பட்டது." பிறகு நாயகம் [ஸல்] அவர்கள் கூறினார்கள் , பெற்றோர்களுக்கு கித்மத் செய்வது இப்படிப்பட்ட பொருளாக இருக்கிறது' , பெற்றோர்களுக்கு கித்மத் செய்வது இப்படிப்பட்ட பொருளாக இருக்கிறது ' என இதே விதம் மூன்று முறை மொழிந்தார்கள் .

நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றுள்ளார்கள் .. "பிள்ளையைக் குறித்து தாய் செய்யக் கூடிய துஆ மிக விரைவிலே ஏற்றுக்  கொள்ளப்படுகிறது .''  மேலும் மற்றோர் இடத்திலே கூறியிருக்கின்றார்கள் .."' தாய்க்கு செய்ய வேண்டிய [பணிவிடை ] கித்மத் செய்யுங்கள் . ஏனென்றால் அவளுடைய பாதங்களுக்கு கீழே சொர்க்கம் இருக்கிறது. "

"நபியே! உம்  இறைவன் என்னைத் தவிர வேறு யாரையும் வணங்க வேண்டாம் என்றும் , தாய், தந்தையருக்கு நன்றி செய்யும்படியும் கட்டளை இட்டுள்ளான்! அவர்களில் ஒருவரோ , இருவருமோ முதுமையை அடைந்தபோது உம்மிடமிருக்கும் அவர்களை 'சீ ' என்று [நிந்தனையாக] கூற வேண்டாம் , வெறுக்கவும் வேண்டாம் மேலும் அவர்களிடம் மிக மரியாதையாகவும்  , அன்புடனும் பணிவாகத் தாழ்ந்து நடப்பீராக ! மேலும் என் இறைவா ! குழந்தைப் பருவத்தில் என்னைப் பக்குவமாக அவர்கள் வளர்த்தது போல் அவர்கள் மீதும்  அன்பும் அருளும் புரிவாயாக!' என்று கூறுவீராக !
அல்குர் ஆன் ]

பெற்றோர்களின் சிறப்புகள் இன்னும் நிறைய இருக்கின்றன . பெற்றோர்களின் சிறப்பைப் பற்றி அண்ணல் நபி  [ஸல்] அவர்கள் நிறைய கூறியிருக்கிறார்கள் . பெற்றோர்களுக்கு மாறு செய்யும்  பிள்ளைகளைப் பற்றியும் , அவர்களுக்கு கிடைக்கும்  தண்டனைகளைப் பற்றியும் கூறியிருக்கிறார்கள் . நன்மையும் இருக்கிறது .தீமையும் இருக்கிறது எது வேண்டும் என்பதை நிதானமாக சிந்தித்து , பெற்றோர்களுக்கு  அதிக நன்மை செய்யும் பிள்ளைகளாக அல்லாஹ்  ஆக்கி அருள்வானாக  .
அல்லாஹ் மிக அறிந்தவன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!